Home
News

ஒரே BSNL ரீசார்ஜ்.. 165 நாட்களுக்கு வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 24 ஜிபி டேட்டா.. 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா!

தனியார் டெலிகாம் நிறுவனங்களில் 28 நாட்கள் முதல் 365 நாட்கள் வரையில் வேலிடிட்டி கிடைக்கின்றன. இதில் 28 நாட்கள், 30 நாட்கள், 56 நாட்கள், 60 நாட்கள், 84 நாட்கள், 90 நாட்கள் போன்ற வேலிடிட்டி மட்டுமே கிடைக்கும். 180 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கலாம். ஆனால், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், 165 நாட்கள், 164 நாட்கள் போன்ற பிரத்யேக வேலிடிட்டியை வைத்துள்ளது.

இதில் 165 நாட்கள் வேலிடிட்டியுடன் பிஎஸ்என்எல் ரூ.897 திட்டம் கிடைக்கிறது. இதை மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மலிவான விலைக்கே கிடைக்கிறது. ஆகவே, டேட்டா சலுகை பெரிதாக கொடுக்கப்படவில்லை. ஆனால், டேட்டாவே இல்லை என்றும் சொல்ல முடியாது. லம்ப்-சம் டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டா சலுகைகளை கொடுத்து உள்ளது.

ஒரே BSNL ரீசார்ஜ்.. 165 நாட்களுக்கு வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்!

பிஎஸ்என்எல் ரூ.897 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள் (BSNL Rs 897 Prepaid Plan Details): 5 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி கொண்ட திட்டமாக இருக்கிறது. இதில் கிடைக்கும் 165 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்கள் (Unlimited Local & STD Calls) கிடைக்கிறது. அதேபோல சிம் ஆக்டிவ் தொடர்ந்து உறுதி செய்யப்படுகிறது.

டேட்டா சலுகையை பொறுத்தவரையில், தினசரிக்கு பயன்படுத்தும் டேட்டாவை எதிர்பார்க்க முடியாது. மொத்தமாக 24 ஜிபி டேட்டா கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டேட்டாவானது வேலிடிட்டி முழுவதுக்கும் பொருந்தும். ஆகவே, முன்கூட்டியே பயன்படுத்தி முடித்தால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை மட்டுமே பெற்று கொள்ள முடியும்.

கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், டேட்டா வவுச்சர்களுக்கு பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் செல்லலாம். மேலும், இதுபோன்ற லம்ப்-சம் டேட்டா திட்டத்தில் எஸ்எம்எஸ்களும் லம்ப்-சம் சலுகையில் கொடுக்கப்படும். ஆனால், இதில் தினசரிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, 165 நாட்கள் முழுவதும் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம்.

எப்படி பார்த்தாலும், சிம் ஆக்டிவ் மற்றும் வாய்ஸ் கால்கள் இருந்தால் போதும் என்று ப்ரீபெய்ட் திட்டங்களை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு இது பக்கா தேர்வாக இருக்கும். இதேபோல 300 நாட்கள் வேலிடிட்டியுடன் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டத்திலும் தினசரி டேட்டா கிடைக்காது. லம்ப்-சம் டேட்டா மட்டுமே கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள் (BSNL Rs 1499 Prepaid Plan Details): முந்தைய திட்டத்தில் கிடைத்தை போலவே இதிலும் அதிக வேலிடிட்டி மலிவான விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, 300 நாட்கள் வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம். அதாவது, 10 மாதங்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.

சிம் ஆக்டிவ் மலிவான விலைக்கு கிடைக்கிறது. இதில் மொத்தமாகவே 32 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த லம்ப்-சம் டேட்டாவுக்கு பிறகு முந்தைய திட்டத்தில் கிடைத்தை 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவானது, இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கும் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள் அனுப்ப கிடைக்கின்றன.

ஒருவேளை தினசரி டேட்டா வேண்டுமானால், பிஎஸ்என்எல் ரூ.1999 திட்டத்தை பெற்று கொள்ளலாம். இதில் 1.5 ஜிபி தினசரி டேட்டா கிடைக்கும். அதேபோல 330 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் & எஸ்டிடி கால்களும் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Rs 897 Prepaid Plan 24GB Data 165 Days Validity Local STD Roaming Voice Calls Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X