Home
Mobile

புது 5G Phone வாங்கலயோ.. Amazon-ல் ஆபர் மழை.. Samsung-ல் ரூ.15000.. iQOO-வில் ரூ.13000.. OnePlus-ல் ரூ.2500!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் ஒரு புதிய சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. அது அமேசான் எலக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் (Amazon Electronics Premier League) விற்பனை ஆகும். இது வருகிற மார்ச் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த விற்பனையின் போது பல நிறுவனங்களின் பிரபலமான ஸ்மார்ட்போன்கள் மீது ஆபர், டிஸ்கவுண்ட் மற்றும் ப்ரைஸ் கட் கிடைக்கிறது. அவைகளில் - ஆப்பிள் ஐபோன் ஏர், சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ், ஐக்யூ 15ஆர், ஒன்பிளஸ் நோர்ட் 5, ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி மற்றும் ரெட்மி நோட் 15 ஆகிய மாடல்களின் மீதான சலுகைகள் கவனிக்கத்தக்கவைகளாக உள்ளன.

புது 5G Phone வாங்கலயோ.. Amazon-ல் ஆபர் மழை!

ஆப்பிள் ஐபோன் ஏர் (Apple iPhone Air) மீதான டீல்: அமேசானில் நடக்கும் இந்த விற்பனையின் போது ஆப்பிள் ஐபோன் ஏர் மாடல் ஆனது தன் அறிமுக விலையை விட மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த ஐபோன் மாடலின் அசல் அறிமுக விலை ரூ.1,19,900 ஆகும். ஆனால் தற்போது அமேசானில் ரூ.93,499 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.3,000 வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஆக இதை ரூ.90,499 என்கிற ஆரம்ப விலையில் கூட வாங்க வாய்ப்பு கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் (Samsung Galaxy S25 Plus) மீதான ஆபர்: சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் விற்பனையின் போது அதன் அறிமுக விலையை விட ரூ.15,000 வரை குறைவாக கிடைக்கிறது. தென் கொரிய நிறுவனத்தின் இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ.74,999 ஆரம்ப விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. வாங்குபவர்கள் கூடுதல் வங்கி சலுகைகளையும் பெறலாம்.

ஐக்யூ 15ஆர் (iQOO 15R) மீதான டிஸ்கவுண்ட்: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது இந்த அமேசான் விற்பனையின் போது கணிசமாக குறைக்கப்பட்ட விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் ரூ.53,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது ரூ.40,999 ஆரம்ப விலையில் வாங்கலாம், அதாவது ரூ.13,000 விலைக்குறைப்பை பெற்றுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 5 5ஜி (OnePlus Nord 5 5G) மீதான டீல்: ஒன்பிளஸ் நோர்ட் 5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்த அமேசான் விற்பனையின் போது அதன் அறிமுக விலையை விட ரூ.2,500 குறைவாகக் கிடைக்கிறது. இந்த போன் ரூ.34,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது அமேசானில் ரூ.32,499 ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி (Realme Narzo 90x 5G) மீதான ஆபர்: இந்த அமேசான் விற்பனையின் போது, ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆன ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி இன்னும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது அதை ரூ.12,999 க்கு வாங்கலாம், அதாவது ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கிறது.

ரெட்மி நோட் 15 (Redmi Note 15) மீதான ப்ரைஸ் கட்: மார்ச் 12 வரை நடக்கும் அமேசான் விற்பனையின் போது ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் கணிசமாக குறைக்கப்பட்ட விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.26,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் அமேசானில் தற்போது ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon New Sale Till March 12 Discount on iPhone Air iQOO 15R OnePlus Nord 5 Redmi Note 15 and more
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X