Jio அம்பானியின் ஆல்-இன்-ஒன் பிளான்.. ரூ.500 க்கு அன்லிமிடெட் 5G உடன் 13 OTT, வாய்ஸ், SMS, Google ஏஐ!
முகேஷ் அம்பானி தலைமையிலான, இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, அதன் வாடிக்கையாளர்களுக்கு மல்டி-ஓடிடி சலுகைகளை வழங்கும் பல ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டுள்ளது. அதாவது ஒரே திட்டத்தின் கீழ் பல வகையான ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்களை வழங்கும் திட்டங்களை கொண்டுள்ளது.
அதிலொரு திட்டம் தான் - ஜியோவின் ரூ.500 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான். இன்னும் சொல்லப்போனால் இது ஜியோவின் பெஸ்ட் மல்டி ஓடிடி பிளான் என்றே கூறலாம். ஜியோவின் ரூ.500 திட்டம் ஆனது 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் மட்டுமே வருகிறது. ஆனால் இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் இந்த திட்டத்தின் ஓடிடி நன்மைகள் தான் - இந்த திட்டத்தின் ஹைலைட்டே!

சற்றே குறுகிய வேலிடிட்டி உடன் வருவதால், இது விலை உயர்ந்த திட்டமாக தெரியலாம். ஆனால் பொழுதுபோக்கு சலுகைகளை தேடும் நுகர்வோர்களை பொறுத்தவரை இது "அள்ளிக்கோங்க" என்று கூறும்படியான நன்மைகளை வழங்கும் ஒரு திட்டமாகும். ஏனென்றால் இது 13 பிரபலமான ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்களுடன் வருகிறது; டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்குவதால் இது அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மைக்கும் தகுதி பெறுகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு சலுகையின் ஒரு பகுதியாக - ரிலையன்ஸ் ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னரே குறிப்பிட்டபடி இது 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது.
இதன் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளுடன் சேர்த்து டெய்லி 2ஜிபி டேட்டா என மொத்தம் 56ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இது 50ஜிபி இலவச ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) ஸ்டோரேஜை வழங்கும்.
இதனுடன், பயனர்கள் 2000ஜிபி கூகுள் கிளவுட் ஸ்டோரேஜையும், ரூ.35,100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ திட்டத்தின் 18 மாத இலவச சந்தாவையும் பெறுவார்கள். முன்னரே குறிப்பிட்டபடி இது டெய்லி 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குவதால், இதன் கீழ் வரம்பற்ற 5ஜி டேட்டா நன்மையும் அணுக கிடைக்கும்
இப்போது மிக முக்கியமான நன்மைக்கு வருவோம் - அதாவது ஓடிடி நன்மைக்கு வருவோம். ஜியோவின் ரூ.500 திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் - யூட்யூப் பிரீமியம் (YouTube Premium), பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Prime Video Mobile Edition) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் டிவி / மொபைல் (JioHotstar TV/Mobile) ஆகிய ஓடிடிகளுக்கான அணுகலை பெறுவார்கள்.
பின்னர் ஜியோடிவி (JioTV) ஆப் வழியாக சோனிலைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery Plus), சன்நெக்ஸ்ட் (SunNXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi), சௌபால் (Chaupal), பேன்கோட் (FanCode) மற்றும் ஹொய்ச்சொய் (HoiChoi) ஆகிய தளங்களுக்கான அணுகல்கள் என மொத்தம் 13 ஓடிடி தளங்களுக்கான அணுகல்கள் கிடைக்கும்
டெய்லி 2ஜிபி டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் அதாவது FUP என்கிற நியாயமான பயன்பாட்டுக் கொள்கைக்கு பின்னர் ரூ.500 திட்டத்தின் டேட்டா ஸ்பீட் ஆனது 64 Kbps ஆக குறையும் என்பதும், ரூ.349 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆக்டிவ் ஆக உள்ள உள்ள அன்லிமிடெட் 5ஜி திட்டத்தைக் கொண்ட பயனர்களுக்கு மட்டுமே கூகுள் ஜெமினி சலுகை கிடைக்கும் என்று ரிலையன்ஸ் ஜியோ கூறியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications