ஜூன் மாதம் இந்தியாவில் வெளியாகவுள்ள டாப் ஸ்மார்ட்போன்கள் இதோ!

|

கொரோனா வைரஸ் நெருக்கடி கடந்த சில மாதங்களில் உலகம் முழுவதையும் முற்றிலும் மாற்றிவிட்டது. இப்போது ஊரடங்கு விதிகளில் அதிக தளர்வுகளை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் மீண்டும் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த மாதத்தில் பல புதிய போன்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இ-காமர்ஸ் வலைத்தளங்களும் இந்தியா முழுவதும் விநியோகங்களை மீண்டும் தொடங்கியுள்ளன.


இந்தியாவில் புதிய

சாம்சங், ஒப்போ, ஹவாய், ரியல்மீ, விவோ மற்றும் பல பிராண்டுகள் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களைக் அறிமுகப்படுத்த தயாராக உள்ளன. இந்த கட்டுரையில், ஜூன் மாதத்தில் அறிமுகமாகும் அனைத்து ஸ்மார்ட்போன்கள் பற்றியும் அறிந்துகொள்வோம். எனவே மேலும் உங்கள் பொறுமையை சோதிக்காமல் ஜூன் 2020 இல் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ.

சாம்சங் கேலக்ஸி ஏ 31

சாம்சங் கேலக்ஸி ஏ 31

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ 31 மொபைல் ஜூன் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இதன் விலை இந்தியாவில் சுமார் ரூ .23,000 ஆகும். இச்சாதனம் ஆன்லைனில் பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைனில் பல்வேறு கடைகளிலும் விற்கப்படும். கேலக்ஸி ஏ 31, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புத்திறன் என்ற ஒரே மாறுபாட்டில் வர வாய்ப்புள்ளது.

ஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்!ஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்!

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்2 & எக்ஸ் 2 ப்ரோ

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்2 & எக்ஸ் 2 ப்ரோ

ஓப்போ நிறுவனம் ஏற்கனவே தனது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபைண்ட் எக்ஸ் 2 தொடரை இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையில், சரியான வெளியீட்டு தேதியை இன்னும் வெளியிடப்படவில்லை. அதேபோல விலையும் மிக ரகசியமாகவே வைத்துள்ளது ஓப்போ.

iQOO Z1 5G

iQOO Z1 5G

சமீபத்தில் சீனாவில் மீடியாடெக் நடத்திய டைமன்சிட்டி 1000+ SoC என்ற நிகழ்ச்சியில் iQOO Z1 5G போன் வெளியிடப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஜூன் மாதத்தில் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 10 OS ஐ அடிப்படையாகக் கொண்டு இந்நிறுவனத்தின் தனியுரிம iQOO UI இல் இந்த போன் இயங்குகிறது. 44W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் 2.0 வேகமான சார்ஜிங்குடன் 4500mAh பேட்டரி திறன் கொண்டது.

ஹவாய் பி40 தொடர்

ஹவாய் பி40 தொடர்

ஹவாய் பி40 மற்றும் பி 40 புரோ ஆகியவற்றை உள்ளடக்கிய ஹவாய் பி40 தொடர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வெளியே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அவை இந்த மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


6.58 அங்குல குவாட் எச்டி + குவாட்-கர்வ் ஓவர்ஃப்ளோ டிஸ்ப்ளே கொண்ட ஹவாய் பி 40 ப்ரோ 2640 x 1200 பிக்சல்கள் மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் திரை தெளிவுத்திறனை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளார்ந்த சேமிப்பு ஆகியவற்றுடன் லேட்டஸ்ட் கிரின் 990 5 ஜி சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது.

விவோ ஒய் 30

விவோ ஒய் 30

விவோ ஒய் 30 ஸ்மார்ட்போன் ஜூன் மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட்டுடன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 35 12 என்எம் செயலி மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்.டி ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை சேமிப்பை விரிவாக்க முடியும். இது ஆண்ட்ராய்டு 10 இல் ஃபன் டச் ஓஎஸ் உடன் இயங்குகிறது. மேலும் இது 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் 10W சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

ரியல்மீ எக்ஸ் 3 சூப்பர்ஜூம்

ரியல்மீ எக்ஸ் 3 சூப்பர்ஜூம்

ரியல்மீ நிறுவனம் ஏற்கனவே ரியல்மீ எக்ஸ் 3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 60 எக்ஸ் ஜூம் மற்றும் புதிய "ஸ்டாரி மோட்" உடன் எக்ஸ் 3 சூப்பர் ஜூம் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளலாக மாதவ் சேத் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்தியா ஜூன் மாத மத்தியில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என்று வதந்திகள் கூறுகின்றன.

சாம்சங் கேலக்ஸி ஏ 21எஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ 21எஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ 21 எஸ் ஸ்மார்ட்போனும் இந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 720 × 1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.5 இன்ச் எச்டி + இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே உள்ளது. இந்த மொபைல் 2 ஜிஹெர்ட்ஸ் ஆக்டா கோர் செயலி மூலம் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்புடன் இயக்கப்படுகிறது. சேமிப்பக விரிவாக்கத்திற்கு 512 ஜிபி வரை பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் உள்ளது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயங்கும் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ 21எஸ், ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஒன் யுஐ 2.0 மூலம் இயங்குகின்றன

ரெட்மீ 9

ரெட்மீ 9

இந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷியோமி இந்தியா வலைத்தளத்தின் ஆர்எஃப் வெளிப்பாடு பிரிவில் இந்த தொலைபேசி ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ளது. வதந்திகளின் அடிப்படையில், ரெட்மி 9 6.53 அங்குல முழு எச்டி + ஐபிஎஸ் டிஸ்ப்ளே 2400 x 1080 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் இடம்பெறும். இந்த ஸ்மார்ட்போன் மாலி-ஜி 52 ஜி.பீ.யுடன் மீடியா டெக் ஹீலியோ ஜி 70 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை சேமிப்புதிறனை விரிவாக்கக்கூடிய இந்த மொபைல் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளார்ந்த சேமிப்புடன் வெளியாகும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Top Smartphones launching in India in June 2020 And More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X