மனச கல்லாக்கிகோங்க.. 5G-க்காக செய்த செலவை சமாளிக்க Jio, Airtel திட்டங்களின் மீது கட்டண உயர்வு! இனிமேல்?

|

உங்களில் சிலர் இதை முன்பே யூகித்து இருக்கலாம். அதாவது, இந்தியாவில் 5ஜி சேவைகள் (5G Service) அறிமுகமாகும் போதே ரிலையன்ஸ் ஜியோ (Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Airtel) நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்கள் மீது கண்டிப்பாக கட்டண உயர்வு (Tariff Hike) அறிவிக்கப்படும் என்பதை உங்களில் சிலர் முன்பே யூகித்து இருக்கலாம்.

அந்த யூகம் உண்மையாகி உள்ளது. அது தொடர்பான விவரங்கள் இதோ:

உலகிலேயே அதிகம்.. உலகிலேயே மலிவு.. இரண்டுமே இந்தியா தான்!

உலகிலேயே அதிகம்.. உலகிலேயே மலிவு.. இரண்டுமே இந்தியா தான்!

உலகிலேயே மிகப்பெரிய ப்ரீபெய்டு மொபைல் சந்தாதாரர்களை / வாடிக்கையாளர்களை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதேபோல உலகிலேயே மிகவும் மலிவான கட்டணத்தில் டேட்டாவை வழங்கும் நாடுகளிலும் கூட இந்தியா உள்ளது.

இதனால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் குறைந்த கட்டணத்தால் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குவதால் இந்திய டெலிகாம் ஆப்ரேட்டர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆணியே புடுங்க வேணாம்! BSNL-ன் திடீர் அறிவிப்பு.. கடுப்பான கஸ்டமர்ஸ்.. வேற நெட்வொர்க்கிற்கு ஜம்ப்?ஆணியே புடுங்க வேணாம்! BSNL-ன் திடீர் அறிவிப்பு.. கடுப்பான கஸ்டமர்ஸ்.. வேற நெட்வொர்க்கிற்கு ஜம்ப்?

குறிப்பாக 5ஜி-க்காக

குறிப்பாக 5ஜி-க்காக "தாறுமாறாக" செலவு செய்த பிறகு!

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டுமே ஏற்கனவே எக்கச்சக்கமான பணத்தை, தங்களது 5ஜி சேவைக்காக செலவு (Invest) செய்துள்ளது. மேலும் அடுத்த சில மாதங்களுக்கு கணிசமான பணத்தையும் செலவழிக்க உள்ளன.

இருப்பினும், 5ஜி வழியாக அடுத்த பல மாதங்களுக்கு மிகவும் குறைவான வருமானமே (Income) வரும் என்பதை இவ்விரு நிறுவனங்களும் நன்றாக அறியும்.

ஏனென்றால், 5ஜி நெட்வொர்க் ஆனது ஒரு முக்கியமான தேவையாக மாறுவதற்கு இன்னும் நிறைய காலம் ஆகலாம். அதே போல 5ஜி-க்கான சுற்றுச்சூழல் அமைப்பும் கூட மெல்ல மெல்லவே வளரும்.

4ஜி யூசர்களின் பாக்கெட்டில் கை வைக்கும் ஜியோ, ஏர்டெல்!

4ஜி யூசர்களின் பாக்கெட்டில் கை வைக்கும் ஜியோ, ஏர்டெல்!

5ஜி சேவைகளுக்காக செய்த மற்றும் செய்யப்போகும் செலவை சமாளிக்க இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு இருக்கும் ஒரே வழி - 4ஜி வாடிக்கையாளர்களை (4G Customers) வைத்து அதிக பணம் சம்பாதிப்பதே ஆகும்.

அதாவது நஷ்டங்களில் இருந்து அல்லது அதிக லாபத்திற்கு பதிலாக மிகவும் குறைவான லாபத்தை பெறுவதில் இருந்து தப்பிக்க, ப்ரீபெய்ட் கட்டண உயர்வுதான் தான், டெலிகாம் நிறுவனங்களுக்கு இருக்கும் ஒரே வழி ஆகும்.

2023 மார்ச் 31-க்குள் இதை பண்ணிடுங்க.. ஆதார் அட்டை வைத்து இருப்போருக்கு அரசாங்கம் விதித்துள்ள புதிய கெடு!2023 மார்ச் 31-க்குள் இதை பண்ணிடுங்க.. ஆதார் அட்டை வைத்து இருப்போருக்கு அரசாங்கம் விதித்துள்ள புதிய கெடு!

எவ்வளவு சதவிகிதம் அதிகரிக்கும்?

எவ்வளவு சதவிகிதம் அதிகரிக்கும்?

கடந்த சில வாரங்களாகவே, பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரண்டுமே 10% என்கிற கட்டண உயர்வை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

தற்போது 100 க்கும் மேற்ப்பட்ட இந்திய நகரங்களில் 5ஜி சேவைகள் அறிமுகமாகி விட்டது மற்றும் இந்தியா முழுவதும் கிராமப்புறங்களில் கூட 4ஜி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதால், 4ஜி ரீசார்ஜ் திட்டங்கள் மீதான கட்டண உயர்வு கூடிய விரைவில் நடக்கும் என்பது போல் தெரிகிறது.

ஒரு வருடம் ஆகிவிட்டது!

ஒரு வருடம் ஆகிவிட்டது!

நினைவூட்டும் வண்ணம், கடைசியாக கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது கடந்தது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான். அதாவது கடைசியாக ரீசார்ஜ் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது.

ஆக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களிடம் இருந்து எப்போது வேண்டுமானாலும் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்.

இதற்கிடையில் 5ஜி அறிமுகம் குறித்து வாயே திறக்காத வோடபோன் ஐடியாவானது, தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் விலைகளை மறைமுகமாக குறைத்து வருகிறது. இதென்ன தந்திரம் என்பதை வோடாபோன் ஐடியா நிறுவனம் மட்டுமே அறியும்!

Best Mobiles in India

English summary
Be Ready To Face Prepaid Recharge Tariff Hike Jio Airtel To Balance 5G Expenses Using 4G customers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X