Home
News

Airtel SIM வச்சி செஞ்சிருச்சு.. மாதம் ரூ.155 க்கு 365 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 3600 எஸ்எம்எஸ்!

டெலிகாம் கஸ்டமர்களிடையே வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் (Voice Only Plans) நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த திட்டங்கள் மலிவான விலைக்கு கிடைக்காது. ஆனால், வேலிடிட்டி அதிகமாக கிடைக்கும். சிம் ஆக்டிவ் மற்றும் வாய்ஸ் கால்களை செய்ய விரும்பும் கஸ்டமர்களுக்கு ஏற்ற திட்டங்களாக இருக்கின்றன. இதில் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1849 திட்டம் அதிகம் ரீசார்ஜ் செய்யப்படும் திட்டமாக இருக்கிறது.

ஏனென்றால், இதில் 12 மாதங்களுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மொத்த விலை ரூ.1849 ஆக இருக்கிறது. ஆனால், ஒரு மாதத்துக்கு எவ்வளவு செலாவகிறது என்பதை வகுத்து பார்த்தால் வெறும் ரூ.155 மட்டுமே தேவைப்படுகிறது. இந்த விலையில் மாதாந்திர திட்டம் கிடைக்காது. ஆனால், 12 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்யும்போது, அந்த விலைக்கு பெறலாம்.

Airtel SIM வச்சி செஞ்சிருச்சு.. மாதம் ரூ.155 க்கு 365 நாட்கள்!

ஏர்டெல் ரூ.1849 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1849 Prepaid Plan): சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்களை கொடுக்கும் திட்டமாக இருந்தது. இப்போது, கூடுதல் சலுகைகளுடன் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. வழக்காக கிடைக்கும் சலுகைகளை பார்க்கையில், 12 மாதங்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) கொடுத்து உள்ளது.

லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். இந்த 12 மாதங்கள் முழுவதும் 3600 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். மேலும், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தா வழங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு கிடைக்கும் வேலிடிட்டி போலவே இந்த சந்தாவையும் 12 மாதங்கள் முழுவதும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

மற்ற ப்ரீபெய்ட் திட்டங்களை போலவே ப்ரீ ஹேலோ டியூன்ஸ் (Free Hello Tunes) கிடைக்கிறது. 30 நாட்களுக்கு ஒரு டியூனை ப்ரீயாக வைத்து கொள்ளலாம். இன்கம்மிங் கால்கள் மற்றும் இன்கம்மிங் எஸ்எம்எஸ்களில் இருக்கும் ஸ்பேம்களை டிடெக்ட் செய்து கொள்ள லைவ் ஸ்பேம் அலெர்ட் (Live Spam Alert) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் மற்ற சலுகைகள் கிடைக்காது.

அதாவது, ஓடிடி சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா போன்ற சலுகைகள் கொடுக்கப்படாது. தினசரி டேட்டாவுடன் வருடாந்திர திட்டத்தை ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டால், வழக்கம்போல ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் 2 ஜிபி டேட்டா தினசரிக்கு கிடைக்கும். அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொடுக்கப்படும்.

ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3599 Prepaid Plan): தினசரி டேட்டாவுடன் கிடைக்கும் வருடாந்திர திட்டமாக இது இருக்கிறது. ஆகவே, இதை பெறும் கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்கள் முழுவதும் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும்.

மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை வருடம் முழுவதும் செய்யலாம். அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தாவை பயன்படுத்தலாம். ப்ரீ ஹேலோ டியூன்ஸ் மற்றும் லைவ் ஸ்பேம் அலெர்ட் கிடைக்கும். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தாவும் கிடைக்கும். ஆனால், இதில் ப்ரீ ஓடிடி கன்டென்ட்கள் மட்டுமே அணுக கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 1849 Plan 365 Days Validity Unlimited Calls Every Prepaid Customers Need To Know This
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X