1 இல்ல 9 லேப்டாப் ஒரே நேரத்தில் அறிமுகம்! ஏழை டூ பணக்காரர் வரை அனைவருக்கும் உண்டு! Asus 2023..

|

CES 2023 நிகழ்வில் Asus நிறுவனம் Zenbook, Vivobook, ProArt மற்றும் Expertbook தொடரில் 9 லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொன்றும் வெவ்வேறு விலையில் வெவ்வேறு அம்சங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அசுஸ் நிறுவனம் OLED டிஸ்ப்ளேக்கள் மற்றும் என்விடியா RTX 40 தொடர் GPUகள் ஆதரவுடன் சில லேப்டாப்களை அறிமுகப்படுத்தியது. இதில் 13 வது ஜென் இன்டெல் கோர் i9 செயலி மற்றும் சமீபத்திய விண்டோஸ் 11 இயக்க முறைகள் லேப்டாப்களும் இடம்பெற்றுள்ளது.

9 ஓஎல்இடி லேப்டாப்கள் அறிமுகம்

9 ஓஎல்இடி லேப்டாப்கள் அறிமுகம்

அசுஸ் நிறுவனம் 9 ஓஎல்இடி லேப்டாப்களை CES 2023 நிகழ்வில் காட்சிப்படுத்தியது. இந்த புதிய லேப்டாப்கள் ஆனது Zenbook, Vivobook, ProArt மற்றும் Expertbook வரிசையில் இடம்பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு நிகழ்விலும் அசுஸ் இதேபோல் குறிப்பிட்ட அளவிலான லேப்டாப்களை காட்சிப்படுத்தியது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள லேப்டாப் விவரங்களை பார்க்கலாம்.

Asus Zenbook Pro 14 OLED

Asus Zenbook Pro 14 OLED

Asus Zenbook Pro 14 OLED ஆனது 2.8K தெளிவுத்திறன் உடன் கூடிய 14.5 இன்ச் 120Hz OLED டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இதில் 100 சதவீதம் DCI-P3 வண்ண வரம்பு இருக்கிறது. இந்த லேப்டாப் ஆனது Intel Core i9-13900H சிப்செட் மற்றும் RTX 4070 GPU மூலம் இயக்கப்படுகிறது. இதில் 76Wh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Asus Zenbook Pro 16X OLED

Asus Zenbook Pro 16X OLED

பட்டியலில் உள்ள அடுத்த லேப்டாப் Asus Zenbook Pro 16X OLED ஆகும். இதில் 3.2K தெளிவுத்திறன், HDR மற்றும் 100 சதவீதம் DCI-P3 வண்ண வரம்புடன் கூடிய 16 இன்ச் OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் ஆனது RTX 4080 GPU உடன் இணைக்கப்பட்ட Intel Core i9-13905H மூலம் இயக்கப்படுகிறது. இதில் 96Wh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Asus Zenbook 14X OLED, Zenbook 14 Flip OLED

Asus Zenbook 14X OLED, Zenbook 14 Flip OLED

ஏறத்தாழ ஒரே அம்சங்களுடன் Asus Zenbook 14X OLED, Zenbook 14 Flip OLED ஆகிய இரண்டு லேப்டாப்கள் இருக்கிறது. Asus Zenbook 14X OLED மற்றும் Zenbook 14 Flip OLED ஆகிய இரண்டும் 2.8K தெளிவுத்திறன் உடன் கூடிய 14 இன்ச் OLED டிஸ்ப்ளே மற்றும் 100 சதவீதம் DCI-P3 வண்ண வரம்பு ஆதரவு இருக்கிறது.

14x OLED டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 14 Flip OLED ஆனது 90Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஃப்ளிப் பதிப்பில் 360 டிகிரி மதிப்பு ஆதரவு உள்ளது. அதேபோல் 14X OLED டிஸ்ப்ளே லேப்டாப் 180 டிகிரி மடிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

14X OLED மாடல் லேப்டாப் ஆனது இன்டெல் கோர் எச்-சீரிஸ் செயலி மற்றும் RTX 3050 GPU மூலம் இயக்கப்படுகிறது. 14 ஃபிளிப் OLED இன்டெல் கோர் பி-சீரிஸ் செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஹர்மன் கார்டன் ஸ்பீக்கர் அமைப்பு மற்றும் டால்பி அட்மோஸ் ஆடியோ ஆதரவு இதில் உள்ளது.

Asus Vivobook Pro 16X OLED, Vivobook 16X 3D OLED

Asus Vivobook Pro 16X OLED, Vivobook 16X 3D OLED

இந்த ஆண்டிற்கான அசுஸ் நிறுவனத்தின் Vivobook வரிசையில் 16X OLED மற்றும் 16X 3D OLED லேப்டாப் அறிமுகமாகி இருக்கிறது. இரண்டு லேப்டாப்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இரண்டிலும் உள்ள முக்கிய வேறுபாடு டிஸ்ப்ளே அம்சங்கள் ஆகும்.

16-இன்ச் HDR OLED லேப்டாப் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 3.2K தெளிவுத்திறன் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் 16X OLED 3D லேப்டாப் ஆனது 3.2K தெளிவுத்திறனுடன் கூடிய 16 இன்ச் 120Hz 3D OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

இரண்டு லேப்டாப்களும் RTX GPUகளுடன் கூடிய இன்டெல் கோர் HX செயலி மூலம் இயக்கப்படுகிறது. இரண்டுமே 2TB வரை சேமிப்பக விருப்ப ஆதரவைக் கொண்டுள்ளது.

Asus ProArt Studiobook 16 OLED, ProArt Studiobook 16 3D OLED

Asus ProArt Studiobook 16 OLED, ProArt Studiobook 16 3D OLED

16 OLED லேப்டாப் ஆனது 3.2k தெளிவுத்திறனுடன் 16 இன்ச் 120Hz OLED டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் இன்டெல் கோர் i9-13980HX CPU மற்றும் RTX 4070 GPU மூலம் இயக்கப்படுகிறது. இதில் 90Wh பேட்டரி மற்றும் 8TB சேமிப்பக ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ProArt Studiobook 16 3D OLED ஆனது 3.2K தெளிவுத்திறனுடன் கூடிய 16 இன்ச் 3D OLED டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டுள்ளது. இது இன்டெல் கோர் எச்எக்ஸ் தொடர் செயலிகள் மற்றும் ஆர்டிஎக்ஸ் லேப்டாப்-சீரிஸ் ஜிபியு மூலம் இயக்கப்படுகிறது.

Asus ExpertBook B9 OLED

Asus ExpertBook B9 OLED

Asus ExpertBook B9 லேப்டாப் ஆனது க்யூஎச்டி தெளிவுத்திறன் உடன் கூடிய 14-இன்ச் OLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் Windows 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. Enterprise-grade பாதுகாப்பிற்கான Intel vPro ஆதரவைக் கொண்டுள்ளது இந்த லேப்டாப். முழு எச்டி வெப்கேம் மற்றும் கைரேகை உள்நுழைவு பட்டன் ஆதரவு இருக்கிறது.

எப்போது விற்பனை தொடரும்..

எப்போது விற்பனை தொடரும்..

ExpertBook B9 தவிர பிற அனைத்து லேப்டாப்களும் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு முதல் கிடைக்கத் தொடங்கும் எனவும் ExpertBook B9 மூன்றாம் காலாண்டு முதல் விற்பனைக்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

File Images

Best Mobiles in India

English summary
Asus 2023: 9 laptops launched simultaneously! Laptops Available from Cheap to Expensive Price!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X