Home
Mobile

POCO போட்றா வெடிய.. 8500mAh பேட்டரி, 100W சார்ஜிங், 50MP SONY கேமராவுடன் புது 5G போன்.. மார்ச் 17 கச்சேரி!

போக்கோ (POCO) நிறுவனம் ஆனது இந்திய சந்தையில், 8500mAh பேட்டரி உடனான ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. அது போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (POCO X8 Pro Max) மாடல் ஆகும். இது போக்கோ எக்ஸ்8 ப்ரோ மாடலுடன் சேர்ந்து அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போக்கோ நிறுவனம் அதன் போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் சரியான வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்காத நிலையில், நேற்று - இவைகள் மார்ச் 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்கிற லீக்ஸ் வெளியானது. ஆனால் இன்று - இவைகள் மார்ச் 17 ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற லீக்ஸ் கிடைத்துள்ளது.

POCO.. 8500mAh பேட்டரி, 100W சார்ஜிங் உடன் புது 5G போன்!

தொழில்துறையு சார்ந்த ஒருவரின் கூற்றுப்படி, போக்கோ எக்ஸ்8 ப்ரோ மற்றும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் மார்ச் 17, 2026 அன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்படலாம். வரவிருக்கும் போக்கோ மாடல்கள், முன்னதாக சீனாவில் அறிமுகமான ரெட்மி டர்போ 5 மற்றும் ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அடிப்படையாக கொண்டிருக்கும் (அதாவது ரீபிராண்டட் வெர்ஷன்களாக இருக்கும்) என்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள்: போக்கோ நிறுவனம் பகிர்ந்துள்ள ஒரு டீஸர், போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது மீடியாடெக் (MediaTek) நிறுவனத்தின் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா ( Dimensity 8500 Ultra) மற்றும் டைமன்சிட்டி 9500எஸ் (Dimensity 9500s) சிப்களில் இயங்கும் என்பதை உறுதி செய்துள்ளது.

ஆனாலும் போக்கோ நிறுவனம் இன்னும் சரியான மாடல் பெயர்களை உறுதிப்படுத்தவில்லை. ஆகையால் எந்த மாடலில் எந்த சிப்செட் இடம்பெறும் என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.பெரும்பாலும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மாடல் ஆனது டைமன்சிட்டி 8500 அல்ட்ரா சிப்பை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது டைமன்சிட்டி 9500எஸ் கொண்டு இயங்கலாம்.

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6500mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் மாடலானது 9000mAh யூனிட்டை கொண்டிருக்கலாம்; சில முந்தைய அறிக்கைகள் இது 8,500mAh உடன் அறிமுகம் செய்யப்படலாம் என்று பரிந்துரைப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு நாம் 8500mAh உடனேயே ஒட்டிக்கொள்வோம்.

போக்கோ எக்ஸ்8 ப்ரோ மாடலில் 6.59-இன்ச் OLED டிஸ்பிளே இடம்பெறலாம். அதே நேரத்தில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் மாடலானது சற்றே பெரிய 6.83-இன்ச் பேனலுடன் வரலாம். இரண்டு டிஸ்பிளேக்களும் 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ரியர் கேமராக்கள் ஒரே மாதிரியாக - 8MP அல்ட்ராவைடு லென்ஸுடன் இணைக்கப்பட்ட ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் 50MP ப்ரைமரி கேமரா இருக்கலாம். செல்பீ கேமராக்கள் வேறுபடலாம், ப்ரோ மாடலில் 20MP செல்பீ கேமரா இடம்பெறலாம், ப்ரோ மேக்ஸ் மாடலில் 32MP சென்சார் இடம்பெறலாம். இந்த சீரீஸ் 12GB வரை LPDDR5x ரேம் மற்றும் 512GB UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை ஸ்மார்ட்ப்ரைஸ் அறிக்கையின்படி போக்கோ எக்ஸ்8 ப்ரோ மாடலானது ரூ.45,990 க்கும், போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் மாடலானது ரூ.59,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco X8 Pro Max with 8500mAh Battery Along With Poco X8 Pro India Launch Tipped on March 17
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X