அறிமுகமானது புதிய Dell லேப்டாப்.. 15.6 இன்ச் டிஸ்பிளே.. எந்த மாடல்? என்ன விலை?
டெல் நிறுவனம் இந்தியாவில் டெல் 15 (Dell 15) எனும் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் இந்த புதிய டெல் லேப்டாப் வெளியாகி உள்ளது. இப்போது டெல் 15 மாடலின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
டெல் 15 அம்சங்கள் (Dell 15 Specifications): புதிய டெல் 15 லேப்டாப் மாடல் ஆனது 15.6-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920×1080 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz refresh rate), 320 நிட்ஸ் பிரைட்னஸ், 45 சதவீதம் NTSC உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

தரமான இன்டெல் கோர் அல்ட்ரா 5 225எச்/ கோர் அல்ட்ரா 7 255எச் பிராசஸர் உடன் வெளியாகி உள்ளது புதிய டெல் 15 லேப்டாப் மாடல். குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த லேப்டாப் மாடலின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டெல் நிறவனம்.
Windows 11 Home இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது புதிய டெல் 15 லேப்டாப். 8ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் புதிய டெல் 15 மாடல். குறிப்பாக இந்த லேப்டாப் மாடலின் வடிவமைப்பு அருமையாக உள்ளது.
கேமிங் பயனர்களை கவரும் வகையில் இன்டெல் ஆர்க் ( intel Arc integrated graphics) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு இந்த புதிய டெல் 15 மாடலில் உள்ளது. ஃபுல் சைஸ் கீபோர்ட், டச் பேட், பேக்லிட் (backlit) போன்ற விருப்பங்களுடன் இந்த டெல் லேப்டாப் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் டூயல் ஸ்பீக்கர்கள், சிங்கிள் டிஜிட்டல் மைக்ரோபோன்கள், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தின் உள்ளன. மேலும் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், 720P வெப் கேமரா போன்ற வசதிகளுடன் இந்த புதிய டெல் லேப்டாப் வெளியாகி உள்ளது.
எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை 6, புளூடூத் 5.3 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய டெல் 15 லேப்டாப் மாடலில் உள்ளன. மேலும் கார்பன் பிளாக், பிளாட்டினம் சில்வர் நிறங்களில் இந்த லேப்டாப் வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

three-cell 41W பேட்டரி உடன் டெல் 15 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த லேப்டாப் மாடலை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த லேப்டாப் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 65W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
இந்தியாவில் டெல் 15 மாடலின் ஆரம்ப விலை ரூ.69,699-ஆக உள்ளது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் இந்த லேப்டாப் மாடலை வாங்க முடியும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த லேப்டாப் மாடலை வாங்கினால் ரூ.5000 தள்ளுபடியும் உள்ளது.


Click it and Unblock the Notifications








