Just In
- 5 hrs ago
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- 5 hrs ago
வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?
- 6 hrs ago
உங்களிடம் பழைய போன் இருக்கிறதா? தூசித் தட்டி எடுக்க நேரம் வந்துருச்சு! விஷயம் தெரியுமா?
- 6 hrs ago
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
Don't Miss
- News
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா.. 9வது இடத்தை பிடித்தது
- Movies
AK 62 அப்டேட்: விக்கிக்காக சமரசம் பேசினாரா நயன்..? ஆனாலும் லைகா கொடுத்த ரெட் சிக்னல்
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
48எம்பி கேமரா வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்த கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன்.! விமர்சனம்.!
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஒப்போ,விவோ, நோக்கியா போன்ற நிறுவனங்களை விட சிறந்த மென்பொருள் மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது சாம்சங் நிறுவனம்.

கேலக்ஸி எம்12
அண்மையில் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த சாதனம் சிறந்த மென்பொருள் வசதி மற்றும் அசத்தலான கேமராக்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இன்பினிட்டி வி டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி இன்பினிட்டி வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். எனவே திரைப்படம், ஆப் வசதி போன்ற அனைத்தையும் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த
ஸ்மார்ட்போன். குறிப்பாக டிஎப்டி இன்பினிட்டி வி டிஸ்பிளே என்பதால் தனித்துவமான திரை அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட்
இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 (One UI Core) இயங்குதளத்தைஅடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இந்த சிப்செட் வசதி ஆப் வசதிகளை இயக்குவதற்கும், வீடியோ கேம் தடையின்றி விளையாடுவதற்கும் அருமையாக உதவும். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பல்வேறு புதிய வசதிகள் இந்தஸ்மார்ட்போனில் கிடைக்கும். அதாவது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை விட அதிகமான அம்சங்கள் இந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் உள்ளது.

48எம்பி பிரைமரி சென்சார்
சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+5எம்பி செகன்டரி சென்சார்+ 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். பட்ஜெட் விலைக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனில் கேமராக்கள் இடம்பெறுள்ளது என்றுதான் கூறவேண்டும். அதிலும் 48எம்பி கேமரா இவற்றுள் இருப்பதால் இரவு நேரங்களில் கூட மிகத் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். அதேபோல் வீடியோ கால் பேச இந்த ஸ்மார்ட்போனில் கச்சிதமான 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி மற்றம் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 1 TB வரை நீங்கள் ஸ்டோரேஜ்ஜை நீடிக்க முடியும்.

6000 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளதால் அதிக நேரம் இணையம், வீடியோ கேம், ஆப் வசதி என அனைத்தையும் இயக்க முடியும்.

இந்த புதிய போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.10,999 விலையிலும், இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடல் ரூ. 13,499 விலையிலும் அட்ராக்ட்டிவ் பிளாக், எலகண்ட் ப்ளூ மற்றும் ட்ரெண்டி எமெர்லண்ட் கிரீன் ஆகிய வண்ண விருப்பங்களில் வருகிறது. அண்மையில் எல்ஜி நிறுவனம் இதேபோன்ற தனித்துவமான அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம்செய்தது, அதற்கு போட்டியாக தான் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470