வீடே தியேட்டர் தான்.! ரூ.20,000 விலைப் பிரிவில் கிடைக்கும் 43-inch ஸ்மார்ட் டிவி லிஸ்ட்!

|

ஒரு வீடு என்பது முழுமை அடைவதற்கு Smart TV என்பது பிரதானமாகி விட்டது. ஸ்மார்ட்டிவிகள் பல்வேறு விலைப் பிரிவில் புதுப்புது அம்சங்களோடு அறிமுகமாகி வருகிறது. இதற்கு மத்தியில் ஸ்மார்ட்டிவிகளுக்கு ஆன்லைன் தளங்கள் தள்ளுபடிகள் அறிவித்து அதை இன்னும் மலிவு விலைகளாக மாற்றுகிறது. அதன்படியான ஒரு தள்ளுபடி விவரத்தை தான் பார்க்கப்போகிறோம்.

மேம்படுத்த சரியான நேரம்

மேம்படுத்த சரியான நேரம்

டிஜிட்டல் யுகத்தில் ஒரு வீடு என்பது முழுமை அடைவதற்கு ஸ்மார்ட்டிவி என்பது பிரதானமாகி விட்டது. சிலரின் வீடுகளில் மட்டும் தான் ஸ்மார்ட்டிவிகள் இல்லை. அதேபோல் பெரும்பாலானோர் வீட்டில் இருப்பது 32 இன்ச் ஸ்மார்ட்டிவிகள் தான் இருக்கிறது. உங்கள் வீட்டில் Smart TV இல்லை என்றாலும் சரி, 32 இன்ச் ஸ்மார்ட்டிவியை மேம்படுத்த திட்டமிட்டிருந்தாலும் சரி, அதற்கு இது சரியான நேரமாகும்.

43-inch ஸ்மார்ட்டிவி

43-inch ஸ்மார்ட்டிவி

நிறுவனங்கள் ஸ்மார்ட்டிவிகளை போட்டிப்போட்டு அறிமுகம் செய்து வரும் அதேநேரத்தில் ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டு அதற்கு சலுகைகள் வழங்கி வருகிறது. நீங்கள் சிறந்த அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்டிவிகளை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். அதன்படி அமேசான் தளத்தில் தள்ளுபடியுடன் கிடைக்கும் 43-inch ஸ்மார்ட்டிவிகளின் பட்டியலை பார்க்கலாம்.

Toshiba Smart TV

Toshiba Smart TV

Toshiba Smart TV ஆனது ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி ஆகும். 43 இன்ச் அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.34,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த டிவிக்கு 37 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்டிவியானது அமேசான் தளத்தில் ரூ.21,990 என கிடைக்கிறது. கூடுதலாக நோ காஸ்ட் இஎம்ஐ, வங்கி சலுகைகள் என பல தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

1080 பிக்சல் ஆதரவு

1080 பிக்சல் ஆதரவு

இந்த ஸ்மார்ட்டிவி ஆனது நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜீ5, ஆக்ஸிஜன் ப்ளே, ஈராஸ் நவ், ஜியோ சினிமா, சோனி லைவ் என பல ஓடிடி அணுகலைக் கொண்டிருக்கிறது. 20 வாட்ஸ் பவர்ஃபுல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி ஆடியோ, டிடிஎஸ் விர்ச்சுல் என ஏணைய ஆடியோ அவுட் அம்சங்கள் இதில் இருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 1080 பிக்சல் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Hisense Smart TV

Hisense Smart TV

Hisense Smart TV ஆனது 43 இன்ச் அளவு டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. பெசல் லெஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிஸ்ப்ளே ஆதரவு இதில் இருக்கிறது. இந்த டிவியை சுவற்றில் பொருத்தினால் சுவரில் டிவியை ஒட்டி வைத்தது போல் இருக்கும். காரணம் பெசல் லெஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜீ5, ஈராஸ் நவ், ஜியோ சினிமா, சோனி லைவ் என பல ஓடிடி அணுகல் ஆதரவை வழங்கும். 4கே தர டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது.

38 சதவீத தள்ளுபடி

38 சதவீத தள்ளுபடி

இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.44,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த டிவி 38 சதவீத தள்ளுபடியை பெற்றிருக்கிறது. அதன்படி அமேசானில் இந்த டிவி ரூ.27,990 என கிடைக்கிறது. கூடுதலாக நோ காஸ்ட் இஎம்ஐ, வங்கி சலுகை என பல தள்ளுபடிகள் கிடைக்கிறது.

TCL Smart LED TV

TCL Smart LED TV

TCL Smart LED TV ஆனது 40 இன்ச் முழு எச்டி ஆண்ட்ராய்டு ஆர் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி ஆனது ரூ.40,990க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த டிவிக்கு 54 சதவீத தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்டிவியை அமேசானில் ரூ.18,990 என வாங்கலாம். கூடுதலாக வங்கி தள்ளுபடி, நோ காஸ்ட் இஎம்ஐ என பல சலுகைகள் வழங்கப்படுகிறது.

முழு எச்டி டிஸ்ப்ளே

நெட்பிளிக்ஸ், ஜீ5, பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், யூடியூப் என பல ஓடிடி ஸ்ட்ரீமிங் தள ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி ஆனது 1080 பிக்சல் ஆதரவைக் கொண்டுள்ளது. 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய முழு எச்டி டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. 20 வாட்ஸ் அவுட்புட் ஆதரவுடனான பவர்ஃபுல் 2 ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம்பெற்றிருக்கிறது.

AmazonBasics 43 inch Smart LED Fire TV

AmazonBasics 43 inch Smart LED Fire TV

AmazonBasics 43 inch Smart LED Fire TV ஆனது ரூ.50,000க்கு கிடைத்த நிலையில் தற்போது இந்த டிவிக்கு 51 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி அமேசானில் இந்த ஸ்மார்ட்டிவியை ரூ.24,499 என வாங்கலாம். கூடுதலாக நோ காஸ்ட் இஎம்ஐ, வங்கி சலுகைகள் என பல தள்ளுபடி விருப்பங்கள் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
43-inch Smart TVs Available at Rs.20,000 Price Range in Amazon! Right Time to Update Your Smart TV

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X