அடம்பிடித்து Apple Watch வாங்கிய நபர்.! நன்றிக் கடன்னா என்னனு இங்க பாருங்க!

|

அமெரிக்காவில் நபர் ஒருவர் கார் விபத்தில் சிக்கி மயங்கி விழுந்திருக்கிறார். அப்போது ஆப்பிள் வாட்ச்சில் உள்ள ஒரு அம்சத்தின் மூலம் உயிர் பிழைத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. துரிதமாக செயல்பட்ட Apple Watch இன் நடவடிக்கை பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

ஐபோன் 14 சீரிஸ் மற்றும் வாட்ச் 8 சீரிஸ்

ஐபோன் 14 சீரிஸ் மற்றும் வாட்ச் 8 சீரிஸ்

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் மற்றும் வாட்ச் 8 சீரிஸ், 2022இன் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் வரப்பிரசாதம் என்றே கூறலாம். ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்யப்படும் புது மாடல்களில் புதுமைகள் புகுத்துவது ஆப்பிள் வழக்கம்.

அதன்படி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 சீரிஸ் மற்றும் வாட்ச் 8 சீரிஸ் ஆனது செயற்கைக்கோள் அம்சங்கள் மூலம் க்ராஷ் கண்டறிதல் மற்றும் எமர்ஜென்சி எஸ்ஓஎஸ் ஆதரவுகளை கொண்டிருந்தது. இந்த அம்சம் தான் அமெரிக்காவில் உள்ள ஒருவரின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது.

ஆப்பிள் வாட்ச் 8 சீரிஸ்

ஆப்பிள் வாட்ச் 8 சீரிஸ்

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் வசிக்கும் நோலன் ஆபெல் என்பவர் காரில் சென்றுக் கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இது கடுமையான விபத்து ஆக இருந்திருக்கிறது, ஆபெல் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்திருக்கிறார். அதிர்ஷ்டவசமாக ஆபெல் கையில் ஆப்பிள் வாட்ச் 8 சீரிஸ் இருந்திருக்கிறது.

அவசரகால SoS சேவை

அவசரகால SoS சேவை

ஆபெல் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, தனது ஆப்பிள் வாட்ச் இல் இருந்து ஒரு குரலை கேட்டுள்ளார். அதாவது விபத்துக்குள்ளானதை கண்டறிந்த ஆப்பிள் வாட்ச், நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறது. மறுபுறம் இருந்து எந்த பதிலும் வராத காரணத்தால் ஆப்பிள் வாட்ச் 8 சீரிஸ், SOS அம்சத்தை இயக்கி இருக்கிறது. SOS என்பது அவசர கால சேவை ஆகும்.

உயிரைக் காப்பாற்றும் ஆப்பிள் வாட்ச்

உயிரைக் காப்பாற்றும் ஆப்பிள் வாட்ச்

எந்த ஒரு காரணமும் இல்லாமல், விருப்பத்தின் பேரில் ஆப்பிள் வாட்ச்சை ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கி இருக்கிறார் ஆபெல். தற்போது இந்த வாட்ச் தான் இவரின் உயிரை காப்பாற்றி இருக்கிறது. எதிர்பாராமல் ஏதோ ஒரு தேவைக்கு வாங்கிய ஆப்பிள் சாதனங்கள் உயிரையே காப்பாற்றி பலரையும் நன்றிக்குள்ளவர்களாக மாற்றி வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

தனித்து நிற்கும் ஆப்பிள்

தனித்து நிற்கும் ஆப்பிள்

எதிலும் தனித்து நிற்கும் ஆப்பிள்.. ஸ்மார்ட் வாட்ச் பிரிவிலும் தனித்தே நிற்கிறது. பல்வேறு மேம்பட்ட அம்சங்கள், தனித்துவ செயல்பாடுகள் என கூட்டத்தில் இருந்து தன்னை வேறுபடுத்தி காட்டுகிறது ஆப்பிள் வாட்ச்கள். ஆப்பிள் என்றால் அம்சங்களும் உயர்வு, விலையும் உயர்வு என்பதை அனைவரும் அறிந்ததே.

ஆனால் எந்த விலையும் ஒரு உயிரின் மதிப்புக்கு இணையாகாது. அதன்படி ஆப்பிள் வாட்ச் பலரின் உயிரை காப்பாற்றியுள்ளது என்ற நிகழ்வை படித்தும் கேள்விப்பட்டும் வருகிறோம்.

விபத்து கண்டறிதல் அம்சம்

விபத்து கண்டறிதல் அம்சம்

அவசரகால எஸ்ஓஎஸ் என்பது விபத்து கண்டறிதல் அம்சமாகும். விபத்து கண்டறிதல் அம்சம் என்று பெயர் குறிப்பிடுவது போல், இந்த அம்சமானது நீங்கள் கடுமையான கார் விபத்தில் சிக்கியிருக்கும் போது உங்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

கிராஷ் டிடெக்‌ஷன் சென்சார்

கிராஷ் டிடெக்‌ஷன் சென்சார்

ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா, ஆப்பிள் வாட் சீரிஸ் 8 போன்ற சாதனங்களில் கிராஷ் டிடெக்‌ஷன் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த சென்சார்கள் சாதனத்தில் இருந்து கிடைக்கும் தகவல்களை கொண்டு பயனருக்கு ஏற்படும் ஆபத்துகளைக் கண்டறிந்து செயல்படுகிறது என்பது தான் உண்மை. விபத்து ஏற்பட்ட பத்து வினாடிகளில் இந்த விபத்து கண்டறிதல் அம்சம் செயல்பட்டு அவசரகால எண்ணுக்கு தொடர்பு கொள்ளும்.

பலரின் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள்

பலரின் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள்

ஆப்பிள் அவசரகால SOS அம்சமானது கார் விபத்தில் சிக்கி இருக்கும் போது இதன் கிராஷ் டிடெக்ஷன் அம்சத்தின் மூலம் தானாக செயல்படத் தொடங்குகிறது. நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா என முதலில் ஒரு கேள்வியை எழுப்பும் 10 வினாடிக்குள் எந்த பதிலும் வரவில்லை என்றால் தானாக அவசரகால எண்ணுக்கு அழைப்பு விடுக்கத் தொடங்குகிறது. மேலும் இருப்பிடத்தையும் பகிருகிறது. இந்த அம்சம் இதுநாள் வரை பலரின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Apple Watch saved the life of a man who lost consciousness in a car accident

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X