சைலன்ட் ஆக.. பொங்கல் சிறப்பு விற்பனையை ஆரம்பித்த Amazon.. என்னென்ன ஆபர்களை மிஸ் பண்ணவே கூடாது?

|

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் இந்தியா (Amazon India) தனது 'பொங்கல் ஷாப்பிங் ஸ்டோர்' விற்பனையை (Pongal Shopping Store Sale) அறிவித்துள்ளது.

அமேசானின் இந்த பொங்கல் சிறப்பு விற்பனையின் (Pongal Sale) எப்போது தொடங்கும்? எப்போது முடியும்? இதன் கீழ் என்னென்ன பொருட்கள் மீது சலுகைகள் (Offers) கிடைக்கும்? இந்த சலுகையில் மிஸ் பண்ணவே கூடாத ஆபர்கள் என்னென்ன? இதோ விவரங்கள்:

எப்போது தொடங்கி.. எப்போது முடியும்?

எப்போது தொடங்கி.. எப்போது முடியும்?

அமேசான் அறிவித்துள்ள 2023 ஆம் ஆண்டிற்கான பொங்கல் சிறப்பு விற்பனையானது ஏற்கனவே தொடங்கிவிட்டது; அதாவது இந்த சிறப்பு விற்பனை அமேசான் வலைதளத்தில் நேரலையில் உள்ளது.

இது வருகிற ஜனவரி 18 ஆம் தேதி (January 18) வரை நீடிக்க உள்ளது. அதாவது பொங்கல் பண்டிகை முடிந்த பின்னரும் கூட, அடுத்த சில நாட்களுக்கு இது நீடிக்கும்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்! ரூ.10,000-க்கு வரும்னு சொல்லி.. வெறும் ரூ.6,499-க்கு அறிமுகமான சூப்பர் போன்!ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்! ரூ.10,000-க்கு வரும்னு சொல்லி.. வெறும் ரூ.6,499-க்கு அறிமுகமான சூப்பர் போன்!

என்னென்ன பொருட்கள் மீது சலுகைகள் கிடைக்கும்?

என்னென்ன பொருட்கள் மீது சலுகைகள் கிடைக்கும்?

இந்த விற்பனையின் கீழ் பல்வேறு வகையான தயாரிப்புகளின் மீது தள்ளுபடிகள் கிடைக்கும். அதாவது பொங்கல் பண்டிகைக்கான பூஜை பொருட்கள், பாரம்பரிய தமிழ்நாட்டு உடைகள் தொடங்கி..

ஸ்மார்ட்போன்கள் (Smartphones), ஸ்மார்ட் டிவிகள் (Smart TVs), லேப்டாப்கள் (Laptops), ஸ்மார்ட்வாட்சுகள் (Smartwatches), அமேசான் டிவைஸ்கள், பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்கார பொருட்கள், சமையலறை உபகரணங்கள், ஃபேஷன் மற்றும் அழகு சாதனங்கள் வரையிலாக கிட்டத்தட்ட எல்லா பொருட்கள் மீதும் சலுகைகள் கிடைக்கும்!

மிஸ் பண்ணவே கூடாத 5 ஆபர்கள்!

மிஸ் பண்ணவே கூடாத 5 ஆபர்கள்!

மேலே குறிப்பிட்டபடி, அமேசானின் இந்த பொங்கல் ஷாப்பிங் ஸ்டோர் விற்பனையின் கீழ் எக்கச்சக்கமான பொருட்கள் தள்ளுபடி விலைகளின் கீழ் வாங்க கிடைக்கும்.

இருந்தாலும் கூட குறிப்பிட்ட 5 பொருட்கள் மீதான ஆபர்களானது பெரும்பாலான வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும்படி உள்ளது. அதென்ன ஆபர்கள்? இதோ லிஸ்ட்:

தெரியாமல் கூட.. இந்த வார்த்தையை Google Search-ல் டைப் பண்ணிடாதீங்க! ஒருவேளை பண்ணி இருந்தா?தெரியாமல் கூட.. இந்த வார்த்தையை Google Search-ல் டைப் பண்ணிடாதீங்க! ஒருவேளை பண்ணி இருந்தா?

01. ரூ.18,999 க்கு கிடைக்கும் ஒன்பிளஸின் 5ஜி போன்!

01. ரூ.18,999 க்கு கிடைக்கும் ஒன்பிளஸின் 5ஜி போன்!

அமேசானின் பொங்கல் விற்பனையின் ஒரு பகுதியாக, ஒன்பிளஸ் நிறுவனத்தின் நோர்ட் சிஇ 1 லைட் 5ஜி (OnePlus Nord CE 2 Lite 5G) ஸ்மார்ட்போனின் 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ18,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒருவேளை நீங்கள் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டு இருந்தால், அதுவும் ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க விரும்பினால் இதுவே சிறந்த நேரம்!

02. ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கும் ரெட்மி டிவி!

02. ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கும் ரெட்மி டிவி!

அமேசானின் பொங்கல் சலுகையின் கீழ், ரெட்மி நிறுவனத்தின் 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (Redmi 32 inches) HD Ready Smart LED TV), ரூ.13,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியானது குவாட் கோர் ப்ராசஸர், ஆண்ட்ராய்டு டிவி 11 ஓஎஸ், டூயல் பேண்ட் வைஃபை, பேட்ச்வால் 4, பேரண்ட் லாக், 75 க்கும் மேற்பட்ட இலவச லைவ் சேனல்கள், ப்ரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், யூட்யூப், ஆப்பிள் டிவி போன்ற ஆப்கள் உட்பட கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 5000 க்கும் மேற்பட்ட ஆப்களை ஆதரிக்கிறது.

இது பிளான் இல்ல.. லைஃப் டைம் செட்டில்மென்ட்! சிங்கிள் BSNL ரீசார்ஜ்ஜில் 790GB டேட்டா, 400 டேஸ் வேலிடிட்டி!இது பிளான் இல்ல.. லைஃப் டைம் செட்டில்மென்ட்! சிங்கிள் BSNL ரீசார்ஜ்ஜில் 790GB டேட்டா, 400 டேஸ் வேலிடிட்டி!

03. ரூ.1,999 க்கு கிடைக்கும் ப்ளூடூத் காலிங் ஸ்மார்ட் வாட்ச்:

03. ரூ.1,999 க்கு கிடைக்கும் ப்ளூடூத் காலிங் ஸ்மார்ட் வாட்ச்:

அமேசான் பொங்கல் ஷாப்பிங் ஸ்டோர் விற்பனையின் கீழ், போல்ட் டைவ்+ ப்ளூடூத் காலிங் ஸ்மார்ட்வாட்ச் ஆனது ரூ.1,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இது 1.85-இன்ச் டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 150 க்கும் மேற்பட்ட வாட்ச் பேசஸ், 100 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட், IP68 வாட்டர் ரெசிஸ்டென்ட், 7 நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப் போன்ற அம்சங்களை வழங்குகிறது.

04. ரூ.13,999க்கு கிடைக்கும் கிண்டெல் பேப்பர்ஒயிட்!

04. ரூ.13,999க்கு கிடைக்கும் கிண்டெல் பேப்பர்ஒயிட்!

இந்த சிறப்பு விற்பனையின் கீழ் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் கிண்டெல் பேப்பர்ஒயிட் (Kindle Paperwhite) ரூ.13,999 க்கு வாங்க கிடக்கிறது.

6.8-இன்ச் அளவிலான டிஸ்ப்ளேவுடன் வரும் கிண்டெல் பேப்பர்ஒயிட் ஆனது மிகவும் மெலிதான பார்டர்களை கொண்டுள்ளது. மேலும் ஒரு ஃப்ளஷ்-ஃப்ரன்ட் டிசைனுடன் வருகிறது, இது நேரடி சூரிய ஒளியில் கூட ஒரு உண்மையான காகிதத்தை போல காட்சியளிக்கும் டிஸ்பிளேவை வழங்கும்.

ஒரே ஒரு ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கும் ஓஹோன்னு நன்மைகள்.. Jio-வின் இந்த 3 சூப்பர் பிளான்களை பற்றி தெரியுமா?ஒரே ஒரு ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கும் ஓஹோன்னு நன்மைகள்.. Jio-வின் இந்த 3 சூப்பர் பிளான்களை பற்றி தெரியுமா?

05. ஆசஸ் விவோபுக் 16 ப்ரோ:

05. ஆசஸ் விவோபுக் 16 ப்ரோ:

ஆசஸ் விவோபுக் ப்ரோ 16 ப்ரோ லேப்டாப் ஆனது அமேசான் வழியாக ரூ.99,990 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம், இந்த லேப்டாப்பில் இன்டெல் கோர் (Intel Core) i9-11900H 11த் ஜென் ப்ராசஸர் உடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Amazon Announced Pongal Shopping Store Sale Until January 18 2023 Never Miss This Top 5 Deals

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X