வாங்கிடாதீங்க.. அசல் விலையை விட ரூ.10,000 கம்மி விலைக்கு கிடைக்கும் இந்த போனை வாங்கிடாதீங்க! ஏன்?

|

இந்த ஸ்மார்ட்போன் நிச்சயம் உங்கள் ஆசையை தூண்டும். அசல் விலையை விட ரூ.10,000 குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படும் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனை (Smartphone) வாங்க வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு வந்தால்.. அந்த எண்ணத்தை உடனே கைவிட்டு விடவும்!

அதென்ன ஸ்மார்ட்போன்? அதை ஏன் வாங்க கூடாது? அந்த ஸ்மார்ட்போனிற்கு பதிலாக வேறு என்னென்ன போன்களை வாங்கலாம்? இதோ விவரங்கள்:

இது எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்?

இது எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்?

நாம் இங்கே பேசுவது சீன மொபைல் தயாரிப்பாளர் ஆன சியோமியின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனை பற்றியே ஆகும். அது சியோமி 12 ப்ரோ 5ஜி (Xiaomi 12 Pro 5G) மாடல் ஆகும்.

தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,000 என்கிற மாபெரும் தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, இந்த ஸ்மார்ட்போனின் மீதான ஆபர், நிச்சயம் உங்கள் ஆசையை தூண்டலாம். இருந்தாலும் அவசரப்பட்டு விட வேண்டாம்!

வெறும் ரூ.9449 க்கு HD TV.. 32-இன்ச், 43-இன்ச், 50-இன்ச் Xiaomi டிவிகள் மீதும் ஆபர் மழை!வெறும் ரூ.9449 க்கு HD TV.. 32-இன்ச், 43-இன்ச், 50-இன்ச் Xiaomi டிவிகள் மீதும் ஆபர் மழை!

ஏனென்றால்?

ஏனென்றால்?

ரூ.10,000 என்கிற அளவில் மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் கூட சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது "அனைத்து தேவைகளையும்" பூர்த்தி செய்யும் ஒரு மாடலாக இல்லை!

ரூ.10,000 என்கிற தள்ளுபடிக்கு முன்னர், சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256 ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.54,999 ஆகும். தற்போது இதன் விலை ரூ.44,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டும் கூட இதே சலுகையை பெற்று ரூ.58,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஏன் இந்த சலுகையை புறக்கணிக்க வேண்டும்?

ஏன் இந்த சலுகையை புறக்கணிக்க வேண்டும்?

ரூ.44,999 க்கு இறங்கி வந்தாலும் கூட சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயமானது, ஒப்பீட்டளவில் இன்னும் பெரிதாகவே உள்ளது.

எனவே சியோமி 12 ப்ரோ 5ஜி-க்கு பதிலாக.. இதை விட மிகவும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கும் கூகுள் பிக்சல் 6ஏ (Google Pixel 6a) மற்றும் ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி (OnePlus 10R 5G) போன்ற மாடல்களை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.

நினைவூட்டும் வண்ணம் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999 ஆகும் மற்றும் ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.36,999 ஆகும்.

Samsung குடியரசு தின விற்பனை: இந்த 10 போன்கள் மீதும் 61% ஆபர்.. அதுவும் ஜன.21 வரை மட்டுமே!Samsung குடியரசு தின விற்பனை: இந்த 10 போன்கள் மீதும் 61% ஆபர்.. அதுவும் ஜன.21 வரை மட்டுமே!

ஏமாற்றம் அடைய மாட்டீர்கள்.. இருந்தாலும்..?

ஏமாற்றம் அடைய மாட்டீர்கள்.. இருந்தாலும்..?

நீங்கள் ஒரு நல்ல பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், கண்டிப்பாக சியோமி 12 ப்ரோ 5ஜி மாடல் உங்களை ஏமாற்றம் அடைய செய்யாது. இது மிகவும் நேர்த்தியான வடிவமைப்புடன் வரும் ஒரு ஸ்டைல் ஆன ஸ்மார்ட்போன் ஆகும்.

குறிப்பாக நீங்களொரு கேமர் (Gamer) ஆக இருந்தால் இந்த ஸ்மார்ட்போனின் செயல்திறன் உங்களை மெய்மறந்து கேமிங் செய்ய வைக்கும்.

ஆனால், உங்களுடைய கவனம் நல்ல திறமையான கேமராக்களின் மீது இருக்கும் பட்சத்தில்.. மிகவும் 'க்ளீன்' ஆன ஆண்ட்ராய்டு எக்ஸ்பீரியன்ஸில் இருக்கும் பட்சத்தில்.. நீங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டியது கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனுக்கு தான்!

கூகுள் பிக்சல் 6ஏ போனில் அப்படி என்ன ஸ்பெஷல்?

கூகுள் பிக்சல் 6ஏ போனில் அப்படி என்ன ஸ்பெஷல்?

சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது - சந்தேகமே வேண்டாம் - கூகுள் பிக்சல் 6ஏ போனில் மிதமான அம்சங்களே உள்ளன. இருப்பினும் இது மிகவும் திறமையான கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இதில் கூகுளின் கஸ்டம் ஓஎஸ் உள்ளது. மேலும் ஒப்பீட்டளவில் இது ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போனை விட நல்ல பேட்டரி லைஃப்-ஐயும் வழங்குகிறது.

சாதனை! நாசாவால் கூட கண்டுபிடிக்க முடியாத செவ்வாய் கிரக மர்மம்.. அசால்ட் ஆக கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்!சாதனை! நாசாவால் கூட கண்டுபிடிக்க முடியாத செவ்வாய் கிரக மர்மம்.. அசால்ட் ஆக கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்!

அதெல்லாம் சரி.. ஒன்பிளஸ் 10ஆர் எப்படி?

அதெல்லாம் சரி.. ஒன்பிளஸ் 10ஆர் எப்படி?

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஒன்பிளஸ் 10ஆர், மேலே குறிப்பிட்ட இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கு இடையில் அமரும் ஒரு ஸ்மார்ட்போன் ஆகும்.

ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போனின் ரெகுலர் வேரியண்ட்டில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை நீங்கள் ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷனை வாங்கினால் உங்களுக்கு 150W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு கிடைக்கும்.

Photo Courtesy: Xiaomi, Amazon, OnePlus

Best Mobiles in India

English summary
Why You Should Avoid Buying Xiaomi 12 Pro 5G and Consider Google pixel 6a or OnePlus 10R

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X