தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.14,999 க்கு 7000mAh பேட்டரி.. SONY கேமரா.. 30W டர்போ சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் வாவ் டீல் விற்பனையில் (Wow Deal Sale) முன்னணி ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் 7000mAh பேட்டரியுடன் வெளியான மோட்டோ ஜி57 பவர் 5ஜி (moto g57 Power 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் வாவ் டீல் விற்பனையில் மோட்டோ ஜி57 பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 11 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியுடன் ரூ.15,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், கிரெடிட் கார்டு வழியாக இஎம்ஐ விருப்பத்தில் வாங்கினால் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். ரூ.14,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

மோட்டோ ஜி57 பவர் 5ஜி அம்சங்கள் (moto g57 Power 5G Specifications): 6.7 இன்ச் ஃபுல் எச்டிபிளஸ் எல்சிடி (LCD) டில்பிளேவை இந்த மோட்டோ ஜி57 பவர் 5ஜி போன் கொண்டுள்ளது. மேலும், 2400 x 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6s Gen 4 4nm) சிப்செட்டுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) அப்கிரேட் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்து உள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொடுத்து உள்ளது.
ஆகவே, 24 ஜிபிக்கான ரேம் அவுட்புட் கிடைக்கும். 7000mAh பேட்டரி மற்றும் 33W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 60 மணி நேரங்களுக்கு பேட்டர் லைப் கிடைக்கும். 50 எம்பி மெயின் கேமராவில் சோனி எல்ஒடிஐஏ 600 (Sony LYTIA 600) சென்சார் மற்றும் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமாவில் ஃபிக்சடு போகஸ் கிடைக்கிறது. 2-இன்-1 லைட் சென்சார் கிடைக்கிறது. இதில் ஆம்பியன் லைட் சென்சார் (Ambient Light Sensor) மற்றும் ஃபிளிக்கர் டிடெக்டர் (Flicker Detector) கொடுக்கப்பட்டு உள்ளது. 6x ஹை-ரெஸ் டிஜிட்டல் ஜூமிங் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது.
ப்ரோ மோட், ஆட்டோ நைட் விஷன், லைவ் பில்டர், அல்ட்ரா ரெஸ் உள்ளிட்ட கேமரா பீச்சர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. 2K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஐ பீச்சர்களில் ஷாட் ஆப்டிமைசேஷன், ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் கிடைக்கிறது. மேஜிக் எரைசர், போட்டோ அன்பிளர், போர்ட்ராய்டு பிளர், போர்ட்ராய்டு லைட் போன்ற பீச்சர்கள் உள்ளன.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ கொடுத்துள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டைப்-சி சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. பான்டோன் கோர்சைர் (PANTONE Corsair), பான்டோன் ப்ளூயிடிட்டி (PANTONE Fluidity) மற்றும் பான்டோன் ரெகட்டா (PANTONE Regatta) ஆகிய கலர்களில் இந்த மோட்டோ ஜி57 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








