ஆணியே புடுங்க வேணாம்! BSNL-ன் திடீர் அறிவிப்பு.. கடுப்பான கஸ்டமர்ஸ்.. வேற நெட்வொர்க்கிற்கு ஜம்ப்?

|

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பானது, பல காலமாக பிஎஸ்என்எல்-ன் கஸ்டமர்களாக இருப்பவர்களை கூட கடுப்பாக்கி உள்ளது என்றே கூறலாம்!

அதென்ன அறிவிப்பு? நெடுங்கால கஸ்டமர்களே கடுப்பாகும் அளவிற்கு என்ன நடந்துள்ளது? இந்த அறிவிப்பின் விளைவாக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடாபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற மற்ற நெட்வொர்க்கிற்கு மாறுவார்களா? இதோ விவரங்கள்:

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள "ஒத்திவைப்பு"!

அரசுக்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் (Telecom Operator) ஆன பிஎஸ்என்எல் அதன் 4ஜி அறிமுகத்தை (4G Launch) ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

முன்னதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.

தற்போது அது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவைகள் அறிமுகமாகும் என்று கூறப்பட்டு பின்னர், அது தாமதமாவது இது முதல் முறை அல்ல; கடந்த பல மாதங்களாகவே இது நடந்து வருகிறது!

சாபம் சார்.. யாரை விட்டுச்சு! செவ்வாய் கிரகத்திடம் சிக்கி சின்னாபின்னமான சீனாவின் கனவும், பணமும்!சாபம் சார்.. யாரை விட்டுச்சு! செவ்வாய் கிரகத்திடம் சிக்கி சின்னாபின்னமான சீனாவின் கனவும், பணமும்!

எது நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது?

எது நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது?

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அறிமுகமாகும் என்று கூறப்பட்ட 4ஜி வெளியீடானது, 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கு தள்ளப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இருப்பினும் இந்த தாமதத்திற்கு என்ன காரணம் என்கிற தகவலை பிஎஸ்என்எல் பகிரவில்லை. பிஎஸ்என்எல்-ன் இந்த திடீர் நடவடிக்கை இந்நிறுவனத்தின் சேவைகளை பெறும் வாடிக்கையாளர்களை, குறிப்பாக 4ஜி-க்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களை கடுப்பாக்கி உள்ளது!

வேற நெட்வொர்க்கிற்கு ஜம்ப் அடிக்கும் பிஎஸ்என்எல் கஸ்டமர்ஸ்?

வேற நெட்வொர்க்கிற்கு ஜம்ப் அடிக்கும் பிஎஸ்என்எல் கஸ்டமர்ஸ்?

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharthi Airtel) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களின் 4ஜி சேவைகளுக்கு போட்டியாக இருக்க கூடாது என்பதற்காகவே பிஎஸ்என்எல் 4ஜி அறிமுகம் செய்யப்படவில்லை என்கிற கூற்று நிலவி வந்தது.

தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவைகள் (5G Services) அறிமுகமாகி விட்டதால், உடனே பிஎஸ்என்எல்-ன் 4ஜி கதவுகள் திறக்கப்படும் என்று எதிர்பார்த்த வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதன் விளைவாக அவர்கள் மற்ற நெட்வொர்க்கிற்கு இடம்பெறும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது.

இது பிளான் இல்ல.. லைஃப் டைம் செட்டில்மென்ட்! சிங்கிள் BSNL ரீசார்ஜ்ஜில் 790GB டேட்டா, 400 டேஸ் வேலிடிட்டி!இது பிளான் இல்ல.. லைஃப் டைம் செட்டில்மென்ட்! சிங்கிள் BSNL ரீசார்ஜ்ஜில் 790GB டேட்டா, 400 டேஸ் வேலிடிட்டி!

ஏன் இவ்வளவு இழுத்தடிப்பு!

ஏன் இவ்வளவு இழுத்தடிப்பு!

நாட்டில் 4ஜி சேவைகளை அறிமுகம் செய்ய உள்நாட்டு தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்துமாறு. இந்திய அரசாங்கம் பிஎஸ்என்எல் நிறுவனத்தை கேட்டு கொண்டது.

உண்மையில் இதுவொரு நல்ல கோரிக்கை தான் என்றாலும் கூட, இது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பல வகையான தாமதங்கள் மற்றும் பிரச்சனைகளை கொண்டு வந்தது.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு, டிசிஎஸ் (TCS - Tata Consultancy Services) நிறுவனத்தின் உதவி கிடைக்கும் வரையிலாக, "பிஎஸ்என்எல் 4ஜி அறிமுகம்" என்பது ஒரு பெரிய கனவாகவே இருந்தது.

கடந்த சில மாதங்களாக, எல்லாமே சரியாக போய்க்கொண்டு இருந்த நிலைப்பாட்டில் தான், பிஎஸ்என்எல்-ன் 4ஜி அறிமுகம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

யாருமே இல்லாத கடைக்கு யாருக்காடா டீ ஆத்துற?

யாருமே இல்லாத கடைக்கு யாருக்காடா டீ ஆத்துற?

ஏற்கனவே படுதாமதமாகி விட்ட பிஎஸ்என்எல் 4ஜி (BSNL 4G) அறிமுகமானது மேலும் மேலும் தாமதமாகி கொண்டே போனால் BSNL-ன் 4ஜி வெளியீடானது முற்றிலும் அர்த்தமற்றதாகிவிடும். அதாவது "யாருமே இல்லாத கடைக்கு யாருக்காடா டீ ஆத்துற" என்கிற சூழ்நிலை ஏற்படும்.

அதுமட்டுமின்றி பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்ட நிவாரணப் பேக்கேஜ்களும் (Relief packages) கூட பயனற்றதாகிவிடும்!

Best Mobiles in India

English summary
BSNL Customers Are Not Happy Because Once Again BSNL 4G Launch Postponed to Second Half of 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X