எங்களுக்கு பிப்.1 தான் நியூ இயர்.. செம்ம குஷியில் Samsung ரசிகர்கள்.. என்ன சமாச்சாரம்?

|

"எங்களுக்கு வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதிதான் புத்தாண்டு!" என்று கூறும் அளவிற்கு சாம்சங் (Samsung) ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது.

அதென்ன குட் நியூஸ்? குறிப்பிட்ட நாளில் என்ன ஸ்பெஷல்? இதோ விவரங்கள்:

சாம்சங் நிறுவனத்தின் முதல் ஈவென்ட்!

சாம்சங் நிறுவனத்தின் முதல் ஈவென்ட்!

சாம்சங் நிறுவனம், 2023 ஆம் ஆண்டிற்கான தனது முதல் அறிமுக நிகழ்வை (First Launch Event) அறிவித்துள்ளது. அதாவது சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி அன்பேக்டு 2023 (Galaxy Unpacked 2023) நிகழ்விற்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, சாம்சங் நிறுவனத்தின் இந்த அறிமுக நிகழ்வு வருகிற பிப்ரவரி 1, 2023 அன்று நடக்க உள்ளது. இது குறித்த அறிவிப்பில் - "கேலக்ஸி கண்டுபிடிப்புகளின் புதிய சகாப்தம் வருகிறது" என்று சாம்சங் நிறுவனம் கூறி உள்ளது.

ஆணியே புடுங்க வேணாம்! BSNL-ன் திடீர் அறிவிப்பு.. கடுப்பான கஸ்டமர்ஸ்.. வேற நெட்வொர்க்கிற்கு ஜம்ப்?ஆணியே புடுங்க வேணாம்! BSNL-ன் திடீர் அறிவிப்பு.. கடுப்பான கஸ்டமர்ஸ்.. வேற நெட்வொர்க்கிற்கு ஜம்ப்?

பிப்ரவரி 1-ல் என்னென்ன அறிமுகமாகும்?

பிப்ரவரி 1-ல் என்னென்ன அறிமுகமாகும்?

கேலக்ஸி அன்பேக்டு 2023 நிகழ்வின் போது, கேலக்ஸி எஸ் 23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்பதை சாம்சங் நிறுவனம் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும் கூட, குறிப்போட்ட நாளில் கண்டிப்பாக கேலக்ஸி எஸ் 23 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும்.

வழக்கம் போல இம்முறையும் கேலக்ஸி எஸ் 23 சீரிஸின் கீழ் 3 மாடல்கள் வரும், அவைகள் கேலக்ஸி எஸ் 23, கேலக்ஸி எஸ் 23 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா ஆகும்.

கேலக்ஸி எஸ்23 சீரீஸ்: எது பொதுவாக இருக்கும்.. எது வேறுபாடும்?

கேலக்ஸி எஸ்23 சீரீஸ்: எது பொதுவாக இருக்கும்.. எது வேறுபாடும்?

பொதுவான விஷயத்தை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரீஸின் கீழ் அறிமுகமாகும் 3 மாடல்களுமே குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசசர் (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) மூலம் இயக்கப்படும்.

மிகவும் கவனிக்கப்பட வேண்டிய / வேறுபடுகின்ற விஷயத்தை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா மாடலின் ரியர் கேமரா செட்டப்பில் 200MP மெயின் கேமரா இடம்பெறும்; முன்பக்கத்தில் 12MP செல்பீ கேமரா இருக்கும்.

ஆசையை தூண்டும் விலை.. ஆர்டர் போட வைக்கும் ஸ்பெக்ஸ்! ஜன.18-ல் அறிமுகமாகும் 2 மாஸ் ஆன 5G போன்கள்!ஆசையை தூண்டும் விலை.. ஆர்டர் போட வைக்கும் ஸ்பெக்ஸ்! ஜன.18-ல் அறிமுகமாகும் 2 மாஸ் ஆன 5G போன்கள்!

கேலக்ஸி எஸ்23 மற்றும் எஸ்23 பிளஸ்: முக்கிய அம்சங்கள்

கேலக்ஸி எஸ்23 மற்றும் எஸ்23 பிளஸ்: முக்கிய அம்சங்கள்

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போன் ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடனான 6.1-இன்ச் அளவிலான ஃபுல் எச்டி+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். மேலும் இந்த ஸ்மாட்போன் 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 3,900mAh பேட்டரியை பேக் செய்யும்.

அடுத்ததாக உள்ள கேலக்ஸி எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை பெறும். மேலும் 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,700mAh பேட்டரியையும் கொண்டிருக்கும்.

கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா: முக்கிய அம்சங்கள்

கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா: முக்கிய அம்சங்கள்

இந்த சீரிஸின் பிரீமியம் வேரியண்ட் ஆன கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் அளவிலான டைனமிக் கர்வ்டு AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். இதுவும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்கும்.

கேமராக்களை பொறுத்தவரை, அல்ட்ராவில் 200MP மெயின் சென்சார் + 3x ஆப்டிகல் ஜூம் உடனான 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் + 10x ஆப்டிகல் ஜூம் உடனான 10MP டெலிஃபோட்டோ கேமரா + 12MP அல்ட்ராவைடு கேமரா என்கிற குவாட் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரியை பேக் செய்யும்.

Best Mobiles in India

English summary
Samsung Revealed The Date Of Next Galaxy Unpacked Event Galaxy S23 Series Launch on February 1 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X