48 எம்பி கேமரா., 6 ஜிபி ரேம்: Samsung Galaxy A31 ஜுன் முதல் வாரத்தில் அறிமுகம்? விலை?

|

48 எம்பி பிரதான கேமரா, 6 ஜிபி ரேம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ 31 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜுன் முதல் வாரத்தில் அறிமுகமாக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு இதன் எதிர்பார்க்கப்படும் விலை விவரங்கள் குறித்தும் பார்க்கலாம்.

கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன்

கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஜுன் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,000 ஆக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் பிளாக், ப்ளூ, ரெட் மற்றும் ப்ரிஸம் வைட் போன்ற நிறங்களில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 10

ஆண்ட்ராய்டு 10

இந்த ஸ்மார்ட்போன் மாடலானது மீடியாடெக் ஹீலியோ பி65 சிப்செட் ஆதரவோடு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக பயன்படுத்தி உபயோகிப்பதற்கு அருமையாக இருக்கும் வகையில் வடிவைக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் மாடல்

கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் மாடல்

இந்த ஸ்மார்ட்போனில் 6.4-இன்ச் முழு ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்பிளே வடிவமைப்பு இது உள்ளது. இந்த டிஸ்பிளே ஸ்மார்ட்போனை பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த சாதனமானது 1080x2400 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

உள்ளடக்க மெமரி வசதி

உள்ளடக்க மெமரி வசதி

இந்த ஸ்மார்ட்போனானது 4ஜிபி மற்றும் 6 ஜிபி ஆகிய இரண்டுவகை ரேம் வசதியோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு விற்பனைக்கு வர உள்ளது. அதுமட்டுமின்றி கூடுதல் மெமரி நீட்டிப்பு வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என குறிப்பிடத்தக்கது.

கணவர் சென்ற இடத்தை காட்டிக்கொடுத்த Google Maps - மனைவியிடம் சிக்கியது எப்படி தெரியுமா?கணவர் சென்ற இடத்தை காட்டிக்கொடுத்த Google Maps - மனைவியிடம் சிக்கியது எப்படி தெரியுமா?

48எம்பி பிரைமரி கேமரா

48எம்பி பிரைமரி கேமரா

இந்த ஸ்மார்ட்போனில் 48எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ராடு வைடு ஆங்கிள் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளது என்பது இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 25 எம்பி செல்பி கேமராவும் உள்ளது.

கூடுதல் சிறப்பம்சங்கள்

கூடுதல் சிறப்பம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார், இன்ஃராரெட் சென்சார் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதோடு 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைபை, புளூடூத் 5 உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A31 launched in India in the first week of June specification, price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X