Home
Mobile

எப்புட்றா.. இன்னும் விற்பனைக்கு வராத புது Samsung போன்கள்.. SWIGGY Instamart, Blinkit-ல் 30 நிமிட டெலிவரி!

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரிஸ் (Samsung Galaxy S26 Series) மாடல்கள் ஆனது வருகிற மார்ச் 11 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஓப்பன் சேலுக்கு (Open sale) வர உள்ளன.

இந்த சீரீஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்26 (Samsung Galaxy S26), சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் (Samsung Galaxy S26 Plus) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) என மொத்தம் 3 மாடல்கள் விற்பனைக்கு வர உள்ளன.

எப்புட்றா.. விற்பனைக்கு வராத புது Samsung போன்கள்.. 30 நிமிட டெலிவரி!

இதற்கிடையில், பிளிங்கிட் மற்றும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் போன்ற குவிக்-காமர்ஸ் ஆப்களின் வழியாகவும் இந்த ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு தளங்களும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனை பட்டியலிட்டு விற்பனை செய்து வருகின்றன.

பெங்களூரு, டெல்லி என்சிஆர், ஹைதராபாத் மற்றும் மும்பையில் அதன் ஆப்பின் வழியாக கேலக்ஸி எஸ்26 சீரீஸ் வாங்க கிடைக்கும் என்று கடந்த வாரம் பிளிங்கிட் அறிவித்து இருந்தது. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில், பேஸிக் கேலக்ஸி எஸ்26 டெல்லியின் சில பகுதிகளில் ஆர்டர் செய்ய கிடைத்தது. அல்ட்ரா மாடல் கையிருப்பில் இல்லை என்றாலும், டெல்லியின் சில பகுதிகளில் 30 நிமிடங்களுக்குள் பிளிங்கிட் எஸ்26 மாடலை டெலிவரி செய்தது.

சுவாரஸ்யமாக, இந்தியாவில் கேலக்ஸி எஸ்26 சீரீஸ்-க்கான ப்ரீ-ஆர்டர்களை சாம்சங் இன்னும் எடுத்து வருகிறது. ப்ரீ-ஆர்டர்கள் இன்று (மார்ச் 10 முதல்) மூடப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் 11 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட ஆஃப்லைன் கடைகள் மற்றும் முக்கிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக இந்த போன்கள் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.1,39,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.1,59,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹைஎண்ட் 16ஜிபி ரேம் + 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,89,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் கோபால்ட் வயலட், ஒயிட், பிளாக் மற்றும் ஸ்கை ப்ளூ ஆகிய நான்கு கலர்களில் கிடைக்கும். சாம்சங்.காம் (Samsung.com) வழியாக பிங்க் கோல்ட் மற்றும் சில்வர் ஷேடோ கலர்களிலும் வாங்க கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ராவின் முக்கிய அம்சங்கள்: இது பில்ட்-இன் ப்ரைவஸி டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.9-இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே ஆகும். சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) ஆல் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் குவாட்-ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 2எக்ஸ் ஆப்டிகல் தர ஜூம் கொண்ட 200எம்பி வைட் ஆங்கிள் கேமரா, 50எம்பி அல்ட்ரா-வைட், 5எக்ஸ் ​​ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி டெலிஃபோட்டோ (10எக்ஸ் ஆப்டிகல் தர ஜூம்) மற்றும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 10எம்பி டெலிஃபோட்டோ ஆகியவைகளை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 12எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை இது 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஆனால் வயர்டு சார்ஜிங் 60W ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இணக்கமான அடாப்டரை பயன்படுத்தி சுமார் 30 நிமிடங்களில் 75% வரை சார்ஜ் செய்ய முடியும் என்று சாம்சங் கூறுகிறது. கூடவே இது வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேரையும் ஆதரிக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S26 Series available in Swiggy Instamart Blinkit Ahead India Open Sale on March 11
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X