Home
Mobile

டேப்லெட் கதை முடிஞ்சது.. 7.5-இன்ச் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்.. எந்த கம்பெனி மாடல்னு சொன்னா நம்புவீங்களா?

ஒரு புதிய லீக், லெனோவா (Lenovo) நிறுவனமானது அதன் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களுக்காக சில அசாதாரண ஹார்ட்வேரை சோதித்து கொண்டிருக்கலாம் என்பதை குறிக்கிறது. நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக கிடைத்துள்ள தகவலின்படி, லெனோவா தற்போது அதன் அடுத்த போன்களுக்காக 200 மெகாபிக்சல் லார்ஜ் சென்சார் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவை (200-megapixel large-sensor periscope telephoto camera) சோதித்து வருகிறது.

கூடவே லெனோவா நிறுவனம் 1.5கே எல்சிடி பேனலில் (1.5K LCD Panel) வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, லெனோவா நிறுவனம் வேறுபட்ட சில விஷயங்களை ஆராய்ந்து வருவதாக தெரிகிறது. இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, லெனோவா நிறுவனம் 7.5-இன்ச் அளவிலான வைட் ஆன, பிளாட் ஆன டிஸ்பிளேவை (7.5-inch Wide and Flat Display) சோதிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

டேப்லெட் கதை முடிஞ்சது.. 7.5-இன்ச் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்!

7.5-இன்ச் டிஸ்பிளே வொர்க் அவுட் ஆகுமா? இந்த அளவிலான டிஸ்பிளே - டிவைஸை ஒரு பாரம்பரியமான ஸ்மார்ட்போனுக்கும், ஒரு சிறிய டேப்லெட்டுக்கும் (Small Tablet) இடையில் எங்காவது வைக்கும். இப்போதைக்கு லெனோவா நிறுவனம் "இன்னும் கொஞ்சம்" பெரிய டிஸ்பிளேக்களை விரும்பும் பயனர்களுக்காக ஒரு புதிய வகை அல்லது ஒரு ஸ்பெஷல் டிவைஸை பரிசோதித்து கொண்டிருக்கலாம் என்று எடுத்துக்கொள்வது நலல்து.

இந்த இடத்தில் ஸ்மார்ட்போன் சந்தையில் (Smartphone Market) லெனோவாவின் நிலையையும் நாம் பார்க்க வேண்டும். குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 (Qualcomm Snapdragon 870) மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 (Qualcomm Snapdragon 888) போன்ற சிப்செட்களால் இயக்கப்படும் ஸ்மார்ட்போன்கள் 2021 ஆம் ஆண்டில் "வலுவான" மற்றும் "மதிப்பு மிக்க" மாடல்களாக கருதப்பட்டன. ஆனால் 2026 அப்படி இல்லை.

"விலை நிர்ணயம்" அடிப்படையில் ரியல்மி (Realme) மற்றும் ரெட்மி (Redmi) போன்ற நிறுவனங்கள் உடன் போட்டியிட லெனோவா போராடுகிறது என்பதே உண்மை; இப்போதைய நிலவரம். மேற்குறிப்பிட்ட பிராண்டுகளின் தீவிரமான விலை நிர்ணயம் லெனோவாவிற்கு நடுத்தர அளவிலான சந்தையை மிகவும் கடினமாக்கி உள்ளது.

ஆக எப்படி பார்த்தாலும் 7.5-இன்ச் டிஸ்பிளே, 200 மெகாபிக்சல் லார்ஜ் சென்சார் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகிய அம்சங்கள் எல்லாமே "சராசரி" ஆகவே பார்க்கப்படும். இதுபோன்ற புதிய வடிவமைப்புகளை வெகுஜன உற்பத்திக்கு (Mass Production) கொண்டு வருவதற்கு உறுதியான நடவடிக்கைகள் தேவை; ஆனால் அது லெனோவா நிறுவனத்திடம் இருக்குமா என்பது தான் கேள்வி!

இப்போதைக்கு லெனோவா நிறுவனம் டேப்லெட் மற்றும் லேப்டாப்களில் அதிக கவனம் செலுத்துவதே அந்நிறுவனத்திற்கு நல்லது. லெனோவா தொடர்புடைய மற்ற அப்டேட்களை பொறுத்தவரை, லெனோவாவின் துணை பிராண்ட் ஆன மோட்டோரோலா எம்டபுள்யூசி 2026 (MWC 2026) நிகழ்வில், அதன் அதன் முதல் புக் ஸ்டைல் போல்டபிள் ஸ்மார்ட்போனை (Book Style foldable Smartphone) வெளியிட்டது.

மோட்டோரோலா ரேஸர் போல்ட் (Motorola Razr Fold) ஸ்மார்ட்போன் ஆனது 8.1-இன்ச் 2கே எல்டிபிஓ இன்னர் டிஸ்பிளே மற்றும் 6.6-இன்ச் இன்னர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Gen 5) மொபைல் பிளாட்ஃபார்மால் இயக்கப்படுகிறது. இதில் மூன்று 50-மெகாபிக்சல் கேமராக்கள் உள்ளன. கூடவே இது மோட்டோ பென் அல்ட்ரா ஸ்டைலஸை (Moto Pen Ultra Stylus) ஆதரவையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Reportedly working on 7.5 inch display smartphone Would place between smartphone and small tablet
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X