செல்லமே எப்படியாவது சீக்கிரம் வந்திடு.. 50MP கேமரா.. 45W சார்ஜிங்.. புது Samsung 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போனை இந்த மாதம் அல்லது அடுத்த ஏப்ரல் மாதம் துவக்கத்தில் அறிமுகம் செய்யும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த புதிய போனின் சிப்செட், ஆண்ட்ராய்டு ஓஎஸ் விவரங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A37 5G Specifications): சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 1480 (Exynos 1480) சிப்செட் உடன் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

அதுவும் One UI 8.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 6 அல்லது 7 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
6.7-இன்ச் Super AMOLED டிஸ்பிளே வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
இந்த புது சாம்சங் போனில் Xclipse 550 GPU கிராபிக்ஸ் ஆதரவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) ஆதரவு இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளது. 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவும் இதில் உள்ளது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
புதிய சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்படும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவும் இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
அதேபோல் 5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 6.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக கேலக்ஸி ஏ37 5ஜி போன் பட்ஜெட் விலையில் வெளியாகும். அதுவும் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications