இனி இலவசம் இல்லை.! ரீசார்ஜ் செஞ்சிக்கோங்க: ஏர்டெல்,வோடபோன் அறிவிப்பு.!

|

ஊரடங்கு காலத்தின் போது பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் தங்களது இலவச சலுகைகளை பயனர்களுக்கு வழங்கியது. இந்நிலையில் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டங்களில் கீழ் வரும் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான லாக்டவுன் விதிகளிலிருந்து தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் சிறிய கடைகள் மெல்ல மெல்ல மீண்டும் திறக்கப்படுகின்றன.

ப்ரீபெய்ட் திட்டங்களையும் ரீசார்ஜ்

எனவே மக்கள் இப்போது வெளியேறலாம் மற்றும் உள்ளூர் கடையில் இருந்து எந்த ப்ரீபெய்ட் திட்டங்களையும் ரீசார்ஜ் செய்யலாம் என்பதால் இனிமேல் தங்களது கட்டணத் திட்டங்களின் செல்லுபடியை நீட்டிக்கப் போவதில்லை என்று டெலிகாம் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

வோடபோன் ஐடியா

மேலும் செல்லுலார் ஆபரேட்டர்கள் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின்(சிஓஏஐ) மேனேஜர் ஜெனரல் ஆன ராஜன் மேத்யூஸ் கூறுகையில்,பொது சேவை மையங்கள் திறக்கப்பட்ட பின்னர், கிராமப்புற மற்றும் நகரப்புற பகுதிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். இது வோடபோன் ஐடியா, ஏர்டெல், ஜியோ போன்ற டெலிகாம் நிறுவனங்களை குறிக்கிறது.

Gmail-ல் புது அம்சம் அறிமுகம்: இனி ஜிமெயில் மூலம் கூகுள் மீட் இலவச வீடியோ கால்!Gmail-ல் புது அம்சம் அறிமுகம்: இனி ஜிமெயில் மூலம் கூகுள் மீட் இலவச வீடியோ கால்!

எனவேதான் கட்டண

பின்பு பொது சேவை மையங்களை செயல்படுத்துவதோடு கூடுதலாக,சிறிய கடைகள்,ஏடிஎம்கள் மற்றும் பிற விற்பனையாளர்களும்உள்ளனர், அவைகள் மக்கள் ரீசார்ஜ் செய்ய உதவுகின்றன. மக்கள் தங்கள் சிம் கார்டுகளை ரீசார்ஜ் செய்வதற்கு இது போதுமானது
என்று தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் உணர்கிறார்கள், எனவேதான் கட்டண திட்டங்களின் செல்லுபடியை இனியும் இலவசமாக
நீட்டிக்க வேண்டாம் என்று டெலிகாம் முடிவு செய்துள்ளன.

14 வலை நீட்டிக்கப் போவதாக அறிவத்திருந்தன

டெலிகாம் நிறுவனங்கள் தங்களது பயனர்களின் திட்டங்களின் செல்லுபடியை ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப் போவதாக அறிவத்திருந்தன,பின்னர் அது மே 3வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் வோடபோன், ஏர்டெல் போன்ற நிறுவங்கள் ஒருபடி மேலே சென்று தங்கள் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களின் கணக்கில் ரூ.10மதிப்பிலான கூடுதல் டால்க் டைமையும் இலவசமாக வழங்கின. ஜியோ நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு 100நிமிட இலவச பேச்சு நேரத்தை வழங்கியது.

ஆபாச படங்கள் பார்ப்போர் எண்ணிக்கை 95% உயர்வு! சிறுவர்களுக்கும் இந்த பழக்கம் எப்படி?ஆபாச படங்கள் பார்ப்போர் எண்ணிக்கை 95% உயர்வு! சிறுவர்களுக்கும் இந்த பழக்கம் எப்படி?

செயலியில் வைத்திருக்க டெலிகாம் நி

இதற்கு ஒரு தீர்வுகொண்டுவரும் வகையில், அனைத்து ரீசார்ஜ் விற்பனை நிலையங்களையும் இருப்பிடங்களையும் செயலியில்
வைத்திருக்க டெலிகாம் நிறுவனங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகின்றன, இதனால் வரும் நாட்களில் மக்கள் தங்கள் சிம் கார்டுகளை ரீசார்ஜ் செய்வதில் எந்த சிரமத்தையும் சந்திக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel, Jio & Vodafone-Idea to stop offering additional free benefits as recharge points start opening: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X