ரூ.200 விலைக்குள் தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் வேணுமா? அப்போ BSNL தான் பெஸ்ட்.!

|

பட்ஜெட் போட்டு வழக்கை நடத்தும் மக்களுக்கு ரீசார்ஜ் செய்வது என்பது கடுப்பான விஷயமாக மாறிவிட்டது. காரணம், சமீபத்தில் டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை வெகுவாக உயர்ந்துவிட்டன. இதனால், குறைந்த விலையில் சிறந்த நன்மையை வழங்கிக் கொண்டிருந்த திட்டங்கள் கூட, இப்போது பட்ஜெட்டிற்குள் கிடைப்பதில்லை. கடுப்பான வாடிக்கையாளர்கள், இப்போது BSNL பக்கம் அவர்களின் கவனத்தை மாறியுள்ளனர்.

ரூ.200 விலைக்குள் கிடைக்கும் பெஸ்டான BSNL ரீசார்ஜ்

ரூ.200 விலைக்குள் கிடைக்கும் பெஸ்டான BSNL ரீசார்ஜ்

காரணம், இப்போது மிகவும் குறைந்த விலையில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையுடன் பெஸ்டான ரீசார்ஜ் திட்டங்களை BSNL மட்டுமே ரூ.200 விலைக்குள் வழங்குகிறது. ஆம், வெறும் ரூ.200 விலைக்குள் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையுடன், அழைப்பு நன்மை மற்றும் SMS நன்மை போன்றவற்றை கம்மி விலையில் BSNL இப்போது வழங்கி வருகிறது. ரூ.200 விலைக்குள் கிடைக்கும் பெஸ்டான திட்டங்களின் நன்மைகள் என்ன என்பதை விளக்கமாகப் பார்க்கலாம்.

கம்மி விலையில் தினசரி 2ஜிபி டேட்டா வேண்டுமா?

கம்மி விலையில் தினசரி 2ஜிபி டேட்டா வேண்டுமா?

நீங்கள் மலிவு விலையில் தினசரி 2ஜிபி டேட்டா ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேடுகிறீர்களானால், BSNL என்ன வழங்குகிறது என்பதை நீங்கள் நிச்சயமாகப் பார்க்க வேண்டும். அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்காகப் பல திட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் குறிப்பாக பட்ஜெட் பிரியர்களைக் கவனத்தில் கொண்டு BSNL சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது.

இப்படி ஒரு டபுள் ட்ரம் வாஷிங் மெஷினா? Xiaomi அறிமுகம் செய்த MIJIA பார்ட்டிஷன் வாஷிங் மெஷின்!இப்படி ஒரு டபுள் ட்ரம் வாஷிங் மெஷினா? Xiaomi அறிமுகம் செய்த MIJIA பார்ட்டிஷன் வாஷிங் மெஷின்!

BSNL வழங்கும் ரூ.187 ரீசார்ஜ் திட்டம்

BSNL வழங்கும் ரூ.187 ரீசார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.187 விலையில் ஒரு திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், வாடிக்கையாளர்களுக்குத் தினசரி 2ஜிபி டேட்டாவை நிறுவனம் வழங்குகிறது. இது ஒரு லோ-எண்டு திட்டம் என்பதால், நிச்சயமாக, செல்லுபடியாகும் காலம் குறுகியதாக இருக்கும் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியுடன் வருகிறது.

அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் SMS கூட இதில் இருக்கா?

அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் SMS கூட இதில் இருக்கா?

இந்த ரூ.187 ரீசார்ஜ் திட்டத்தில் வெறும் டேட்டா நன்மை மட்டுமே கிடைக்கும் என்று தவறாக நினைத்துவிடாதீர்கள். இந்த திட்டம் உங்களுக்குத் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குவதோடு, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையையும் வழங்குகிறது. இத்துடன் தினசரி 100 SMS நன்மையையும் வழங்குகிறது. இத்துடன் BSNL ட்யூன்களின் தொகுப்பும் கிடைக்கிறது. இந்த இலவச நன்மைகள் வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்களுக்கு கிடைக்கும்.

200 ரூபாய்க்குள் கிடைக்கும் திட்டங்கள்

200 ரூபாய்க்குள் கிடைக்கும் திட்டங்கள்

இன்று நீங்கள் BSNL இலிருந்து வாங்கக்கூடிய பல 28 நாட்கள் திட்டங்கள் உள்ளன. இருப்பினும், அந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு செலவுகள் மற்றும் அட்டவணையில் பல்வேறு நன்மைகளோடு வருகின்றன. உங்கள் தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான திட்டத்தைக் குறைந்த விலையில் BSNL பட்டியலில் இருந்து நீங்கள் தேர்வு செய்யலாம். இதிலிருந்து 200 ரூபாய்க்குள் கிடைக்கும் திட்டத்தை உங்களுக்காகச் சுட்டிக்காட்டியுள்ளோம்.

அடடே சூப்பர்! 5G-க்கான கட்டணம் இவ்வளவு தானா? 5ஜி யூஸ் பண்ண புது சிம் வாங்க வேண்டுமா?அடடே சூப்பர்! 5G-க்கான கட்டணம் இவ்வளவு தானா? 5ஜி யூஸ் பண்ண புது சிம் வாங்க வேண்டுமா?

BSNL திட்டங்கள் மட்டும் விலை குறைவாக இருக்கிறதா? ஏன்?

BSNL திட்டங்கள் மட்டும் விலை குறைவாக இருக்கிறதா? ஏன்?

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 28 நாட்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. ஆனால், இந்த திட்டங்கள் அதிக விலை கொண்டதாக இருக்கிறது. எனவே உங்கள் தேர்வை கவனமாகச் செய்யுங்கள். பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ரூ.200க்கு கீழ் சிறந்த 2GB தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. மற்ற தனியார் டெலிகாம் ஆபரேட்டர்களுடன் BSNL திட்டத்தை ஒப்பிடும்போது இதன் விலை குறைவாக உள்ளது.

BSNL திட்டங்கள் மலிவாக இருப்பதற்கு இது தான் காரணமா?

BSNL திட்டங்கள் மலிவாக இருப்பதற்கு இது தான் காரணமா?

இதற்கான முக்கிய காரணம், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அவர்களின் சேவையை 4ஜி வேகத்தில் வழங்கி வருகின்றனர். ஆனால், BSNL நிறுவனம் இன்னும் 4ஜி சேவைக்குள் கால் பாதிக்காத நிலையில் இருப்பதனாலும், BSNL ரீசார்ஜ் திட்டங்கள் 3ஜி வேகத்தில் செயல்படுவதனாலும் தான் அரசாங்கத்திற்குச் சொந்தமான திட்டங்கள் மிகவும் விலை குறைந்ததாக இருக்கிறது. BSNL இந்த ஆண்டின் இறுதிக்குள் 4ஜி சேவையை விரிவாக நாடு முழுவதும் துவங்கும் என்று அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL 2GB Daily Data Prepaid Plan Under Rs 200

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X