போட்டான் பாரு அமேசான்.. ரூ.8000 கூட இல்ல.. மட்ட ரேட்ல 2 ஸ்மார்ட்போன்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் நடக்கும் அமேசான் எலக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் விற்பனை 2026 (Amazon Electronics Premier League Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையில் ரூ.8,000 பட்ஜெட்டைவிட கம்மியான விலைக்கு லாவா போல்டு என்2 (Lava Bold N2) மற்றும் டெக்னோ பாப் எக்ஸ் (TECNO Pop X) ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. இந்த மாடல்களின் விலை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
அமேசான் எலக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் விற்பனையானது, மார்ச் 12ஆம் தேதி வரையில் நடக்கிறது. சாம்சங், ஆப்பிள் போன்ற பிரீமியம் மாடல்கள் தொடங்கி, லாவா, டெக்னோ போன்ற பட்ஜெட் விலை மாடல்கள் வரையில் தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. இதில் ரூ.8,000 பட்ஜெட்டில் ஸ்மார்ட்போனை தேடிக் கொண்டிருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த 2 ஆப்ஷன்கள் பக்காவாக இருக்கும்.

லாவா போல்டு என்2 விலை, அம்சங்கள் (Lava Bold N2 Price Specifications): 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.7,499ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.209 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இன்டஸ் பிளாக் (Indus Black) மற்றும் சியாச்சின் ஒயிட் (Siachen White) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ள கிடைக்கிறது.
எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கிடைத்து உள்ளது. ஆண்ட்ராய்டு 15 கோ (Android 15 Go) ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் எஸ்சி9863ஏ (Octa Core UNISOC SC9863A) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது.
10W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரியை இந்த லாவா போல்டு என்2 ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கிடைத்து உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) இந்த போனுக்கு கிடைக்கிறது. சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) உள்ளது.
டெக்னோ பாப் எக்ஸ் விலை, அம்சங்கள் (TECNO Pop X Price Specifications): 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 8,499ஆக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.750 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ,7,749 விலைக்கு வாங்கி கொள்ளலாம். ஆலிவ் கிரீன் (Olive Green) மற்றும் பியர்லெசென்ட் ஒயிட் (Pearlescent White) ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கிறது.

120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.75 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி7250 12என்எம் (Octa Core UNISOC T7250 12nm) சிப்செட் உள்ளது. ஹாய்ஓஎஸ் 15 (HiOS 15) மற்றும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.
13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமராவை இந்த டெக்னோ பாப் எக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொண்டுள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) மற்றும் சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Facing Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications