Samsung: திடீர்னு ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்!

|

மிகவும் பிரபலமான சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது "மொத்தமாக" ரூ.15,000 விலைக்குறைப்பு (Price Cut) கிடைப்பதால், குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை திடீரென்று சூடுபிடித்துள்ளது. அதென்ன போன்? ஏன் இந்த திடீர் விலைக்குறைப்பு? இதோ விவரங்கள்:

அதென்ன ஸ்மார்ட்போன்?

நாம் இங்கே பேசுவது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 (Samsung Galaxy S22) மாடலை பற்றியே ஆகும். தற்போது இந்த ஸ்மார்ட்போனின் மீது மொத்தமாக ரூ.15,000 விலைக்குறைப்பு அணுக கிடைக்கிறது.

Samsung: ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் போன்!

முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.10,000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது மேலும் ரூ.5,000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம் சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனின் மீது இப்போது "மொத்தமாக" ரூ.15,000 விலைக்குறைப்பு அணுக கிடைக்கிறது.

Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!

பழைய விலை VS புதிய விலை:

முதல் விலைக் குறைப்பிற்கு பின்னர், சாம்சங் கேலக்ஸி எ22 ஸ்மார்ட்போனின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.62,999 க்கும், 256ஜிபி ஆப்ஷன் ரூ.66,999 க்கும் விற்கப்பட்டது. தற்போது இந்த 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விலையும் ரூ.5,000 குறைந்துள்ளது.

ஆகையால், தற்போது 128ஜிபி வேரியண்ட் ரூ.57,999 க்கும், அதே சமயம் 256ஜிபி வேரியண்ட் ரூ.61,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஃபாண்டம் ஒயிட், ஃபாண்டம் பிளாக், போரா பர்பிள் மற்றும் கிரீன் என மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களின் வாங்க கிடைக்கும்.

புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!

ஏன் இந்த திடீர் விலைக்குறைப்பு?

வழக்கமான காரணம் தான்! கேலக்ஸி எஸ்22 மீதான இந்த திடீர் விலைக்குறைப்பிற்கு, கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23) சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகமே முக்கிய காரணம் ஆகும்.

Samsung: ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் போன்!

அதாவது எஸ் சீரிஸின் கீழ் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதால், பழைய எஸ் சீரீஸ் மாடல் மீது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரீஸ் எப்போது அறிமுகமாகும்?

சாம்சங் நிறுவனம் அதன் புதிய எஸ்23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த சீரீஸின் கீழ் கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23), கேலக்ஸி எஸ்23 பிளஸ் (Samsung Galaxy S23 Plus) மற்றும் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra) என மொத்தம் மூன்று மாடல்கள் அறிமுகமாகும்!

ரூ.57,999 க்கு சாம்சங் கேலக்ஸி எஸ்22 வொர்த்-ஆ?

கண்டிப்பாக வொர்த் தான்! ஏனென்றால் புதிய எஸ்23 சீரீஸ் மாடல்கள் அறிமுகமாகிறது என்கிற ஒரே காரணத்தில் கேலக்ஸி எஸ்22 ஒரு மொக்கையான ஸ்மார்ட்போனாகி விடாது. இது இன்னமும் ஒரு தரமான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் தான்!

நல்ல மாசம் பொறக்குது.. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 17 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ ஃபுல் லிஸ்ட்!நல்ல மாசம் பொறக்குது.. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 17 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ ஃபுல் லிஸ்ட்!

சாம்சங் கேலக்ஸி எஸ்22-ன் முக்கிய அம்சங்கள்:

- 6.1 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட்
- 128ஜிபி மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ

Samsung: ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் போன்!

- ட்ரிபிள் ரியர் கேமரா
- 50எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 10MP டெலிஃபோட்டோ லென்ஸ்
- தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு ஐபி68 சான்றிதழ்

- 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- 3,700mAh பேட்டரி.

Best Mobiles in India

English summary
Second price cut on Samsung Galaxy S22 ahead S23 series India launch On 1st February 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X