Home
Deal of the day

OPPO சேல் தெறிக்குது.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங்.. 50MP SONY சென்சார் கேமரா.. எந்த மாடல்?

ஓப்போ பிரியர்கள் மட்டுமல்லாமல், அதிக பேட்டரி கேபாசிட்டியை விரும்பும் ஸ்மார்ட்போன் பிரியர்களும் அடித்து பிடித்து ஆர்டர் போடும்படியான தள்ளுபடி விலைக்கு ஓப்போ கே13 5ஜி (OPPO K13 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 7000mAh பேட்டரி போக, சோனி சென்சார் கேமரா, அமோலெட் டிஸ்பிளே போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது.

பெரிய பேட்டரி மட்டுமல்லாமல், 5700 எம்எம் வேப்பர் சேம்பர் (Vapor Chamber) மற்றும் 6000 எம்எம் கிராஃபைட் சீட் கூலிங் போன்ற ஹீட் கன்ட்ரோல் பீச்சர்களையும் இந்த ஓப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 8 ஜிபி விர்ச்சுவல் ரேமுடன் பர்ஃபாமென்ஸ் என்ஹான்ஸ் செய்யப்பட்டு உள்ளது. ஏஐ பீச்சர்களுடன் கலர்ஓஎஸ் 15 கொடுக்கப்பட்டு உள்ளது.

OPPO சேல் தெறிக்குது.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங்.. மாடல்?

ஏஐ லிங்ஸ் பூஸ்ட் 2.0 (AI LinkBoost 2.0) சப்போர்ட் கொண்ட நெட்வொர்க் என்ஹான்ஸ்மெண்ட் தொடங்கி ஏஐ கிளாரிட்டி என்ஹான்சர் (AI Clarity Enhancer), ஏஐ அன்பிளர் (AI Unblur), ஏஐ ரெஃப்ளெக்சன் ரீமூவர் (AI Reflection Remover) உள்ளிட்ட ஏஐ கேமரா பீச்சர்களும் கொடுத்து உள்ளது. 2 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்டை கொடுத்து உள்ளது.

மேலும், 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் கொடுத்து இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 21 சதவீத தள்ளுபடி போக 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.17,999 விலைக்கு வாங்க முடியும். கூடுதலாக ரூ.900 தள்ளுபடி தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கிடைக்கிறது.

ஆகவே, ரூ.17,099 விலைக்கு இந்த ஓப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். ஐசி பர்பிள் (Icy Purple) மற்றும் ப்ரிசம் பிளாக் (Prism Black) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ள கிடைக்கிறது. இதில் ஐசி பர்பிள் வேரியண்ட்டின் பேக் பேனலில் ப்ளோட்டிங் கியூப் போல டெக்ச்சர் கிடைத்து உள்ளது. இப்போது, முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ கே13 5ஜி அம்சங்கள் (OPPO K13 5G Specifications): ஓம்னிவிஷன் ஓவி50டி40 சென்சாருடன் 50 எம்பி ரியர் கேமரா மற்றும் ஓம்னிவிஷன் ஓவி02பி1பி சென்சாருடன் 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி (Optical Image Stabilization Technology) கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டில் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 4 4nm) சிப்செட்டை கொடுத்து இருக்கிறது. இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்து உள்ளது. கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கொண்ட ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உள்ளது.

6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைத்து உள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு வழக்கமாக கிடைக்கும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 7000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கொடுக்கப்பட்டு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K13 5G 50MP Sony IMX480 Sensor Camera Available At 21 Percent Discount Check Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X