BSNL SIM கஸ்டமர்கள் காட்டில் மழை.. மாதம் ரூ.233 போதும்.. 365 நாள் வேலிடிட்டி, டெய்லி 3GB, வாய்ஸ், SMS!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது அதன் எக்ஸ் (X) அக்கவுண்ட் ஆன பிஎஸ்என்எல் இந்தியா (BSNL India) வழியாக.. "ஒரு முழு ஆண்டுக்கும் ஒரே ஒரு ரீசார்ஜ்" என்றும், "இனி மாதாந்திர ரீசார்ஜ் செய்ய வேண்டிய சிரமம் இல்லை, மறுபடியும் மறுபடியும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை" என்றும் கூறி.. 365 நாட்கள் செல்லுபடியாகும் ஒரு திட்டத்தை விளம்பரப்படுத்தி உள்ளது.
சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த திட்டம் டெய்லி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஆக 365 நாட்களுக்கும் மொத்தமாக 1095ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். நாம் இங்கே பேசுவது ரூ.2799 ப்ரீபெய்ட் பிளானை பற்றித்தான். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் அல்லது 12 மாதங்கள் ஆகும். அதாவது இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதால், உங்களுக்கு ஏற்படும் மாதாந்திர செலவு வெறும் ரூ.233 மட்டுமே ஆகும்.

இந்த விலை - சந்தையில் உள்ள மற்ற மாதாந்திர 3ஜிபி டேட்டா பிளான்களை விட ஒப்பீட்டளவில் மலிவாகும். போதாக்குறைக்கு இது 1 ஆண்டு முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ்கள் (100SMS Per Day) ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது.
அபிப்ராயம்: இந்த திட்டம் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விரும்பாத மற்றும் மாதந்தோறும் ரீசார்ஜ் செய்ய விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு - ஒரு சூப்பரான ஆப்ஷனாக இருக்கும். கூடவே மலிவான மாதாந்திர செலவின் கீழ் தங்களுடைய பிஎஸ்என்எல் மொபைல் நம்பரை / சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள விரும்புபவர்களும் இதை தாராளமாக ரீசார்ஜ் செய்யலாம்.
மேலும் இதேபோன்ற மலிவான 365 நாள் திட்டம் ஏர்டெல் நிறுவனத்திடமும் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஏர்டெல்லின் திட்டம் பிஎஸ்என்எல்-ஐ விட மலிவான மாதாந்திர செலவையே வழங்கும். அது மாதாந்திர ரூ.155 என்கிற செலவாகும். ஏர்டெல்லின் அந்த திட்டத்தின் விலை ரூ.1849 ஆகும்,
இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும். அதாவது 12 மாதங்கள் சர்வீஸ் வேலிடிட்டியை வழங்கும், ஆக மாதாந்திர செலவு ரூ.154 ஆகும். ஆனால் எந்த டேட்டா நன்மை எதையும் வழங்காது. டேட்டா தேவை உள்ளவர்கள்,தேவைப்படும் போது கூடுதலாக டேட்டா பேக்குகளை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
சுவாரசியமாக ரூ.1849 திட்டத்தின் கீழ் ஒரு அட்டகாசமான இலவச நன்மையும் கிடைக்கிறது. அது 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்திற்கான (Adobe Express Premium) இலவச அணுகல் ஆகும். இந்த சந்தாவின் உண்மையான மதிப்பு ரூ.4,000 ஆகும். இதோடு இலவச ஹெலோட்யூன்களும் (Hellotunes) அணுக கிடைக்கும்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிடம் "இதேபோன்ற" ஆனால் சற்றே குறைந்த வேலிடிட்டி உடன் ஒரு திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. அது ரூ.1178 திட்டமாகும். இதன் வேலிடிட்டி 336 நாட்கள் ஆகும். அதாவது இது 11 மாதங்கள் செல்லுபடி ஆகும். இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்கும், ஆனால் எந்த டேட்டா நன்மையும் இருக்காது. இந்த திட்டத்துடன் 3600 எஸ்எம்எஸ் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட் சேவை அணுக கிடைக்கிறது. இது தவிர்த்து ரூ.1178 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு கூடுதலாக எந்த பெரிய சலுகையும் கிடைக்காது. ஒருவேளை உங்களுக்கு அவசர டேட்டா தேவை ஏதேனும் ஏற்பட்டால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த திட்டத்தின் மேல் ஒரு டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








