Home
News

Airtel-க்கு வந்த இடி.. ஒரு ரீசார்ஜ் ரூ.40 உயர்வு.. பழைய ரீசார்ஜ் நீக்கம்.. ஒரே நேரத்தில் 2 அதிரடி மாற்றங்கள்!

பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணம் சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது. அதிகமாக ரீசார்ஜ் செய்யப்படும் ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கியது மட்டுமல்லாமல், விலை உயர்வையும் ஒரே நேரத்தில் ஏர்டெல் செய்துள்ளது. இனிமேல் ரூ.40 அதிகமாக செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும். எந்த திட்டம் நீக்கப்பட்டுள்ளது? எந்த திட்டத்தில் விலை உயர்த்தப்பட்டுள்ளது?

டெலிகாம் நிறுவனங்கள் சத்தமில்லாமல், கட்டண உயர்வை செய்து வருகின்றன. நேரடியாக விலையை உயர்த்தாமல், மலிவு விலைக்கு கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்களை மறைமுமாக நீக்கி அதிக விலை கொண்ட ரீசார்ஜ் திட்டங்களுக்கு கஸ்டமர்களை தள்ளிவருகின்றன. இப்போது, ஏர்டெல் நிறுவனம் முக்கிய திட்டத்தை நீக்கியது மட்டுமல்லாமல், விலை உயர்வையும் ஒரே நேரத்தில் செய்துள்ளது.

Airtel-க்கு வந்த இடி.. ஒரு ரீசார்ஜ் ரூ.40 உயர்வு.. ரீசார்ஜ் நீக்கம்!

ஜியோ நிறுவனத்துக்கு கடும் போட்டியாக கொடுக்கப்பட்டுவந்த ஏர்டெல் ரூ.799 திட்டம் நீக்கம் (Airtel Rs 799 Plan Removed) செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஏர்டெல் ரூ.859 திட்டத்தில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது, ரூ.40 அதிகமாக ரூ.899 விலைக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இருப்பினும், சலுகைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன. ஆனால், ஏர்டெல் போர்டலில் குறிப்பிடப்படவில்லை.

ஏர்டெல் ரூ.899 திட்ட விவரங்கள் (Airtel Rs 899 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

மேலும், ப்ரீ ஹேலோ டியூன்ஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகளை மட்டுமே ஏர்டெல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் போன்ற சலுகைகள் குறிப்பிடப்படவில்லை. முன்னதாக கொடுக்கப்பட்ட ஏர்டெல் ரூ.859 திட்டத்தில் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் மற்றும் ரிவார்ட்ஸ் மினி சந்தா (RewardsMini Subscription) கொடுக்கப்பட்டது.

ஏர்டெல் ரூ.859 திட்ட விவரங்கள் (Airtel Rs 859 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டது. இந்த நாட்களில் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் நாளொன்றுக்கு கிடைத்தது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்பட்டது. அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம், ரிவார்ட்ஸ் மினி சந்தா, ப்ரீ ஹேலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகைகளும் கிடைத்தன.

இந்த சலுகைகள் இப்போது ரூ.899 விலைக்கு கிடைக்கின்றன. ஆகவே, ஒரே சலுகைகளை ரூ.40 விலை அதிகமாக கொடுத்து பெற்று கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கூடுதல் சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தில் சேர்க்க வாய்ப்புள்ளது. ஓரிரு நாட்களில் தெரியவரும். மேலும், நீக்கம் செய்யப்பட்ட ஏர்டெல் ரூ.799 திட்டத்தில் அதிக சலுகைகள் கொடுக்கப்பட்டன.

ஏர்டெல் ரூ.799 திட்ட விவரங்கள் (Airtel Rs 799 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 77 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைத்தன. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 1.5 ஜிபி டேட்டா கிடைத்தது. 64 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டா மற்றும் ப்ரீ ஹெலோ டியூன்ஸ் (Free Hello Tunes) கிடைத்தது.

மேலும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) கிடைத்தது. சோனிலிவ் (Sony LIV), அமோசான் எம்எக்ஸ் பிளேயர் (Amazon MX Player), வ்ரோட் (Vrott), சன்னா ஜோர் (Chana Jor), ரன்ன் டிவி (Runn TV), டிஸ்ட்ரோ டிவி (Distro TV) ஆகிய ஓடிடிகளின் ப்ரீ வெர்ஷன் கொடுக்கப்பட்டது. இவ்வளவு சலுகைகளுடன் கிடைத்துவந்த இந்த திட்டம் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Tariff Hike Rs 859 Plan Price Raises to Rs 899 With Revised Offer What Customers Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X