ஹோம் தியேட்டர் கதை முடிந்தது.. 65 இன்ச் QD MiniLED டிவி.. 4K 144Hz டிஸ்பிளே.. கூகுள் TV OS.. எந்த மாடல்?
ஹோம் தியேட்டருக்கு நிகரான பீச்சர்களுடன் லூமியோ விஷன் 9 65 இன்ச் கியூடி மினிஎல்இடி 2026 டிவி (Lumio Vision 9 65 inch QD MiniLED 2026 TV) இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 4K 144Hz டிஸ்பிளே, டூயல் சப்வூப்பர், 38Hz பீக் பேஸ், டால்பி அட்மோஸ் போன்ற பீச்சர்களில் மிரளவிட்டுள்ளது. இந்த லூமியோ விஷன் 9 65 இன்ச் கியூடி மினிஎல்இடி 2026 டிவியின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
டிஸ்பிளே, ஆடியோ, பர்ஃபாமென்ஸ் மற்றும் டிசைன் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் பிரீமியம் காட்டி இருக்கிறது. மீடியாடெக் பென்டானிக் 700 (MediaTek Pentonic 700) சிப்செட்டை இந்த லூமியோ விஷன் 9 65 இன்ச் கியூடி மினிஎல்இடி 2026 டிவி கொடுத்து உள்ளது. இந்தியாவின் ஃபாஸ்ட்டஸ்ட் டிவி சிப்செட்டாக இது இருக்கிறது. 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கிடைக்கிறது.

4K ரெசொலூஷன், 144 Hz ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் உள்ளிட்ட பிரீமியம் வீடியோ பீச்சர்கள் கிடைக்கின்றன. டூயல் சப்வூப்பர், மிட் மற்றும் ட்வீடர்களை கொண்ட 50W ஆடியோவுட் கொடுக்கப்பட்டு உள்ளது. மினியான் 2 வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் கொண்டுள்ளது. இப்படி ஒட்டுமொத்தமாகவே பிரீமியம் காட்டி இருக்கிறது.
ஆனால், மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்த லூமியோ விஷன் 9 65 இன்ச் கியூடி மினிஎல்இடி 2026 டிவியின் மார்கெட் விலை ரூ.72,999ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையுடன் ரூ.64,999 விலைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த சலுகையை தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகள் மற்றும் கூப்பன்களை பயன்படுத்தி பெற்று கொள்ளலாம்.
மேலும், 55 இன்ச் மாடலும் கிடைக்கிறது. ஆனால், இந்த மாடலின் விற்பனை வருகிற மே மாதத்தில் தொடங்க இருக்கிறது. ஆகவே, விலை பிறகு தெரியவரும். அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஏப்ரல் 24ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. 2 வருட வாரண்டியை இந்த லூமியோ விஷன் 9 65 இன்ச் கியூடி மினிஎல்இடி 2026 டிவி கொடுக்கிறது.
லூமியோ விஷன் 9 65 இன்ச் கியூடி மினிஎல்இடி 2026 டிவி அம்சங்கள் (Lumio Vision 9 65 inch QD MiniLED 2026 TV Specifications): 65 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூடி மினிஎல்இடி டிஸ்பிளே மற்றும் குவாண்டம் டாட் இன்டிகிரேஷன் கிடைக்கிறது. 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரெட் கிடைக்கிறது. 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன் (Dolby Vision) உள்ளது.
மேலும், எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG), விஆர்ஆர் (VRR) மற்றும் டோப் டிஸ்பிளே 2 (DIPE Display 2) கொண்டுள்ளது. கேமிங் பிரியர்களுக்கு கிடைக்கும் ஏஎல்எல்எம் (ALLM) கிடைக்கிறது. 4K ஏஐ அப்ஸ்கேலிங் (4K AI Upscaling) உள்ளது. 50W ஆடியோ அவுட்புட் கிடைக்கிறது. டிஜிஎஸ் ஆடியோ 2.0 (DGS Audio 2.0) உள்ளது. 2 சப்வூப்பர்கள், 2 ஃபுல் ரேஞ்ச் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.
மேலும், 2 ட்வீடர்கள் உள்ளன. இந்த 6 ஸ்பீக்கர்களுக்கு டால்பி அட்மோஸ் (Dloby Atmos) மற்றும் டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ், வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் மற்றும் பிளே ஸ்டோர் சப்போர்ட் கிடைக்கிறது. ப்ளூடூத், வை-பை, ஸ்கிரீன் காஸ்ட் உள்ளிட்ட ஒட்டுமொத்த வயர்லெஸ் கனெக்டிவிட்டிகள், யுஎஸ்பி, எச்டிம்ஐ போர்ட்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications








