BSNL SIM கஸ்டமர்களுக்கு குட் நியூஸ்.. இனி ரீசார்ஜ் செய்ய Mobile Number கொடுக்க தேவை இல்லை.. வந்தது புது வசதி!
பிஎஸ்என்எல் சிம் கார்டு வைத்து இருக்கும் கஸ்டர்மார்களுக்கு ஒரு குட் நியூஸ்.இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) ஆனது நாட்டில் உள்ள பெண்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு வசதியை அறிவித்து உள்ளது
இருப்பினும் இந்த வசதி அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தால், அதாவது பெண்களுக்கு மட்டும் என்று பிரிக்கப்படாமல் இருந்தால், அனைத்து வகையான நுகர்வோரக்ளுக்கும் கிடைத்து இருந்தால் - இன்னும் அற்புதமாக இருந்திருக்கும்.

பிஎஸ்எஸ்எல் அறிவித்துள்ள புதிய வசதி - பிஎஸ்என்எல் கவாச் (BSNL Kavach) என்று அழைக்கப்படுகிறது. இதுவொரு தொழில்நுட்பமாகும். இது பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட மொபைல் நம்பரை கொடுக்காமல் அல்லது சொல்லாமலேயே சில்லறை விற்பனை நிலையங்களில் தங்கள் மொபைல் நமபர்களை ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.
இது மார்ச் 8, 2026 அன்று சர்வதேச மகளிர் தினத்தன்று பிஎஸ்எஸ்எல் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட இந்த வசதியின் கீழ், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பெண் சந்தாதாரர்கள் எஸ்எம்எஸ் வழியாக ஒரு 10 இலக்க கவாச் நம்பரை (10 Digit Kavach Number) பெறுவார்கள்.
பின்னர் அவர்கள், அந்த கவாச் நம்பரை கொடுத்து, தங்களுடைய தனிப்பட்ட மொபைல் நம்பரை ரீசார்ஜ் செய்யலாம். அதாவது சில்லறை விற்பனை நிலையத்தில் அவர்கள் தங்களுடைய மொபைல் நம்பரை பகிர வேண்டிய அவசியம் இல்லை; கவாச் நம்பர் மற்றும் தேவையான பணத்தை மட்டுமே கொடுத்து அவர்கள் ரீசார்ஜ் செய்யலாம். ஒட்டுமொத்தமாக இது பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட மொபைல் நம்பரை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியத்தை முற்றிலுமாக நீக்குகிறது.
ஆனால் இந்த கவாச் நம்பர் ஆனது எப்படி ஒரு பெண் சந்தாதாரருக்கு எஸ்எம்எஸ் வழியாக கிடைக்கும். இதற்கென ஏதேனும் பிரத்யேக செயல்முறை இருக்கிறதா அல்லது தானாகவே எஸ்எம்எஸ் வருமா என்பதை பற்றி பிஎஸ்என்எல் நிறுவனம் எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. வெறுமனே எக்ஸ் (X) தளம் வழியாக பிஎஸ்என்எல் கவாச்சை அறிவிக்க மட்டுமே செய்துள்ளது. விரைவில் இதுகுறித்த அப்டேட் கிடைக்கலாம்.
பெரும்பாலான இந்திய குடிமக்கள், தங்கள் மொபைல் நம்பர்களை யுபிஐ (UPI) தளங்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் மொபைல் ஆப்கள் வழியாகத்தான் ரீசார்ஜ் செய்கிறார்கள் என்றாலும், மில்லியன் கணக்கான இந்தியர்கள் தங்கள் மொபைல் நம்பர்களை ரீசார்ஜ் செய்ய இன்னமும் ரீடெயில் கடைக்கு தான் செல்கிறார்கள்
ஏனெனில் அவர்கள் தொழில்நுட்ப ஆர்வலர்கள் அல்ல அல்லது தங்கள் மொபைல் நம்பரை ரீசார்ஜ் செய்ய ரொக்க பணத்தை மட்டுமே பயன்படுத்த விரும்புகிறார்கள். அவர்களுக்கு இந்த பிஎஸ்என்எல் கவாச் வசதி ஆனது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் எக்ஸ் தள பதிவில் கூறுவது போல "பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட கனெக்ஷன் உடன் இது பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும்".
Verdict: கடந்த பல மாதங்களாகவே பிஎஸ்என்எல் நிறுவனம் இதுபோன்ற சில புதுமையான தீர்வுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் வோவைஃபை காலிங் (VoWiFi Calling) அம்சமும் அடக்கம். இருந்தாலும் பிஎஸ்என்எல் கவாச் வசதி ஆனது இதுவரை நுகர்வோருக்கு வழங்கப்பட்டதிலேயே மிகவும் சிந்தனைமிக்க தீர்வுகளில் ஒன்றாகும்.
ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் யாரும் தங்களுடைய நுகர்வோருக்கு இதுபோன்ற சேவையை வழங்கவில்லை. ஆக எதிர்காலத்தில் நாட்டில் உள்ள மற்ற டெலிகாம் ஆபரேட்டர்களும் இதுபோன்ற வசதியை அறிமுகம் செய்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஆனால் முன்னரே குறிப்பிட்டப்படி பிஎஸ்என்எல் சொல்லும் "அந்த 10 இலக்க கவாச் நம்பர்" ஆனது ஒரு பெண் வாடிக்கையாளர்களுக்கு எப்படி கிடைக்கும் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டால், இன்னும் நன்றாக இருக்கும். இது எப்படி இருக்கிறது என்றால் - பிஎஸ்என்எல் ஒரு அற்புதமான புதிய ஆபரை அறிவித்துள்ளது. ஆனால் அது எந்த திட்டத்தில், என்ன ஆபர் என்பதை அறிவிக்காமல் இருப்பது போல் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








