ஆதார் கார்டுல அட்ரெஸ் அப்டேட் செய்ய போறவங்க உஷார்.. இந்த தப்பை செஞ்சா கேன்சல் ஆகிடும்!
ஆதார் கார்டு (Aadhaar Card) ஆனது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஒரு முதன்மையான அடையாள சான்றாக மாறி உள்ளது. அப்படிப்பட்ட ஆதார் அட்டையை, உங்களுடைய விவரங்களை (Aadhaar CardDetails) எல்லா நேரங்களிலும் புதுப்பித்த (அப்டேட் செய்யப்பட்ட) நிலையில் வைத்திருப்பது மிகவும் அவசியம்.
முன்னதாக.. ஆதார் அப்டேட் (Aadhaar Update) என்பது சற்றே நீளமான மற்றும் எரிச்சலான ஒரு வேலையாக இருந்தது. ஆனால், சமீபத்தில், யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) அறிமுகம் செய்த புதிய ஆதார் ஆப் (New Aadhaar App) ஆனது ஆதார் அப்டேட்டை மிகவும் எளிமையாக்கி உள்ளது.

ஏனென்றால்.. இந்த ஆப், ஆதார் அட்டைதாரர்களுக்கு பல வகையான டிஜிட்டல் சுய சேவை அம்சங்களை (Digital self-service features) வழங்குகிறது. இதன் மூலம் காகிதப்பணி, நீளமான க்யூ மற்றும் காத்திருப்பு நேரங்களை உள்ளடக்கிய ஆதார் பதிவு மையங்களுக்கு (Aadhaar Enrolment centers) செல்ல வேண்டிய அவசியம் முற்றிலுமாக நீங்குகிறது.
2 விஷயங்கள்: ஆதார் ஆப்பை பயன்படுத்தி நீங்களே செய்யக்கூடிய மிக முக்கியமான அப்டேட் - ஆதார் அட்டையில் உள்ள உங்களுடைய முகவரியை நீங்களே அப்டேட் செய்வது தான். புதிய ஆதார் ஆப்பில் இதை மிகவும் எளிமையாக செய்துவிட முடியும். ஆனால் அதை செய்வதற்கு முன்பாக 2 விஷயங்களை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.
ஒன்று - இந்த செயல்முறையை செய்வதற்கான 11 தகுதியாக ஆவணங்களில் ஏதேனும் 1 உங்களிடம் இருக்க வேண்டும். இரண்டாவது - சரியான ஆவணங்களை சமர்ப்பித்தாலும் கூட உங்களுடைய "முகவரி மாற்ற விண்ணப்பம்" ஆனது நிராகரிக்கப்படுதற்கான 4 காரணங்களை நீங்கள் அறிந்து இருக்க வேண்டும்.
அந்த 4 காரணங்கள் என்னென்ன? உங்களுடைய ஆதார் அட்ரெஸ் அப்டேட் கோரிக்கை ஆனது, நீங்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் அல்லது விவரங்கள் "பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை" பூர்த்தி செய்யவில்லை என்றால் நிராகரிக்கப்பட 4 பொதுவான காரணங்கள் உள்ளன:
1. பதிவேற்றப்பட்ட முகவரி சான்று அதிகாரப்பூர்வ துணை ஆவணப்பட்டியலில் (official supporting document list) பட்டியலிடப்படவில்லை என்றால் நிராகரிக்கப்படலாம்.
2. புதுப்பிப்பு கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஆதார் வைத்திருப்பவரின் பெயரில் (Name of the Aadhaar holder) ஆவணம் இல்லை என்றால் நிராகரிக்கப்படலாம்.
3. படிவத்தில் உள்ளிடப்பட்ட முகவரி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியுடன் சரியாக பொருந்தவில்லை என்றால் நிராகரிக்கப்படலாம்.
4. பதிவேற்றப்பட்ட படம் தெளிவற்றதாக, மங்கலாக, கருப்பு வெள்ளையாக அல்லது தவறாக ஸ்கேன் செய்யப்பட்டு இருந்தால் நிராகரிக்கப்படலாம். டாக்குமெண்ட் இமேஜ் ஆனது தெளிவான, கலர்டு காப்பியாக (Coloured Copy) இருக்க வேண்டும்.
ஆதார் முகவரி மாற்றத்திற்கு தேவையான ஆவணங்கள் (Documents Required For Aadhaar Address Change): ஆதார் அட்டையில் உள்ள உங்கள் முகவரியை புதுப்பிக்க, நீங்கள் செல்லுபடியாகும் முகவரி சான்றினை (Proof of Address - POA) பதிவேற்ற வேண்டும். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் 11 ஆவணங்களின் பட்டியல் இதோ:
1. பாஸ்போர்ட்
2. வங்கி பாஸ்புக் அல்லது தபால் அலுவலக கணக்கு அறிக்கை
3. ரேஷன் கார்டு
4. வாக்காளர் ஐடி
5. மாற்றுத்திறனாளி அட்டை
6. MGNREGA/NREGS வேலை அட்டை
7. மின்சார பில் (மூன்று மாதங்களுக்கு மேல் பழையதல்ல, ப்ரீபெய்ட் ரசீதுகள் உட்பட)
8. தண்ணீர் பில் (மூன்று மாதங்களுக்கு மேல் பழையதல்ல)
9. எரிவாயு இணைப்பு பில் (மூன்று மாதங்களுக்கு மேல் பழையதல்ல)
10. லேண்ட்லைன், போஸ்ட்பெய்டு மொபைல் அல்லது பிராட்பேண்ட் பில் (மூன்று மாதங்களுக்கு மேல் பழையதல்ல)
11. சொத்து வரி ரசீது (ஒரு வருடத்திற்கு மேல் பழையதல்ல)


Click it and Unblock the Notifications








