Home
News

BSNL சிம் இருக்கா? ஒரே ரீசார்ஜ்.. 164 நாட்கள் வேலிடிட்டி.. தினசரி 2GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டம்?

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அவ்வப்போது ப்ரீபெய்ட் திட்டங்களில் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் வழங்கும் சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் முக்கியமான ப்ரீபெய்ட் திட்டம் ஒன்று கூடுதல் சலுகையை வழங்கி உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஹோலி (Holi)பண்டிகையை முன்னிட்டு கூடுதல் வேலிடிட்டி சலுகையை வழங்கியது. குறிப்பாக இந்த கூடுதல் வேலிடிட்டி சலுகை ஆனது வரும் மார்ச் 31-வரை மட்டுமே இருக்கும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

BSNL சிம் இருக்கா? ஒரே ரீசார்ஜ்.. 164 நாட்கள் வேலிடிட்டி..

பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.997 prepaid plan) முன்பு 150 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. ஆனால் இப்போது ஹோலி (Holi) பண்டிகையை இந்த திட்டத்தில் 14 நாட்கள் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இப்போது பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 164 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே நீங்கள் தற்போது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 328ஜிபி டேட்டாவை பெறமுடியும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்த ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளையும் இப்போது பார்க்கலாம்

பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2799 Prepaid Plan) ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். ஆகவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL சிம் இருக்கா? ஒரே ரீசார்ஜ்.. 164 நாட்கள் வேலிடிட்டி..

குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.2799 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

பிஎஸ்என்எல் தற்போது நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. கூடிய விரைவில் இந்நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Bsnl Rs 997 Plan 164 Days Validity Unlimited Local STD Roaming Calls 2GB Data Check 5 Months Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X