மொத்த போனையும் ஓரங்கட்டும் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23: விலை என்ன தெரியுமா?

|

சாம்சங் கேலக்ஸி எஸ்23, எஸ்23 ப்ளஸ் மற்றும் எஸ்23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாவதற்கு முன்னதாகவே அதன் விலை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டவர்களை காக்க வைக்கும் வகையில் இந்த தகவல் இருக்கிறது.

Samsung Galaxy S23 சீரிஸ்

சமீபகாலமாகவே Samsung Galaxy S23 சீரிஸ் குறித்த தகவல் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது. ஒவ்வொரு தகவலும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் வகையில் இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென்2 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மொத்த போனையும் ஓரங்கட்டும் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23: விலை இதோ!

2023 பெஸ்ட் ஸ்மார்ட்போன்

2023 இல் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 க்கு பிரதான இடம் இருக்கிறது. இந்த சீரிஸ் இல் மூன்று மாடல்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி நடக்க இருக்கும் கேலக்ஸி அன்பேக்ட் நிகழ்வில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி எஸ்23 சீரிஸ் இல் கேலக்ஸி எஸ்23, கேலக்ஸி எஸ்23 ப்ளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா என மூன்றும் மாடல்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கிறது.

Samsung Galaxy S23 இந்திய விலை என்ன?

அதன்படி Samsung Galaxy S23, Samsung Galaxy S23+ மற்றும் Samsung Galaxy S23 Ultra ஆகிய மாடல்களின் இந்திய விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ட்விட்டரில் நோ நேம் (@chunvn8888) என்ற பயனர் வெளியிட்டுள்ள தகவலின்படி, கேலக்ஸி S23 மாடலின் அடிப்படை மாடல் விலை ரூ.79,999 ஆக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டதாக இருக்கலாம். அதேபோல் சாம்சங் கேலக்ஸி S23+ இன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.89,999 எனவும் Samsung Galaxy S23 Ultra மாடலின் விலை ரூ.1,14,999 எனவும் நிர்ணயிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த போனையும் ஓரங்கட்டும் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23: விலை இதோ!

புதிய சாம்சங் ஸ்மார்ட்போனானது பாண்டம் பிளாக், காட்டன் ஃப்ளவர், பொட்டானிக் க்ரீன் மற்றும் மிஸ்டி லிலாக் ஆகிய நான்கு வண்ண விருப்பங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியான பிற தகவல்களை பார்க்கலாம்.

ஆப்பிள் உள்ளிட்ட ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டி ரெடி

ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு என புகழ் பெற்ற நிறுவனம் சாம்சங் ஆகும். கடந்த ஆண்டு ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக அறிமுகமான ஐபோன் 14க்கு போட்டியாக இது இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதேநேரத்தில் பல நிறுவனங்களின் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 கடுமையான போட்டியை ஏற்படுத்த இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

சாம்சங் கேலக்ஸி எஸ்23 அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடனான 6.1 இன்ச் ஃபுல் எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கும் என்றும் இதில் 25 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 3900 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் கேலக்ஸி எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்றும் 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,700mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

200எம்பி கேமரா ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் இல் ப்ரீமியம் மாடலாக இருக்கும் ஸ்23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் அளவிலான டைனமிக் கர்வ்டு AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இதன் கேமரா அம்சங்களை பொறுத்தவரை, இதன் அல்ட்ரா மாடலில் 200 எம்பி பிரதான கேமரா இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S23 to Launch Soon as the Best Smartphone in 2023: Do you know the Indian price?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X