Jio சிம் கார்ட்டை தூக்கி எறிந்த 20 லட்சம் பேர்.. அதுவும் ஒரே மாசத்துல.. காரணத்தை சொன்னா நம்புவீங்களா?

|

டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல; வழக்கமாக நடப்பது தான், இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இது ஒவ்வொரு மாதமும் நடக்கும் மற்றும் அது தொடர்பான புள்ளி விவரங்கள் டிராய் (TRAI) வழியாக ஒரு அறிக்கையாகவும் வெளியாகும்.

அதாவது ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் எவ்வளவு வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளன? எத்தனை பேரை இழந்துள்ளன? அதற்கு என்ன காரணம்? என்கிற விவரங்கள் டிராய் அறிக்கைகள் (TRAI Report) வழியாக வெளிப்படுத்தப்படும்.

அம்பானி தலையில் கல்லை தூக்கிப்போட்ட சமீபத்திய அறிக்கை!

சமீபத்தில் வெளியான டிராய் அறிக்கையானது முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) தலையில் கல்லை தூக்கிபோடும்படி உள்ளது என்றே கூறலாம். ஏனென்றால், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கீழ் இருந்து 20 லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேறி உள்ளனர்.

Jio சிம் கார்ட்டை தூக்கி எறிந்த 20 லட்சம் பேர்.. என்ன காரணம்?

ஜியோவிற்கு இது மிகப்பெரிய கெட்ட செய்தி ஆகும். ஏனென்றால் ஜியோவை விட்டு வெளியேறிய 20 லட்சம் சந்தாதாரர்களுமே ஆக்டிவ் யூசர்கள் (Active Users) ஆவர்.

அறியாதோர்களுக்கு, ஆக்டிவ் யூசர்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், ஒரு குறிப்பிட்ட சேவையை தவறாமல் பயன்படுத்துபவர்கள் என்று அர்த்தம்!

புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!

உள்ளே வந்த 14 லட்சத்தை விட.. வெளியே போன 20 லட்சம் தான் முக்கியம்!

20 லட்சம் ஆக்டிவ் யூசர்கள் வெளியேறிய அதே மாதத்தில் (நவம்பர் 2022) சுமார் 14 லட்சம் வயர்லெஸ் சந்தாதாரர்கள் (Wireless Subscribers) ஜியோ சேவையின் கீழ் இணைந்துள்ளனர்.

வயர்லெஸ் சந்தாதாரர்களை விட ஆக்டிவ் யூசர்கள் தான் மிகவும் முக்கியம். ஏனென்றால், ஒரு ஜியோ சிம் கார்ட்டை வாங்கிவிட்டால் மட்டுமே போதாது; அதை அவர் தொடர்ச்சியாக பயன்படுத்தினால் மட்டுமே ஜியோ நிறுவனத்திற்கு லாபம் கிடைக்கும். ஆக எப்படி பார்த்தாலும் - 20 லட்சம் ஆக்டிவ் யூசர்கள் என்பது உண்மையிலேயே பெரிய இழப்பு தான்!

20 லட்சம் பேர் ஜியோ சிம் கார்ட்டை "தூக்கிப்போட" என்ன காரணம்?

தரமான சேவைகளை வழங்குவதில் உள்ள குறைபாடுகளே, 20 லட்சம் ஆக்டிவ் யூசர்கள் ஜியோ சேவையை விட்டு வெளியேற காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த காரணம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. ஏனென்றால் ஓப்பன்சிக்னல் (Opensignal) வழியாக வெளியான சமீபத்திய அறிக்கை, கிடைக்கும்தன்மை (Availability) மற்றும் கவரேஜ் (Coverage) என்று வந்துவிட்டால் ஜியோவின் 4ஜி நெட்வொர்க்கை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்கிறது!

அதுமட்டுமின்றி, ஜியோவின் 4ஜி பயனர்களுக்கு எந்தவிதமான கூடுதல் கட்டணமும் இன்றி ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளும் அணுக கிடைக்கிறது!

டேட்டா லிமிட்டே கிடையாது.. எவ்ளோ வேணா யூஸ் பண்ணிக்கலாம்.. ரூ.400-க்குள் கிடைக்கும் BSNL-ன் சூப்பர் ரீசார்ஜ்!டேட்டா லிமிட்டே கிடையாது.. எவ்ளோ வேணா யூஸ் பண்ணிக்கலாம்.. ரூ.400-க்குள் கிடைக்கும் BSNL-ன் சூப்பர் ரீசார்ஜ்!

ஆப்பு ஜியோவிற்கு மட்டுமல்ல.. Vi மற்றும் BSNL-க்கும் தான்!

ஆம்! கடந்த நவம்பர் 2022-ல் ஆக்டிவ் யூசர்களை இழந்தது ரிலையன்ஸ் ஜியோ மட்டுமல்ல. விஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் வோடாபோன் ஐடியா மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் ஆகிய இரண்டுமே தத்தம் ஆக்டிவ் யூசர்களை இழந்துள்ளது.

வெளியான டிராய் அறிக்கையின்படி, வோடபோன் ஐடியாவும் கூட சுமார் 20 லட்சம் ஆக்டிவ் யூசர்களை இழந்துள்ளது. மறுகையில் உள்ள பிஎஸ்என்எல் 5 லட்சம் ஆக்டிவ் யூசர்களை இழந்துள்ளது.

ஆக்டிவ் யூசர்கள் குறைந்துகொண்டே போனால் என்ன ஆகும்?

ஒரு டெலிகாம் நிறுவனத்தின் கீழ் இருக்கும் ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போனால், குறிப்பிட்ட நிறுவனத்தின் ஏஆர்பியூ (ARPU), அதாவது "ஒரு பயனருக்கான சராசரி வருவாய்" (Average revenue per user) குறையும். இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை குறைக்கும் அல்லது பலவீனமாக்கும்.

BSNL கூட தப்பித்து விடும்.. ஆனால் Vodafone நிலைமை ரொம்ப பாவம்!

இந்த சறுக்கலை, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கண்டிப்பாக சமாளித்து விடும். முடிந்த வேகத்தில் 4ஜி சேவைகளை அறிமுகம் செய்யும் பட்சத்தில் பிஎஸ்என்எல் கூட, இந்த நிலைமையை சரிசெய்து விடும். ஆனால் வோடாபோன் ஐடியா என்ன செய்ய போகிறது என்றே தெரியவில்லை!

ஏனென்றால், வோடபோன் ஐடியா கடும் நிதிநெருக்கடியில் உள்ளது மற்றும் தற்போது வரையிலாக அதன் 5ஜி அறிமுகம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை!

Best Mobiles in India

English summary
Bad News For Mukesh Ambani Reliance Jio Lost 20 Lakhs Active Users What Is The Reason

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X