Home
Deal of the day

போய் வா பழைய TV.. ரூ.40000 மாடல் இப்போ ரூ.20000 க்கு.. 24W ஸ்பீக்கர் கொண்ட 43-இன்ச் Google டிவி!

உங்கள் வீடுகளில் உள்ள பழைய டிவி மாடலுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு "போய் வா கண்ணு" என்று கூறி அனுப்பி வைக்க இதுவே சரியான நேரம். ரூ.40,000 ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.20,000 க்கு கிடைப்பதை விட.. ஒரு புதிய ஸ்மார்ட் டிவி வாங்க எது சரியான நேரமாக இருக்க போகிறது?

ஆம். அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் 43-இன்ச் ஸ்க்ரீன் சைஸ் கொண்ட ஒரு அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலின் விலை பாதிக்கு பாதியாக குறைக்கப்பட்டு, நேரடி தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதாவது இந்த ஆபர் விலையை பெற, நீங்கள் எந்தவொரு பேங்க் ஆபரையும், எக்ஸ்சேன்ஜ் ஆபரையும் அணுக வேண்டிய அவசியமில்லை.

போய் வா பழைய TV.. ரூ.40000 மாடல் இப்போ ரூ.20000 க்கு!

எந்த மாடல்? பாதி விலைக்கு கிடைப்பது - தோஷிபா நிறுவனத்தின் 43 இன்ச் சி350என்பி சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Toshiba 43 inch C350NP Series 4K Ultra HD Smart LED Google TV - 43C350NP Black) மாடல் ஆகும்.

இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலின் எம்ஆர்பி விலை ரூ.39,999 ஆகும். இருப்பினும் அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது இந்த மாடலின் மீது 48% நேரடி தள்ளுபடியை அறிவித்து (லிமிடட் டைம் டீல்), இதை ரூ.20,999 க்கு விற்பனை செய்கிறது. கூடுதலாக பேங்க் ஆபர், எக்ஸ்சேன்ஜ் ஆபரை பயன்படுத்தினால், விலையை இன்னும் குறைக்கலாம்.

டிஸ்பிளே ரெசல்யூஷன்: 4கே அல்ட்ரா எச்டி (3840 x 2160), 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வைட் அங்கிள், VRR, ALLM, MEMC, HDR 10, HLG, டால்பி விஷன் உடனான 43 இன்ச் அல்ட்ரா HD ஸ்மார்ட் LED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கூடவே இது டைனமிக், ஸ்டாண்டர்ட், ஸ்போர்ட்ஸ், பிசி/கேம், எனர்ஜி சேவிங், சினிமா, ஃபிலிம்மேக்கர் ஆகிய பல வகையான பிக்சர் மோட்களையும் ஆதரிக்கிறது

சவுண்ட்: 24W ஆடியோ அவுட்புட், டாப்லி அட்மாஸ், ஆடியோ ஈக்வலைசர், டால்பி டிஜிட்டல், லிப்-சின்க் அடஜஸ்ட்மன்ட் ஆகிய அம்சங்கள் உள்ளன. ஸ்டாண்டர்ட், தியேட்டர், ஸ்போர்ட்ஸ், மியூசிக், ஸ்பீச், லேட் நைட் ஆகிய ஆடியோ மோட்கள் உள்ளன.

ஸ்மார்ட் டிவி அம்சங்கள்: கூகுள் டிவி, கூகுள் அசிஸ்டண்ட், வாய்ஸ் கமாண்ட் ஆகிய முக்கிய ஸ்மார்ட்டிவி அம்சங்களை கொண்டுள்ளது. கூடவே DLNA, Chromecast, Miracast, AirPlay ஆகிய ஸ்க்ரீன் மிர்ரரிங் அம்சங்களையும் கொண்டுள்ளது. மேலும் ஸ்லீப் டைமர், ஆன்/ஆஃப் டைமர் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது

கனெக்ட்விட்டி: செட் டாப் பாக்ஸை இணைக்க 3 HDMI போர்ட்கள் (1HDMI போர்ட் eARC-ஐ ஆதரிக்கும்), ஹார்ட் டிரைவ்கள் மற்றும் பிற USB டிவைஸ்களை இணைக்க 2 USB போர்ட்கள், பில்ட்-இன் வைஃபை, ப்ளூடூத், ஈதர்நெட் RJ45, 1 இயர்போன் ஜாக், 1 ஆப்டிகல் டிஜிட்டல் ஆடியோ அவுட்புட் (SPDIF), 1 RF- ரேடியோ ப்ரீக்வென்சி இன்புட் மற்றும் 1 AV இன்புட் ஆகியவைகள் உள்ளன.

ஆதரிக்கப்படும் ஆப்ஸ்: இது நெட்ஃபிளிக்ஸ், யூட்யூப், பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார், சோனிலிவ், ஹங்காமா, ஜீ5, ஈரோஸ் நவ் ஆகியவைகளை சப்போர்ட்டட் ஆப்களாக கொண்டுள்ளது. கடைசியாக இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கிய தேதியிலிருந்து 1 வருட உத்தரவாதமும், பிராண்டால் வழங்கப்படும் ரிமோட் கண்ட்ரோலுக்கு 1 வருட உத்தரவாதமும் கிடைக்கும். உத்தரவாத கோரிக்கைகளை அமேசான் இ-இன்வாய்ஸை பயன்படுத்தி செயல்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Half The Price Offer Toshiba 43 inch 4K Ultra HD Smart LED Google TV gets 48 Percentage Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X