Home
Mobile

மொத்த இந்தியாவும் எதிர்பார்த்த Samsung 5ஜி போன் வருகிறது.. 45W சார்ஜிங்.. IP67 ரேட்டிங்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி (Samsung Galaxy A57 5G) ஸ்மார்ட்போனை இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் அறிமுகம் செய்யும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த புதிய போனின் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு ஓஸ் விவரங்கள் வெளியாகி உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A57 5G Specifications): சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 1680 (Exynos 1680) சிப்செட் உடன் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

மொத்த இந்தியாவும் எதிர்பார்த்த Samsung 5ஜி போன் வருகிறது.. எந்த மாடல்?

One UI 8.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 6 அல்லது 7 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

6.7-இன்ச் சூப்பர் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

இந்த புது சாம்சங் போனில் Xclipse 550 GPU கிராபிக்ஸ் ஆதரவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) ஆதரவு இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளது. 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவும் இதில் உள்ளது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்படும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 6.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளன. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A57 5G Leak Suggests Exynos Chip, 50MP Camera, Android 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X