Home
Deal of the day

விஸ்வரூப விற்பனை.. மட்ட ரேட்ல Samsung 5G போன்.. 6000mAh பேட்டரி.. 25W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் லெதர் பேக் பேனல் கொண்ட மாடலாக களமிறங்கிய சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி (Samsung Galaxy F70e 5G) ஸ்மார்ட்போன் நம்ப முடியாத கம்மி விலைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது, தள்ளுபடி போக மேலும் விற்பனை சூடுபிடித்துள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.

இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டுக்கு 23 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.12,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.11,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

விஸ்வரூப விற்பனை.. மட்ட ரேட்ல Samsung 5G போன்.. 6000mAh பேட்டரி!

சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F70e 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. இந்த சிப்செட்டில் 12 5ஜி பேண்ட்களின் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்து உள்ளது. 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த அடிமட்ட பட்ஜெட் விலையிலும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஒன் யுஐ 8.0 (One UI 8.0) மற்றும் ஆண்ட்ராய்டு அப்டேட்டில் மிரளவிட்டுள்ளது. ஏனென்றால், லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் போக மேலும் 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை பெற்று கொள்ளலாம். அதேபோல 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. மேலும், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் உள்ளது.

மலிவான விலைக்கு கிடைப்பதால், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) மற்றும் டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கிடைத்து உள்ளது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது.

இந்த பேட்டரியுடன் 8.2 எம்எம் தடிமன் மற்றும் 199 கிராம் எடை கொடுத்து உள்ளது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. 5ஜி சிப்செட்டை கொடுப்பதால், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), வை-பை 801.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டிகளை கொடுத்து உள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் க்நாக்ஸ் வால்ட் (Samsung Knox Vault) இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட் போக 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. லைம்லைட் கிரீன் (Limelight Green), ஸ்பாட்லைட் ப்ளூ (Spotlight Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F70e 5G With 4GB RAM 23 Percent Discount on Flipkart Available Under Rs 12000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X