Home
Mobile

அறிமுகமானது புதிய Honor 5ஜி போன்.. 6520mAh பேட்டரி.. 108எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

ஹானர் நிறுவனம் புதிய ஹானர் 600 லைட் (Honor 600 Lite) ஸ்மார்ட்போன் மாடலை தற்போது உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சஙகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் ஹானர் 600 லைட் போன் ஆனது கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஹானர் 600 லைட் அம்சங்கள் (Honor 600 Lite Specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த ஹானர் எக்ஸ்6டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,200×2,600 பிக்சல்ஸ், 3840Hz PWM டிம்மிங், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 800 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அறிமுகமானது புதிய Honor 5ஜி போன்.. 6520mAh பேட்டரி.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7100 எலைட் சிப்செட் (MediaTek Dimensity 7100 Elite chipset) உடன் ஹானர் 600 லைட் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதுவும் இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

மாலி - ஜி610 எம்சி2 ஜிபியு (Mali-G610 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த ஹானர் 600 லைட் ஸ்மார்ட்போனில் உள்ளன. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி வசதி உள்ளது. மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

108எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஹானர் 600 லைட் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6520எம்ஏஎச் பேட்டரி உடன் ஹானர் 600 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி ஹானர் 600 லைட் ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)உடன் இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

5ஜி, வைஃபை, ப்ளூடூத் 6.0, ஜிபிஎஸ், பெய்டோ (BeiDou), குளோனாஸ் (GLONASS, கலிலியோ (Galileo), என்எப்சி, ஓடிஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 180 கிராம் ஆகும்.

தற்போது மலேசியாவில் இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஹானர் 600 லைட் ஸ்மார்ட்போனின் விலை MYR 1,299 (இந்திய மதிப்பில் ரூ.30,000) உள்ளது. டெசர்ட் கோல்ட் மற்றும் வெல்வெட் கிரே நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 600 Lite 5G with 108MP Camera launched in global markets: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X