விஜய் நண்பன் பட காட்சி நிஜத்தில்: வாட்ஸ் ஆப் வீடியோகால் மூலம் பிரசவம்- நெழ்ச்சி சம்பவம்!

|

கொரோனா ஊரடங்கு மத்தியில் நண்பன் பட காட்சி போல் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் பிரசவம் நடந்துள்ளது. இதில் தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர். இந்த நிகழ்வு பலரையும் நெகிழ்வடையச் செய்துள்ளது.

நண்பன் திரைப்பட காட்சி

நண்பன் திரைப்பட காட்சி

நண்பன் திரைப்படத்தில் மாணவர்கள் இணைந்து பிரசவம் பார்ப்பது போல் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். அதில் சத்யராஜ் தனது மகளை பிரசவ வலியுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்வார் மழைக்காலம் என்பதால் ஆம்புலன்ஸ் வர முடியாத நிலையில் டாக்சியில் அழைத்து செல்வார்கள்.

வீடியோகால் மூலம் பிரசவம்

வீடியோகால் மூலம் பிரசவம்

அப்போது அவர்கள் சென்றுகொண்டிருந்த டாக்ஸியும் பழுது ஏற்பட்டு விடும். அந்த சூழ்நிலையில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருடன் இணைந்து சில மாணவர்கள் பிரசவம் பார்க்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். அவர்களுக்கு மருத்துவர் கதாபாத்திரத்தில் இருக்கும் இலியானா வீடியோகால் மூலம் வழிநடத்துவார். இதே காட்சி உண்மையில் நிகழ்ந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென பிரசவ வலிxொ

திடீரென பிரசவ வலிxொ

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஹனகல் பகுதியில் உள்ள கிட்டூர் சென்னம்மா எனும் சாலையில் வசித்து வருபவர் வாசவி ஃப்தேபுர். இந்த பெண்ணுக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது கணவர் ராகவேந்திரா ஆம்புலன்ஸை அழைத்துள்ளார்.

ஆம்புலன்ஸ் வர தாமதம்

ஆம்புலன்ஸ் வர தாமதம்

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சென்றிருந்ததால் வருவதற்கு 30 முதல் 40 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ள நேரிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசவிக்கு உதவ வந்த அக்கம்பக்கத்தினர்

வாசவிக்கு உதவ வந்த அக்கம்பக்கத்தினர்

கொரோனா கட்டுபாட்டின் நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் வாகனங்களும் கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் அக்கம்பக்கத்தில் வசிக்கும் விஜயலட்சுமி ஜோஷி, மாதுரி கமனஹள்ளி, முக்தா கமனஹள்ளி மற்றும் சிவலீலா பட்டர் ஆகியோர் பிரசவ வலியில் இருந்த வாசவிக்கு உதவ முற்பட்டுள்ளனர்.

நடுவானில் 30,000 அடி உயரத்தில் எரிபொருட்கள் நிரப்பிய ரபேல் விமானங்கள்: வைரல் புகைப்படம்!நடுவானில் 30,000 அடி உயரத்தில் எரிபொருட்கள் நிரப்பிய ரபேல் விமானங்கள்: வைரல் புகைப்படம்!

வீடியோ கால் மூலம் மருத்துவர்

வீடியோ கால் மூலம் மருத்துவர்

இவர்கள் வாசவியின் உறவினரான ஹனகலைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை அழைத்துள்ளனர். அவர் உடனடியாக வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். பின் மருத்துவர் ஆலோசனையை பின்பற்றி அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.

அழகாக ஒரு ஆண் குழந்தை

அழகாக ஒரு ஆண் குழந்தை

இதுகுறித்து பிரசவம் பார்த்தவர்கள் தெரிவிக்கையில், ரொம்ப கவலையா இருந்தது உடனே டாக்டர் பிரியங்கா மந்தகியை ஆலோசனை பெற அழைத்தோம். நாங்கள் வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ அழைப்பு செய்தோம், அவர் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார். அதன்படி செய்தோம்.

மகிழ்ச்சியில் திகைப்பு

மகிழ்ச்சியில் திகைப்பு

அழகாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி தொப்புள் கொடியை கவனமாக கட் செய்து குழந்தையை காப்பாற்றினோம், ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு என கூறினார்.

வாட்ஸ் ஆப் வீடியோ கால்

வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்து ஆண் குழந்தை பிறந்த சம்பவம் அனைவரிடமும் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இதனையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த வந்த ஆம்புலன்ஸ் தாயையும் சேயையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. அங்கு தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Best Mobiles in India

English summary
Baby Birth with help of Neighbours, Doctor Guide on Whatsapp Videocall

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X