ஆல் இந்தியன்ஸ் ஹேப்பி அண்ணாச்சி.. 2 வாரம் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி.. BSNL-ன் புதிய ஹோலி ஆபர்.. எந்த பிளானில்?
2026 ஆம் ஆண்டு ஹோலி பண்டிகை (Holi 2026) ஆனது மார்ச் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ஒரு புதிய ஹோலி ஆபரை (BSNL Holi Offer) அறிவித்துள்ளது.
என்ன ஆபர்? ஹோலி 2026-க்கான ஒரு சிறப்பு பண்டிகை கால சலுகையாக பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது அதன் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றின் மீது 14 நாட்கள் எக்ஸ்ட்ரா வேலிடிட்டியை (14 Days Extra Validity) அறிவித்து உள்ளது. அதாவது எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல், இலசவமாக 14 நாட்கள் கூடுதல் செல்லுபடியாகும் காலத்தை அறிவித்துள்ளது.

எந்த திட்டத்தில்? பிஎஸ்என்எல் அதன் ரூ.997 திட்டத்தின் மீது தான் கூடுதலாக 14 நாட்கள் இலவச வேலிடிட்டியை அறிவித்துள்ளது. இந்த மூலம் ஏற்கனவே 150 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் ரூ.997 திட்டமானது, தற்போது இலவசமாக சேர்க்கப்பட்டுள்ள 14 நாட்கள் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி உடன் சேர்த்து - மொத்தம் 164 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்குகிறது.
இந்த ஆபர் இன்னும் எத்தனை நாட்களுக்கு கிடைக்கும்? பிஎஸ்என்எல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) ஆனது எக்ஸ் (X) தளம் வழியாக பகிர்ந்துள்ள தகவலின் படி, ரூ.997 திட்டத்தின் மீதான 14 நாட்கள் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி ஆபர் ஆனது மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 31, 2026 வரை செல்லுபடியாகும்.
பிஎஸ்என்எல் ரூ.997 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது? இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஆக முன்னதாக இது மொத்தம் 300ஜிபி அளவிலான மொத்த டேட்டாவை வழங்கியது. தற்போது 14 நாட்கள் என்கிற கூடுதல் வேலிடிட்டியின் கீழ் 28ஜிபி சேர்த்து மொத்தம் 328ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.
டேட்டா நன்மையுடன் சேர்த்து இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ஆபர் மீதும் மற்றும் ரூ.997 திட்டத்தின் நன்மைகள் மீதும் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், பிஎஸ்என்எல் ஆப் அல்லது நம்பகமான மற்ற மூன்றாம் தரப்பு ஆப்களின் வழியாக இதை ரீசார்ஜ் செய்யலாம். முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஆபர் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையும்.
இதேபோல முன்னதாக பாரத் கனெக்ட் 26 பிளான் (Bharat Connect 26 Plan) என்கிற ஆபர் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இது கடந்த 2026 பிப்.24 ஆம் தேதி உடன் முடிவுக்கும் வந்தது. ஸ்பெஷல் ரீசார்ஜ் ஆக அறிமுகம் செய்யப்பட்ட பாரத் கனெக்ட் 26 பிளான் ஆனது பிப்ரவரி 24, 2026 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் எக்ஸ் தளம் வழியாக பலமுறை அறிவித்து வந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ரீசார்ஜ் செய்ய கிடைத்த ரூ.2626 திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, இது ஒரு நாளைக்கு 2.6ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். அதாவது முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் மொத்தம் 949ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். டெய்லி டேட்டா ஒதுக்கீடு தீர்ந்தவுடன், இணைய வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும். டேட்டாவுடன் சேர்த்து, இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களும், மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களும் கூட அணுக கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








