Xiaomi களமிறக்கிய புதிய ஏசி.. 15 வினாடியில் கூலிங்.. ஹைப்பர் ஓஎஸ்.. பட்ஜெட் விலை.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் புதிய மிஜியா ஸ்ட்ராங் ஏர் சூப்பர் 1.5 எச்பி ஏசி (Mijia Strong Air Super 1.5 HP air conditioner) மாடலை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஏசி மாடல் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
சியோமி மிஜியா ஸ்ட்ராங் ஏர் சூப்பர் ஏசி அம்சங்கள் (Xiaomi Mijia Strong Air Super AC specification) : சியோமி மிஜியா ஸ்ட்ராங் ஏர் சூப்பர் ஏசி ஆன் செய்ததும் வெறும் 15 விநாடிகளில் அறையைக் குளிர்விக்கத் தொடங்கும். அதேசமயம் இது 30 விநாடிகளில் வெப்பப்படுத்தவும் செய்யும். மேலும் சத்தமில்லாமல் இயங்கும் என்பது தான் இந்த புதிய ஏசி மாடலின் சிறப்பு அம்சம் ஆகும்.

அதேபோல் சியோமி மிஜியா ஸ்ட்ராங் ஏர் சூப்பர் ஏசி மாடல் ஆனது மின்சாரத்தை மிச்சப்படுத்தும் 1 எனர்ஜி ரேட்டிங் மற்றும் 6.01 APF அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 344 kWh வரை மின்சாரத்தைச் சேமிக்க முடிகிறது. அதாவது இந்த அம்சம் மூலம் கரண்ட் பில் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய ஏசி மாடல் உட்புறத்தை அதுவே சுத்தம் செய்து கொள்ளும் வசதி இருப்பதால் பாக்டீரியாக்கள் அண்டாது மற்றும் காற்று தூய்மையாக இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு. குறிப்பாக 13CC டூயல் சிலிண்டர் கம்ப்ரசர் கொண்டுள்ளது இந்த சியோமி மிஜியா ஸ்ட்ராங் ஏர் சூப்பர் ஏசி மாடல்.
HyperOS Connect (ஹைப்பர் ஓஎஸ் கனெக்ட்) மூலம் சியோமி மிஜியா ஸ்ட்ராங் ஏர் சூப்பர் ஏசி மாடல் இயங்குகிறது. அதுவும் இது சியோமி ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன், வாய்ஸ் கண்ட்ரோல் அம்சத்தையும் ஆதரிக்கிறது. மேலும் உங்கள் போனில் உள்ள சியோமி ஆப் மூலம் இந்த ஏசியை எங்கிருந்து வேண்டுமானாலும் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக இந்த புதிய வகை ஏசி மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
இந்த சியோமி மிஜியா ஸ்ட்ராங் ஏர் சூப்பர் ஏசி மாடல் மணிக்கு 900 கன மீட்டர் வரை காற்றோட்டத்தை வழங்குகிறது. மேலும் இதில் 118 மிமீ large-diameter ஃபேன் உள்ளது. அதுவும் இந்த ஏசி அதிகபட்சமாக 55°C வெப்பமும், 15°C வரை குளுமையைப் பரப்பும். இந்த ஏசியின் எடை 11.5 கிலோ ஆகும். மேலும் வெளியே வைக்கும் யூனிட் எடை 27 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.

செம்பு கண்டன்சர்கள் மற்றும் எவாபரேட்டர்கள் (evaporators) கொண்டுள்ளது இந்த சியோமி மிஜியா ஸ்ட்ராங் ஏர் சூப்பர் ஏசி மாடல். முன்பு கூறியது போல் மிகவும் குறைந்த அளவிலான இரைச்சலை (noise) கொண்டுள்ளதால் இந்த சியோமி ஏசி மாடலுக்கு உலகம் முழுவதும் அதிக வரவேற்பு இருக்கும்.
சீனாவில் சியோமி மிஜியா ஸ்ட்ராங் ஏர் சூப்பர் ஏசி மாடலின் 2,699 (இந்திய மதிப்பில் ரூ.36,918) ஆக உள்ளது. சீனாவில் ஜேடி.காம் என்ற இணையதளத்தில் இந்த ஏசி மாடல் விற்பனைக்கு வருகிறது. அதேபோல் இந்தியாவிலும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய சியோமி ஏசி மாடல்.


Click it and Unblock the Notifications








