5ஜி சேவையுடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் சியோமி ஸ்மார்ட்போன்!

|

சியோமி நிறுவனம் அடுத்து அறிமுகம் செய்யப்போகும் சியோமி மி மிக்ஸ் 4 (Xiaomi Mi Mix 4) ஸ்மார்ட்போன் பற்றிய சில விபரங்கள் கசிந்துள்ளது. வலைத்தளங்களில் கசிந்துள்ள தகவலின் படி உண்மையில் இந்த புதிய சியோமி மி மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் 5ஜி சேவையுடன் அறிமுகம் செய்யப்படப்போகிறதா? உண்மை இதுதான்.

சியோமியின் 5ஜி ஸ்மார்ட்போன்

சியோமியின் 5ஜி ஸ்மார்ட்போன்

முன்னதாக சியோமி நிறுவனம், ஐரோப்பியச் சந்தைகளில் சியோமி மி மிக்ஸ் 3(Xiaomi Mi Mix 3) 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து விற்பனையைத் துவங்கியது. சியோமி நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை இந்த சியோமி மி மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சியோமி மி மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன்

புதிய சியோமி மி மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன்

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இந்த சியோமி மி மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் மாடலாக இந்த புதிய சியோமி மி மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படப்போகிறது. ஆகையால் நிச்சயம் 5ஜி சேவையுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான்: சுதந்திர தின சிறப்பு விற்பனை: டிவி முதல் வாஷிங்மெஷின் வரை அதிரடி விலைகுறைப்பு.!அமேசான்: சுதந்திர தின சிறப்பு விற்பனை: டிவி முதல் வாஷிங்மெஷின் வரை அதிரடி விலைகுறைப்பு.!

MIIT பட்டியலில் மி மிக்ஸ் 4

MIIT பட்டியலில் மி மிக்ஸ் 4

இந்த தகவல் உண்மைதானா என்ற ஆராய்ந்து பார்த்தபோது, சியோமி மி மிக்ஸ் ஸ்மார்ட்போன் உண்மையில் 5ஜி சேவையுடன் தான் களமிறங்கப் போகிறது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MIIT) 5ஜி தரச்சான்றிதழ் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

ட்ரூகாலர் குறைபாடு! 100மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளின் கதி என்ன?ட்ரூகாலர் குறைபாடு! 100மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளின் கதி என்ன?

மாடல் எண்

மாடல் எண்

இந்த ஸ்மார்ட்போன் 5ஜி தரத்திற்கான சான்றிதழைப் பெற்றதாகத் தெரிகிறது. மாடல் எண் M1908F1XE என்கிற பெயரின் கீழ் Mi Mix 4 ஆனது MIIT இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி M1908F1XE என்கிற மாடல் எண்ணுடன் MIIT பட்டியலில் இடம்பெற்றுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கூகுள் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய மாணவர்கள்! இயற்கை முறையைக் கையில் எடுத்து சாதனை! கூகுள் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய மாணவர்கள்! இயற்கை முறையைக் கையில் எடுத்து சாதனை!

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ஸ்மார்ட்போன் விலை

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ஸ்மார்ட்போன் விலை

குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் உடன் கூடிய முழு திரை டிஸ்பிளேயுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்பது முந்தைய லீக்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக 64 மெகா பிக்சல் கேமராவுடன் வெறும் ரூ.57,990 விலையில் சியோமி மி மிக்ஸ் 4 அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi mi mix 4 comes with 64 megapixel camera snapdragon 855 plus and with 5g in india for first time : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X