போச்சு.. முன்னாடியே வாங்கி இருக்கலாம்.. ஒரே நேரத்தில் 6 Samsung போன்களின் விலை திடீர் உயர்வு!
சாம்சங் (Samsung) நிறுவனம், அதன் பல வகையான கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின்விலைகளை உயர்த்தி (Smartphone Price Hike) உள்ளதாக கூறப்படுகிறது. அதிகரிக்கப்பட்ட (திருத்தப்பட்ட) விலை நிர்ணயம் ஆனது கடந்த மார்ச் 5 ஆம் தேதி முதலே அமலுக்கு வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த திடீர் விலை உயர்வு, சாம்சங்கின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை மட்டுமின்றி கேலக்ஸி எம்36 (Galaxy M36), கேலக்ஸி எப்36 (Galaxy F36) மற்றும் கேலக்ஸி எம்17 5ஜி (Galaxy M17 5G) உள்ளிட்ட மிட்-ரேன்ஜ் மாடல்களின் விலைகளை உயர்த்தி உள்ளது.

சாம்சங்கின் இந்த விலை திருத்தம் குறித்த தகவல் டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ்விடம் (Tipster Abhishek Yadav) இருந்து வருகிறது. இவர் பல சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கான புதுப்பிக்கப்பட்ட விலை விவரங்களை பட்டியலிடும் புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ளார். அதன்படி கேலக்ஸி எம்36 மாடலின் விலையில் தான் மிதமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது கேலக்ஸி எம்36 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.21,999 ஆகும். இது முன்பை விட ரூ.500 அதிகமாகும். இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.1500 விலை உயர்வை பெற்று ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஆக சாம்சங் கேலக்ஸி எம்36 ஸ்மார்ட்போன் இப்போது முற்றிலும் வேறுபட்ட விலை பிரிவில் உள்ளது, ஏனெனில் இது முன்பு ரூ.20,000 க்கும் குறைவான குறைவாக இருந்தது. இப்போது ரூ.20000 க்கு மேலான பட்ஜெட்டிற்கு நகர்ந்துவிட்டது. இதே போன்ற திருத்தம் கேலக்ஸி எப்36 மீதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கேலக்ஸி எப்36 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் இப்போது ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது ரூ.500 விலை உயர்வை குறிக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை இப்போது ரூ.25,999 ஆக அதிகரித்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் இது முந்தைய விலையை விட ரூ.1,500 அதிகமாகும்.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்17 5ஜி ஸ்மார்ட்போனும் விலையையும் உயர்த்தியுள்ளது. தற்போது 6ஜிபி + 128ஜிபி ஆப்ஷனின் விலை இப்போது ரூ.16,499 ஆக உள்ளது. இது ரூ.500 அதிகமாகும், அதே நேரத்தில் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷனும் விலை இப்போது ரூ.18,499 ஆக உள்ளது, இது ரூ.1,000 அதிகரிப்பை குறிக்கிறது.
சாம்சங்கின் பட்ஜெட் சீரீஸில் உள்ள பிற மாடல்களும் விலை மாற்றங்களைக் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. கேலக்ஸி எஃப்17 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,000 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போனின் விலை அதன் ஸ்டோரேஜ் ஆப்ஷனை பொறுத்து ரூ.3,000 வரை அதிகரிக்கக்கூடும். இதற்கிடையில், கேலக்ஸி ஏ06 5ஜி மாடலின் விலை ரூ.1,500 வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
Verdict: கடந்த சில மாதங்களாகவே, அதிகரித்து வரும் கூறு செலவுகள் காரணமாக புதிய மற்றும் ஏற்கனவே உள்ள ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்த்தப்படுவது சகஜமாகி விட்டது. அந்த வரிசையில் சாம்சங் அதன் ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தி இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
மேலும் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அதன் ஸ்மார்ட்போன்களின் விலைகளை திருத்தியது இது முதல் முறை அல்ல. ஏனெனில் இந்நிறுவனம் முன்னதாக கேலக்ஸி எப்36, கேலக்ஸி ஏ36 மற்றும் கேலக்ஸி எப்17 5ஜி போன்ற மாடல்களின் விலைகளையும் உயர்த்தியி இருந்தது.


Click it and Unblock the Notifications