பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. ஆஃபரில் 55 இன்ச் 4கே டிவி.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் mega deal days எனும் சிறப்பு விற்பனை தற்போது நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் கம்மி விலையில் வாங்க கிடைக்கின்றன. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஏசர் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் ஏசர் 55 இன்ச் ஜி சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி கூகுள் டிவி மாடலுக்கு 57 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.26,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1750 வரை தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஏசர் 55 இன்ச் ஜி சீரிஸ் 4கே கூகுள் டிவி அம்சங்கள் (acer 55 inch G Series 4K Smart Google TV Specifications): ஏசர் ஜி சீரிஸ் 55 இன்ச் கூகுள் டிவி அல்ட்ரா எச்டி 4கே (4K Ultra HD) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், சூப்பர் பிரைட்னஸ், எச்டிஆர் 10 ஆதரவு, 1.07 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராஸசர் உடன் இந்த ஏசர் 55 இன்ச் ஜி சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மாலி ஜி31 ஜிபியு (Mali G31 GPU) கிராபிக்ஸ் வசதியும் இந்த டிவியில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஆனது மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.
தனித்துவமான டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 24W ஸ்பீக்கர்கள் உடன் ஏசர் 55 இன்ச் ஜி சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. எனவே இது ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த ஏசர் ஸ்மார்ட் டிவியில் உள்ளன.
குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ஏசர் 55 இன்ச் ஜி சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். பின்பு வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த ஸ்மார்ட் ரிமோட் ஆனது ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த ஏசர் டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.
மேலும் ஏசர் 55 இன்ச் ஜி சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவியில் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த ஏசர் டிவியில் உள்ளன.


Click it and Unblock the Notifications








