Vi SIM இருக்கா? ரூ.349 போதும்.. வாய்ஸ் கால்கள், 1.5ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா.. இதுதான் வேலிடிட்டி!
விஐ (Vi) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் சிம் கார்டு வைத்து இருக்கும் கஸ்டமர்கள் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஓடிடி சந்தாவுடன் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ் சலுகைகளை பெற வேண்டுமானால், இப்போது பார்க்க இருக்கும் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். விஐ கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கும் கூடுதல் டேட்டா சலுகைகளையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது.
விஐ ரூ.349 திட்ட விவரங்கள் (Vi Rs 349 Plan Details): இந்த விஐ ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் வழக்கமாக கிடைக்கும் சலுகைகளான அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்பட்டு உள்ளது.

அதேபோல தினமும் 1.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவை தீர்த்துவிட்டால், 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா குறைக்கப்படும். இந்த 1.5 ஜிபி டேட்டாவானது 4ஜி வேகத்தில் கிடைக்கும். ஏனென்றால், விஐ நிறுவனத்தின் 5ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கும்.
இந்த டேட்டாவுக்கு மாதாந்திர கேப் இருக்கிறது. கூடுதல் டேட்டா சலுகைகளையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது. அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data) சலுகை கிடைக்கிறது. நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் கூடுதல் செலவு இல்லாமல், இலவமாக டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இது தினசரி டேட்டாவில் கழிக்கப்படாது.
மேலும், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகை கொடுக்கப்பட்டு, திங்கள் முதல் வெள்ளி வரையில் தினசரிக்கு ஒதுக்கப்பட்ட டேட்டாவில் மிஞ்சம் இருக்கும் டேட்டாவை சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பயன்படுத்தி கொள்ள அனுமதி கொடுக்கப்படுகிறது. இறுதி டேட்டா சலுகையாக டேட்டா டிலைட்ஸ் (Data Delights) கிடைக்கிறது.
அதாவது, மாதத்துக்கு 2 ஜிபி டேட்டா எமர்ஜென்சி டேட்டாவாக கொடுக்கப்படும். இதை விஐ ஆப் (Vi App) வழியாக கஸ்டமர்கள் கிளைம் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த டேட்டா சலுகை போக விஐ மூவிஸ் & டிவி ஆப் (Vi Movies & TV App) அணுகல் கிடைக்கிறது. இதை மொபைல் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் பயன்படுத்தி கொள்ள முடியும்.
விஐ மொபைல் நம்பரை வைத்து லாகின் செய்து கொள்ளலாம். இதில் எம்எக்ஸ் பிளேயர் உள்ளிட்ட கூடுதல் ஓடிடி ஆப்களும் கிடைக்கும். லைவ் டிவி சேனல்களும் கொடுக்கப்படும். இந்த சலுகைகளை ரூ.349 விலைக்கு விஐ நிறுவனம் கொடுத்து உள்ளது. ஒருவேளை வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் 5ஜி மற்றும் 4ஜி டேட்டா வேண்டுமானால் அடுத்த திட்டம் சரியாக இருக்கும்.
விஐ ரூ.399 திட்ட விவரங்கள் (Vi Rs 399 Plan Details): இந்த திட்டத்துக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், தினசரி லிமிட் இல்லாமல் டேட்டா கிடைக்கும். அதாவது, அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 4ஜி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) ஓடிடி சந்தா கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








