Airtel ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வு குறித்து தலைமை நிர்வாக அதிகாரி சுனில் மிட்டல் பரபர தகவல்.!

|

ஏர்டெல், ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு 5ஜி சேவையை அறிமுகம் செய்தது. குறிப்பாக சில நகரங்களுக்கு மட்டும் இந்நிறுவனங்களின் 5ஜி சேவை கிடைக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் விரைவில் இந்தியா முழுவதும் இந்நிறுவனங்களின் 5ஜி சேவை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மற்றும் ஒடிசா

ஹரியானா மற்றும் ஒடிசா

அதேபோல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.99 என இருந்த குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை ரூ.155 என ஹரியானா மற்றும் ஒடிசா பகுதிகளில் உயர்த்தி இருந்தது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக ரூ.99 ரீசார்ஜ் திட்டம் ஆனது 99 டாக் டைம், 28 நாட்கள் வேலிடிட்டி, 200 எம்பி டேட்டாவையும் வழங்கி கொண்டிருந்தது. தற்போது இந்த திட்டம் நீக்கப்பட்டு அதற்குப்பதிலாக ரூ.155 திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

iPhone-க்கு நிகரான கேமரா வேண்டுமா? அப்போ இந்த 5 போனை பாருங்க.! இப்போது பட்ஜெட் விலையில்.!iPhone-க்கு நிகரான கேமரா வேண்டுமா? அப்போ இந்த 5 போனை பாருங்க.! இப்போது பட்ஜெட் விலையில்.!

ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த புதிய திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு குறிப்பிட்டபடி தற்போது ஹரியானா மற்றும் ஒடிசாவில் மட்டும் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிளைட்ல போறப்ப ஏன் Airplane mode ஆன் பண்ண சொல்றாங்க தெரியுமா? ஐயோ.! இதான் காரணமா?ஃபிளைட்ல போறப்ப ஏன் Airplane mode ஆன் பண்ண சொல்றாங்க தெரியுமா? ஐயோ.! இதான் காரணமா?

 ரூ.300 ஆக உயர்த்த வேண்டிய அவசியம்

ரூ.300 ஆக உயர்த்த வேண்டிய அவசியம்

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் மிட்டல் சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் ஒரு பயனரிடம் இருந்து பெறும் சராசரி வருவாயை (ARPU) மாதத்திற்கு ரூ.300 ஆக உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 60ஜிபி டேட்டா..

குறிப்பாக சராசரி வருவாயை மாதத்திற்கு 300 ரூபாயாக உயர்த்தினாலும், பயனர்கள் குறைந்த விலையில் மாதத்திற்கு 60ஜிபி டேட்டாவை பெறலாம் என்றும், அதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது எனவும் தெரிவித்தார்.

நின்றால் Paytm, நடந்தால் Paytm: இனி ரயில் டிக்கெட் புக் செய்யலாம், லைவ் டிராக் செய்யலாம்! சிம்பிள் டிப்ஸ்.!நின்றால் Paytm, நடந்தால் Paytm: இனி ரயில் டிக்கெட் புக் செய்யலாம், லைவ் டிராக் செய்யலாம்! சிம்பிள் டிப்ஸ்.!

வோடபோன் ஐடியா

வோடபோன் ஐடியா

அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தைப் போன்று வோடபோன் ஐடியா நிறுவனமும் விரைவில் தனது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதாவது தற்போது நிலவரப்படி ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் மட்டுமே முன்னேறிய நிலையில் உள்ளது. ஆனால் வோடபோன் ஐடியா நிறுவனம் அதிக வருவாய் இழப்பைச் சந்தித்து வருகிறது.

விரைவில் ரீசார்ஜ் திட்டங்களை உயர்த்தலாம்

விரைவில் ரீசார்ஜ் திட்டங்களை உயர்த்தலாம்

குறிப்பாக வருவாய் இழப்பைத் தவிர்க்கும் வகையில் வோடபோன் நிறுவனம் விரைவில் ரீசார்ஜ் திட்டங்களை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் கம்மி விலையில் ஒரு அசத்தலான திட்டத்தை அறிமுகம் செய்தது. இப்போது அந்த திட்டத்தின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

டெக்னோவின் பலே ஐடியா: தனித்துவமான கேமரா வசதியுடன் Phantom X2 Pro 5G போன் அறிமுகம்.!டெக்னோவின் பலே ஐடியா: தனித்துவமான கேமரா வசதியுடன் Phantom X2 Pro 5G போன் அறிமுகம்.!

ரூ.35 விலையில் டேட்டா வவுச்சர்

ரூ.35 விலையில் டேட்டா வவுச்சர்

ஏர்டெல் நிறுவனம் ரூ.35 விலையில் டேட்டா வவுச்சரை அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த திட்டம் தெரியவில்லை. ஆனால் ஏர்டெல் மொபைல் ஆப்பில் இந்த டேட்டா திட்டம் இருக்கிறது. எனவே ஏர்டெல் மொபைல் ஆப் வசதியில் இந்த ரூ.35 ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சரை ரீசார்ஜ் செய்யலாம்.

பேரு Fastrack நியாபகம் இருக்கா? வெறும் ரூ.1495க்கு அறிமுகமான அட்டகாச ஸ்மார்ட்வாட்ச்: உச்சக்கட்ட சம்பவம்!பேரு Fastrack நியாபகம் இருக்கா? வெறும் ரூ.1495க்கு அறிமுகமான அட்டகாச ஸ்மார்ட்வாட்ச்: உச்சக்கட்ட சம்பவம்!

 2 நாட்கள் வேலிடிட்டி..

2 நாட்கள் வேலிடிட்டி..

ஏர்டெல் ரூ.35 திட்டம் ஆனது 2 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. அதேபோல் இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஜிபி டேட்டாவிற்கும் ரூ.17.5 செலுத்துகிறீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஏர்டெல் நிறுவனம் ரூ.19 விலையில் ஒரு டேட்டா திட்டத்தை வைத்துள்ளது. இந்த ரூ.19 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 1ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Airtel plans to increase ARPU to Rs 300 per month: CEO Sunil Mittal: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X