Home
News

Airtel க்கு ஜெய் ஹோ.. மாதம் ரூ.187 போதும்.. 365 நாள் வேலிடிட்டி.. சூப்பரான SIM ஆக்டிவ் பிளான்!

உங்களிடம் ஏர்டெல் சிம் கார்டு (Airtel SIM Card) இருந்து.. அந்த ஏர்டெல் மொபைல் நம்பரை ஆக்டிவ் ஆக வைத்திருக்க, ஒவ்வொரு மாதமும் ரூ.350 அல்லது அதற்கும் மேலான தொகைக்கு ரீசார்ஜ் செய்து கொண்டு இருந்தால்.. இந்த கட்டுரை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், அதன் வாடிக்கையாளர்களுக்கு மாதம் ரூ.187 செலவில் 1 வருட சர்வீஸ் வேலிடிட்டியை (365 நாட்கள் வேலிடிட்டியை) வழங்கும் சூப்பரான சிம் ஆக்டிவ் திட்டத்தை வழங்குகிறது.

Airtel க்கு ஜெய் ஹோ.. மாதம் ரூ.187 போதும்.. 365 நாள் வேலிடிட்டி!

இந்த திட்டத்தின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், இது மற்ற சிம் ஆக்டிவ் பிளான்களை போல வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நமைகளை மட்டுமே வழங்காமல், டேட்டா நன்மையையும் வழங்கிறது. நிச்சயமாக இதன்கீழ் உங்களுக்கு பெரிய அளவிலான அல்லது டெய்லி டேட்டா கிடைக்காது, ஆனால் மிகவும் அடிப்படை டேட்டா பயன்பாட்டிற்கு போதுமான டேட்டா கிடைக்கும்

நாம் இங்கே திட்டம் ஏர்டெல்லின் ரூ.2249 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் ஆகும். இதை ஏர்டெல்லின் வேல்யூ ஃபோகஸ்டு பிளான் (value focused plan) என்றும் கூறலாம். இந்த திட்டத்தின் மாதாந்திர செலவு ரூ.187 மட்டுமே ஆகும். இது அதிக டேட்டா தேவையில்லாமல் வருடாந்திர ரீசார்ஜ்களை தேடும் வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டது. சரி வாருங்கள் இந்த திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக காணலாம்.

பார்தி ஏர்டெல் ரூ.2249 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: இது மொத்தம் 30 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் மொத்தம் 3600 எஸ்எம்எஸ்களையும் வழங்கும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டம் 365 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியை (12 மாதங்கள்) வழங்கும்.

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஏர்டெல்லின் ரூ.2249 திட்டமானது, வாடிக்கையாளர்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்திற்கான இலவச அணுகலை வழங்குகிறது. இந்த 12 மாத கால சந்தாவின் அசல் மதிப்பு ரூ.4,000 ஆகும். இதுதவிர்த்து ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே இலவச அணுகலும் கிடைக்கும். மேலும் இலவச ஹெலோடியூன்களும் கிடைக்கும்.

OPINION: 30ஜிபி டேட்டா கூட தேவை இல்லை. மாதாந்திர ரூ.250 க்குள் என்கிற செலவில் என்னுடைய ஏர்டெல் சிம் கார்ட்டையும், என்னுடைய ஏர்டெல் மொபைல் நம்பரையும் ஆக்டிவ் ஆக வைத்து இருந்தால் போதும் என்பவர்கள், வெறுமனே வாய்ஸ் கால்கள் மாற்று ஒடிபி-க்களுக்கான எஸ்எம்எஸ் நன்மை மட்டுமே போதும் என்பவர்கள்.. ரூ.2249 க்கு பதிலாக ரூ.1849-ஐ ரீசார்ஜ் செய்யலாம்.

ரூ.1849 ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த திட்டமும் 365 நாட்கள் செல்லுபடியாகும். அதாவது 12 மாதங்கள் சர்வீஸ் வேலிடிட்டியை வழங்கும், ஆக இதன் மாதாந்திர செலவு ரூ.154 மட்டுமே ஆகும். இது ரூ.2249-ன் மாதாந்திர செலவை (ரூ.187) விட இன்னும் குறைவாகும்

ஆனால் ரூ.1849 திட்டத்தின் கீழ் எந்த விதமான (டெய்லி அல்லது டோட்டல்) டேட்டா நன்மையும் கிடைக்காது. ஆக உங்களுக்கு ஏற்படும் திடீர் டேட்டா தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள அல்லது உங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் நீங்கள் கூடுதலாக டேட்டா பேக்குகளை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும்.

ஒருவேளை நீங்கள் டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்வதால் ஏற்படும் செலவை குறைக்க விரும்பினால் ரூ.2249-ஐ ரீசார்ஜ் செய்யலாம். ஏர்டெல் நிறுவனமானது இந்தியா முழுவதுமாகவே அதன் 4ஜி மற்றும் 5ஜி கவரேஜை மெதுவாக அதிகரித்து வருகிறது என்றாலும், உங்களுடைய பகுதியில் ஏர்டெல் நெட்வொர்க் எப்படி இருக்கிறது என்பதையும் ஒருமுறை டெஸ்ட் செய்துகொள்ளவும். ஏனென்றால் இது 1 ஆண்டு திட்டம், 28 நாள் ரீசார்ஜை போல சட்டென்று பின்வாங்க முடியாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 2249 Plan With 365 Days Validity 30GB Data 3600 SMS Unlimited Voice Calls Is Best or Not
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X