Home
News

ஜியோ ரூ.149 திட்டம் அறிமுகம்.. 90 நாட்களுக்கு ஓடிடி.. எத்தனை நாட்கள் வேலிடிட்டி.. என்னென்ன நன்மைகள்?

ஜியோ நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் ரூ.149 விலையில் கிரிக்கெட் டேட்டா பேக்கை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 149 prepaid plan)
ஜியோ கொண்டுவந்துள்ள ரூ.149 திட்டம் ஒரு டேட்டா பேக்கப் ஆகும். குறிப்பாக இதில் ரீசார்ஜ் செய்தால் 10ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் 30 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது ஜியோ திட்டம். அதேபோல் 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம். நேரலைப் போட்டிகளை ஸ்ட்ரீம் செய்யவும், கூடுதல் டேட்டா பெறவும் இந்த ஜியோ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜியோ ரூ.149 திட்டம் அறிமுகம்.. 90 நாட்களுக்கு ஓடிடி..

ஆனால் இந்த ரூ.149 திட்டம் ஆனது டேட்டா பேக் என்பதால், இதைப் பயன்படுத்த உங்களிடம் பின்னணியில் மற்றொரு செயலில் உள்ள ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும். குறிப்பாக 90 நாட்களுக்கு ஓடிடி மற்றும் 10ஜிபி டேட்டா இந்த திட்டம் கொடுப்பதால் இந்த திட்டத்தில் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். மேலும் இந்நிறுவனத்தின் ரூ.1799 மற்றும் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1799 prepaid plan) நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தாவை வழங்குகிறது. தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும்.

மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா இந்த திட்டத்துக்குக் கொடுக்கப்படுகிறது. பின்பு ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கொடுக்கப்படுகிறது. இதை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம்.

குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் வாய்ஸ் கால் (Unlimited Voice Call)
ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.149 திட்டம் அறிமுகம்.. 90 நாட்களுக்கு ஓடிடி..

ஜியோவின் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1199 prepaid plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் இந்த ஜியோ ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா வழங்கப்படும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 3GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் குறைக்கப்படும்.

மேலும் இந்த திட்டத்திலும் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கொடுக்கப்படுகிறது. மேலும் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவும் இதில் உள்ளது. இதை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால் (Unlimited Voice Call), தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio launches Rs.149 data pack plan: check validity and benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X