Home
Gadgets

புது AC, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க சரியான நேரம்.. மார்ச் 22 வரை ரூ.20000 தள்ளுபடி.. Samsung செஞ்சிட்டான்!

சாம்சங் (Samsung) நிறுவனம் 2026 ஹோலி பண்டிகையை தனது வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து கொண்டாடும் நோக்கத்தின் கீழ் 'ஹோலி ஹை' (Holi Hai) என்கிற தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இதன் கீழ் சாம்சங் நிறுவனத்தின் பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் உள்ளிட்ட பல வீட்டு உபயோக பொருட்களின் மீது ஸ்கவுண்ட் கிடைக்கிறது

சாம்சங் ஹோலி ஹை சலுகைகள் ஆனது வருகிற மார்ச் 22 ஆம் தேதி வரையிலாக சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், முன்னணி இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களின் வழியாக அணுக கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 22 வரை ரூ.20000 தள்ளுபடி.. Samsung செஞ்சிட்டான்!

சாம்சங்கின் இந்த ஹோலி ஹை விற்பனையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங் பெஸ்போக் ஏஐ குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் மைக்ரோவேவ் ஓவன்களின் மீது வாடிக்கையாளர்கள் ரூ.20,000 வரை கேஷ்பேக் பெறலாம் என்று சாம்சங் அறிவித்துள்ளது, பொதுவான தள்ளுபடிகளைத் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் ஜீரோ டவுன் பேமென்ட் விருப்பங்களுடன் ஸ்பெஷல் '1 இஎம்ஐ டிஸ்கவுண்ட்' நன்மையையும் சாம்சங் நிறுவனம் வழங்குகிறது.

சாம்சங்கின் இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர் கண்டிஷனர்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் இலவச ஏசி நிறுவல் மற்றும் ஐந்து வருட விரிவான உத்தரவாதத்தையும் பெறலாம். இதோடு பல்வேறு வகையான பெஸ்போக் ஏஐ டிவைஸ்களில் கேஷ்பேக் மற்றும் பைனான்ஸ் சலுகைகளும் கிடைக்கின்றன.

நினைவூட்டும் வண்ணம் கடந்த 2026 ஜனவரியில் தான், சாம்சங் தனது புதிய பெஸ்போக் ஏஐ ஏர் கண்டிஷனர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் ஆரம்ப விலை ரூ.32,490 ஆகும். இந்த சீரிஸ் பிக்ஸ்பி, அமேசான் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் போன்ற வாய்ஸ் அசிஸ்டென்ட்களை ஆதரிக்கிறது, இது ஹேண்ட்ஸ்-ஃப்ரீ செயல்பாட்டை அனுமதிக்கிறது. இந்த மாடல்கள் ஏஐ ஃபாஸ்ட் கூலிங் மற்றும் விண்ட்ஃப்ரீ கூலிங் பிளஸ் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களையும் வழங்குகின்றன.

மேலும் பயனர்கள் ஸ்மார்ட் திங்ஸ் ஆப் மூலம் ஏர் கண்டிஷனர்களை தொலைவிலிருந்தும் கட்டுப்படுத்தலாம். இதில் குவிக் ரிமோட், மேப் வியூ, வெல்கம் மற்றும் அவே கேர் போன்ற அம்சங்களும் இதில் உள்ளன. அவை ஸ்மார்ட் திங்ஸ் ஹோம் கேர் சேவையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.

மேலும் இந்த வசதி டிவைஸ்கள் அவற்றின் செயல்திறனை கண்காணிக்கவும், கேஸ் ஷார்ட்டேஜ் அல்லது பில்டர் சுத்தம் தேவைகள் போன்ற அசாதாரணங்களை கண்டறியவும், பயனர்களுக்கு உடனடி அறிவிப்புகளை அனுப்பவும் உதவுகிறது. ஏஐ அடிப்படையிலான டயகனசிஸ் (AI-based diagnosis) ஆல் ஆதரிக்கப்படும் இந்த சேவை, யூசேஜ் பேட்டர்ன்-ஐ காட்டுகிறது மற்றும் ஆக்சஸெரீஸ்கள் மாற்ற வேண்டியிருக்கும் போது பயனர்களை எச்சரிக்கவும் செய்கிறது.

மற்ற தயாரிப்புகளின் மீதான, இதுபோன்ற ஆபர்கள் ஒருபக்கம் இருக்க சாம்சங் நிறுவனம் சைலன்ட் ஆக அதன் ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தவுள்ளது இந்த மார்ச் மாதத்தில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளின் விலைகள் உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு, உறுதி செய்யப்பட்டு விட்டதாக டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் கூறுகிறார்.

ஆனால் சாம்சங் நிறுவனம் (தற்போது வரை; இந்த கட்டுரையை எழுதும் வரை) அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதையும் வெளியிடவில்லை. மேலும் எந்தெந்த மாடல்களின் விலைகள் எவ்வளவு விலை உயரும் என்கிற விவரங்களையும் வெளியிடவில்லை. இது திடீரெனெ நடக்கவில்லைஎன்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கடந்த பல மாதங்களாக நிலவும் - காம்போனென்ட் விலைகள் (Component costs) அதிகரிப்பும், நினைவக விநியோக சிக்கல்களும் (Memory supply issues) தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Holi Hai 2026 Sale Cashback on Bespoke AI AC Refrigerator Washing machine Till March 22
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X