Home
Gadgets

பழைய TV காலி.. 31 சதவீத விலை குறைப்பு.. 43 இன்ச் 4K டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனத்தின் எல்இடி டிவிகள் மலிவான விலைக்கு கிடைப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் சியோமி எக்ஸ் சீரிஸ் 43 இன்ச் கூகுள் டிவி (XIAOMI X Series 43 inch Google TV) தள்ளுபடி விலைக்கு கிடைப்பதால், விற்பனையிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சியோமி எக்ஸ் சீரிஸ் 43 இன்ச் கூகுள் டிவிக்கு கிடைக்கும் தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் ளத்தில் 31 சதவீத தள்ளுபடி விலைக்கு சியோமி எக்ஸ் சீரிஸ் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (XIAOMI X Series 43 inch Ultra HD 4K LED Smart Google TV) கிடைக்கிறது. ஆகவே, ரூ.25,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,750 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது.

பழைய TV காலி.. 31 சதவீத விலை குறைப்பு.. 43 இன்ச் 4K டிவி.. எந்த மாடல்?

இந்த தள்ளுபடியுடன் ரூ.24,249 விலைக்கு வாங்கி கொள்ளலாம். ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு வழியாக இஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.3,000 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.22,99 விலைக்கு இந்த சியோமி எக்ஸ் சீரிஸ் 43 இன்ச் கூகுள் டிவி மாடலை வாங்கி கொள்ளலாம். 1 வருட வாரண்டியுடன் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

சியோமி எக்ஸ் சீரிஸ் 43 இன்ச் கூகுள் டிவி அம்சங்கள் (XIAOMI X Series 43 inch Google TV Specifications): 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த சியோமி எக்ஸ் சீரிஸ் கூகுள் டிவி கொண்டுள்ளது. 60 Hz ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் ஐ கேர் மோட் (Eye Care Mode) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், எச்டிஆர் 10 (HDR 10) கொண்டுள்ளது.

120 Hz கேம் பூஸ்டர் (Game Booster), ஃபிலிம் மேக்கர் மோட் (Film Maker Mode) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) இந்த சியோமி எக்ஸ் சீரிஸ் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு கிடைக்கிறது. மேலும், டிசிஐ பி3 வைடு கலர் காமட் (Wide Colour Gamut), 1.07 பில்லியன் கலர் டெப்த் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, நேச்சுரல் மற்றும் கிளியர் டிஸ்பிளே அவுட்புட் கிடைக்கும்.

34W சவுண்ட் அவுட்புட் கொண்ட பாக்ஸ் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இதில் டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் எக்ஸ் (DTS:X) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual:X) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், சியோமி சவுண்ட் (Xiaomi Sound) கிடைத்து உள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் கூகுள் காஸ்ட் பில்ட்-இன் (Google Cast Built-in) வருகிறது.

மேலும், கூகுள் அசிஸ்டன்ட் (Google Assitant) இந்த சியோமி எக்ஸ் சீரிஸ் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார், யூடியூப், சோனிலிவ் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஓடிடி ஆப்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கிடைக்கிறது.

2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டு உள்ளது. குவாட் கோர் ஏ55 ப்ராசஸர் கொண்ட மாடலாக இந்த சியோமி எக்ஸ் சீரிஸ் 43 இன்ச் கூகுள் டிவி உள்ளது. ஈதர்நெட், எச்டிஎம்ஐ, யுஎஸ்பி மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளது. ஏவி இன் மற்றும் ஆப்டிகல் கனெக்டிவிட்டி உள்ளது. வை-பை, ப்ளூடூத் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
XIAOMI X Series 43 inch Ultra HD 4K LED Smart Google TV Price Dropped on Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X